Tag Archives: நாஞ்சில்நாடன் கருத்துகள்

‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’

This gallery contains 1 photo.

“வட்டார வழக்கு என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது  யாரென தேடிக்கொண்டிருக்கிறேன். வட்டார வழக்கு என்ற சொல்லை கெட்டவார்த்தைத் தனமான பிரயோகமென நினைக்கிறேன்” என்று கி.ரா விருது வழங்கும் நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கூறினார். விஜயா வாசகர் வட்டம் முன்னெடுப்பில் கி.ரா விருது- 2020 நிகழ்ச்சி எழுத்தாளர் கி.ரா.வின் 98-வது பிறந்தநாளான நேற்று (16.09.2020) நடைபெற்றது. இதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி

This gallery contains 1 photo.

..

More Galleries | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு வரி… ஒரு நெறி! ‘சிவன் சொத்து குல நாசம்!’

நாஞ்சில் நாடன் http://www.vikatan.com/juniorvikatan/2017-may-10/serial/130995-one-line-one-principle-nanjil-nadan.html சிவன் கோயிலில் தொழுது வலம் வருவோர், சற்று நேரம் கோயில் பிராகாரத்தில் அமர்ந்து எழுந்து செல்வார்கள். எழும்போது, உட்கார்ந்த உடைப் பிரதேசத்தை சற்றுத் தட்டிவிட்டுப் போவார்கள். ‘தூசு தட்டுகிறார்கள்’ என்றுதான் நினைப்போம். ஆனால், சிவன் கோயிலின் சிறு மண்கூட உடலோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடக் கூடாதாம். ஏனெனில், ‘சிவன் சொத்து குல … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மனிதம்தான் எல்லாமும்

This gallery contains 3 photos.

நான் எதிலும் ஒரு ஒழுங்கை, நேர்த்தியை எதிர்பார்ப்பவன். அது காய்கறிகளை நறுக்குவதாக இருந்தாலும் சரி, துணி துவைத்து உலர வைப்பதாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் அதே நேர்த்தியை கடைபிடிப்பவன். நூல் வாசிப்பு இல்லாத நாள் எனக்கு கிடையாது. இப்படிப்பட்ட குணங்களோடு நான் இருப்பதால், என்னைப்பார்த்தே வளர்ந்த என் குழந்தைகளும் இப்பண்புகளை தங்களது இயல்புகளாக்கிக் கொண்டனர். அது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் நாஞ்சில் நாடன் உரை

This gallery contains 1 photo.

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் நாஞ்சில் நாடன் உரை (ஆமருவி தேவநாதன்). ‘எழுத்தாளன் வாழ்வில் புத்தக வெளியீடு என்பது மாபெரும் கொண்டாட்டம்,’ என்று துவங்கினார் நாஞ்சில் நாடன் இன்றைய வாசகர் வட்ட ஆண்டு விழாவில். தனது 42 நூல்களில் இரண்டே வெளியீட்டு விழா கண்டவை என்று சொன்னவர் பின்னர் ‘தமிழும் அதன் சொற்களும்’ என்கிற பொருளில் ஆழ்ந்த உரை … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

எழுத்தாளன் என்பவன்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் வீட்டு வாசலில் வரும் குறு வியாபாரிகளிடம் சில பொருட்கள் வாங்குவோம். பெரும்பாலும் குடியிருக்கும் பகுதிக்கு பக்கத்துத் தோட்டங்களில் விளையும் காய்கறிகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, காட்டுக்கீரை, பண்ணைக்கீரை, பீர்க்கன் காய், அரசாணிக்காய் என்கிற பரங்கிக்காய் எனப்படுகிற பூசணிக்காய் என ஆங்கு. சில சமயம் கூம்பு போல் உருண்டு திரண்ட மரவள்ளி எனப்படும் மரச்சீனி. பொருள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அராஜகம்

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் அராஜகம் எனும் சொல், ‘ராஜ்யம்’, ‘ராஜகம்’ எனும் சொற்களின் எதிர்மறைப் பிறப்பு. ‘ஒரு தேசமானது அரசியல் அற்றிருத்தல்’ என்று பொருள் தருகிறது பேரகராதி. அதாவது, அரசியலே நடக்கவில்லை, அரசாட்சி நடக்கவில்லை என்பது பொருள். அரசாட்சி என்றால் ‘அறம் பிறழாத நல்ல ஆட்சி’ என பொருள்படும். ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்கிறது சிலப்பதிகாரம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வி ஐ பி

This gallery contains 5 photos.

நாஞ்சில் நாடன் வி.ஐ.பி. என்றொரு சொல்லுண்டு புழக்கத்தில். நான் உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனத்தைச் சொல்லவில்லை. Very Important Person என்பதன் சுருக்கமான VIP பற்றிப் பேச முனைகிறேன். Important Person என்று மட்டுமே அல்ல, Very Important Person என்பது. அதாவது, மிக முக்கியமான மனிதர்; அல்லது அதி முக்கியமான மனிதர். அது ஆணாகவோ, பெண்ணாகவோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பதவியில் இருப்பவனே சகிப்புதன்மை அற்றவனாகிறான்

This gallery contains 2 photos.

ச. மோகனப்பிரியா தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் மா.காமுத்துரை எழுதிய ‘புழுதிச்சூடு’ என்ற நூல் வெளியீட்டு விழாவிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேனி வந்திருந்தார். அவரிடம் சில முன்வைத்தோம். சகிப்புத்தன்மை குறித்து எழுத்தாளராக உங்கள் பார்வை? அமைதியின்மை, பொறுமையின்மை என்கிறது சமூகத்தில் அதிகமாக இருக்கு. மக்களுக்கு இந்த மாதிரியான அழுத்தம் அதிகமா … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

‘கரம் பற்றுதல்’

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ‘கரம் பற்றுதல்’ எனில் நம் மொழியில் ‘வதுவை செய்துகொள்ளுதல்’ என்று பொருள். எளிய தமிழில் சொன்னால், திருமணம் முடித்தல். கைத்தலம் பற்றினான் என்றாலும் கரம் பிடித்தான் என்றாலும் அதுவே பொருள். நாராயணன் நம்பி, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கனாக் கண்ட அன்னவயல் புதுவை ஆண்டாள்,‘மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பேயென்று – கைம்மண் அளவு 39

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் காஞ்சனை’ என்று புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று. 1943ல் ‘கலைமகள்’ இதழில் வெளியான பேய்க்கதை. மிகச் சிறந்த சிறுகதைகளில் அதுவும் ஒன்று. அந்தக் கதையை வாசித்துவிட்டு அவரிடம் கேட்டார்களாம், ‘‘பேய், பிசாசு, பூதங்களில் எல்லாம் நம்பிக்கை உண்டா?’’ என்று. அவர் சொன்னாராம், ‘‘நம்பிக்கை இல்லை… ஆனால் பயமாக இருக்கிறதே!’’ பேய் என்றால் எல்லோருக்குமே ஆர்வம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சொல்லுதல் யார்க்கும் எளிய

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் கைம்மண் அளவு 38 ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பