This gallery contains 1 photo.
கோமரம் நாஞ்சில் நாடன்
ரம்யா வாசுதேவன்
This gallery contains 1 photo.
பேசும் புதியசக்தி தீபாவளி மலர் நாஞ்சில் நாடன் காலையில் வெந்தயக் கொழுக்கட்டை அவித்திருந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. மாவரைத்துப் பிடித்துக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுப்பதல்ல வெந்தயக் கொழுக்கட்டை. இட்டிலிச் சட்டுவத்தில் வைத்து அவித்து எடுப்பது, சுடச்சுட, நல்லெண்ணெய் விட்டுப் புரட்டிய தோசை மிளகாய்ப்பொடி தொட்டுக் கொண்டு ஆர்வமாக ஏழெட்டுத் தின்ற பிறகும் எழுந்து கை … Continue reading
This gallery contains 3 photos.
நாஞ்சில் நாடன் ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இருந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் … Continue reading
கதை சொல்லி: மாலதி சிவா அந்தப் பக்கம் நாடக சீசன். வருக்கை சக்கைப் பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், செங்கை வருக்கை மாம்பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், வெள்ளரிக்காய்க்கு ஒரு சீசன் இருப்பது போல், நாடகங்களுக் கான சீசன் அது. எல்லா ஊர்களிலும் சரித்திர சமூக நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. யார் … Continue reading
This gallery contains 1 photo.
வல் விருந்து வாசு பாலாஜி நாஞ்சில் நாடனை முதலில் எப்போது வாசித்தேன் என்பது நினைவில் இல்லை. வாழ்க்கைச் சுழலில் முங்காமல் முழுகாமல் ‘மிதவை ’ பற்றி நீந்தி ‘சதுரங்க குதிரையில்’ ஏறி ‘எட்டுத் திக்கும் மதயானைகளை’ வீழ்த்தி ஆசுவாசமாகி திரும்ப நாஞ்சில் நாடனை கண்டடைந்தபோது வருடங்கள் ஓடியிருந்தன. புத்தகக் கண்காட்சியில் முதன் முறையாக வாங்கிய … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, ஊதியூதி, நான்கு அகப்பை அதிகமாகவே குடித்த களைப்பில் இருந்தார். தோய்ந்த கலவி முடிந்த களிப்பும் சோர்வும் தெரிந்தது முகத்தில். ‘கலவியாம், முயக்கமாம், புணர்ச்சியாம், உவப்பாம்… … Continue reading
This gallery contains 10 photos.
உண்டால் அம்ம! நாஞ்சில் நாடன் வெறுங்காலுடன் நடப்பது கூசியது. வாழ்க்கையில் முதல் முறை செருப்புப் போட்டதே கல்லூரிக்குப் புறப்பட்ட முதல் நாளில்தான். புதுச்செருப்பு கடிக்கவும் செய்தது. அதுவரை செருப்பு இல்லாமலேதான் ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை வாசித்தது. ஆற்றங்கரை, குளத்தங்கரை, வயல் வரப்புகள், திரடுகள், பொத்தைகள், குன்றுகள் என அலைந்தது. நான்காண்டுகள் பம்பாய் … Continue reading
This gallery contains 1 photo.
தெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப்பாட்டா.கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர், அவர் பெயரைத் தென்கிரி முத்து எனத் திருத்துவார்.கிரி எனில் மலை என உரையும் எழுதுவார். எடுத்துக்காட்டாகக் கைலயங்கிரி, சிவகிரி, என்று மேற்கோள் காட்டுவார். தென்கிரி … Continue reading
This gallery contains 1 photo.
Kmkarthi Knவாசிப்பை நேசிப்போம் #Reading_Marathon_2020_75 ID #RM091 Book no:- 40/75 நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு:- ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ் சொல்லுவதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் எத்தனை எளிதான சொல்லாக இருக்கிறது இந்த சிறுகதை எனும் சொல். ஆனால் செயலில் இவைகள் கண்ணிவெடியைப் போன்றவை. அவைகளைத் தீண்டாத வரையிலும் அவைகள் வெடிப்பதேயில்லை. அதிலும் … Continue reading
This gallery contains 1 photo.
கொத்தமல்லி, மிளகாய் வத்தல், நெற்றுத் தேங்காய்த் துருவல் எல்லாம் வறுத்து, நல்ல மிளகு, காயம், கடுகு, ஓமம், பூண்டு, சின்ன உள்ளி, கருவேப்பிலை, சுக்கு எல்லாம் வெதுப்பி, தனித்தனியாக அரைத்து குழம்பு கூட்டிவைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, புளி ஊற்றாமல், மொளவச்சம் வைக்கலாம் என்ற கணக்கில் வாசல் படிப்புரையில் உட்கார்ந்து உள்ளியும் பூண்டும் உரித்துக் … Continue reading
This gallery contains 7 photos.
அவயான் பொந்து நாஞ்சில் நாடன் “கன்னி மூலையிலே அவயாம் பறிச்சு பெரும் பொடையாக் கெடக்கு” என்று புலுபுலுத்தபடி வந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. அவர் கையில் ஓல்ட் மாங்க் ரம் நிறத்தில் கட்டன் சாயா இருந்தது. சற்றே சாய்வான சூரல் நாற்காலியில், சபரிமலை ஐயப்ப சாஸ்தா அமரும் ஆசனம் போட்டு உட்கார்ந்திருந்தார் கும்பமுனி. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் … Continue reading
This gallery contains 4 photos.
கறங்கு எனும் சொல்லை அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, சிறுபாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, புறநானூறு, மலைபடுகடாம் முதலாய சங்க இலக்கிய நூல்கள் பயன்படுத்தியுள்ளன. எனவே கறங்கு எனுமிந்த தலைப்புச் சொல் வட்டார வழக்கென்று பேராசிரியர்கள் வரையறுக்க மாட்டார்கள். மேலும் எனது உருவாக்கமும் அல்ல.
This gallery contains 5 photos.
கேரளம் பெருமிதத்துடன் பலாப்பழத்தை தனது அதிகாரப்பூர்வமான பழம் என்கிறது. நாமும் சொல்லலாம் வாழையை. ஆனால் அத்தகு யோசனைகள் தோன்ற நமக்கெல்லாம் நேரம் எங்கே? வேண்டுமானால் பெரும்பாலும் பிரதான கட்சித் தலைவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்தின் பல்வகை மதுபானங்களை டாஸ்மாக் மூலம் விநியோகிக்கப்படுவதை நமது அதிகாரப்பூர்வமான பானம் என்பார்கள். மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் நமது அதிகாரப்பூர்வமான உணவு … Continue reading
This gallery contains 12 photos.
யானை லொத்தி நாஞ்சில் நாடன் ——————— பிரம்மாண்டமான கல்யாணம். பிரம்மாண்டம் என்பதற்கு என்ன அளவு? எத்தனை கன அடி? பிரம்மாண்டமான கூட்டம், பிரம்மாண்டமான படம், பிரம்மாண்டமான ஊழல். பெரிய என்று கொள்ளலாமா? எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும்? எருமையை விட யானை பெரிது எனில், யானை பார்த்திராதவனுக்கு உத்தேசமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்.. … Continue reading
This gallery contains 5 photos.
கேரளத்தில் வரிசை தாண்டுவது என்பதோ, வெளிப்படையாகக் கைக்கூலி கொடுப்பது என்பதோ சாத்தியமில்லை. தமிழ்நாடு என்றால் எல்லமே வெளிப்படை. “ஒம்மாண அம்மாச்சா நிர்வாணம்” என்று சொல்லிவிடலாம். நாளிதழ்களுக்கு அறிக்கை கொடுக்கலாம், “நிரூபிக்க முடியுமா?” என்று பலரும் காண, அலுவலக மேசை மீதே பணக்கட்டுகளை வைக்கலாம். எவன் கேட்க இருக்கிறான்? எவன் எந்த ரோமத்தைப் பிடுங்கிவிட இயலும்? (…நாஞ்சில் … Continue reading
This gallery contains 7 photos.
கும்பமுனி அரசியல், கலை இலக்கியம், உலக நடப்புகள் என எல்லாவற்றையும் அதிரடியாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். அதற்க்கு எதிர்வினைபோல தன்னை விமர்சிக்கவும் தவசிப்பிள்ளையை தாராளமாக அனுமதிக்கிறார். கும்பமுனியை இயக்கும் “ரிமோட்” நாஞ்சி நாடனிடம் இருக்கிறது. தன்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றவற்றைக் கூடுவிட்டு கூடுபாய்ந்து கும்பமுனிக்குள் ஏறிநின்று அவர் பேசுகின்றார் என்றே நான் கருதுகிறேன் (… கீரனூர் ஜாகிர்ராஜா) உயிரெழுத்து(டிசம்பர் … Continue reading
This gallery contains 1 photo.
சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ? சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் … Continue reading
This gallery contains 6 photos.
பக்கத்து ஊர் வி.ஓ.விடம் விண்ணப்பம் போயிற்று. அவருக்குத் தெரியும் கும்பமுனி சள்ளை பிடித்த எழுத்தாளர் என்று. தலைத்தட்டு வரை பிடி உள்ளவர் என்பதும் தெரியும். மேலும் எங்காவது நேர்காணலில் வில்லங்கமாகப் பேசிவைத்து அது மாவட்ட ஆட்சியாளர் கவனத்துக்குப் போய், களியந்தட்டு விளைக்கு மாற்றல் செய்தால் என்னவென்று எங்கு சென்று முறையிடுவது? மறுபடி ஒரு இடமாற்றத்துக்கு சந்தை … Continue reading
This gallery contains 8 photos.
“எதையும் மொறயாச் செய்யணும் வே! நமக்கு எதுக்கு அரசாங்கத்து பொல்லாப்பு? ஏற்கெனவே நம்ம யோக்யதை கேள்விக்கு உள்ளாயாச்சு. நாளைக்கு எவனும் அறச்சீற்றம் கொண்டு முகநூல்ல எழுதுவான்… கனிமப் பொருள் களவாண்ட கும்பமுனி என்று… அதுக்கும் ஆயிரம் பேரு சொந்த பேரை ஒளிச்சு வச்சுக்கிட்டு லைக் போடுவான்…” தொடரும்….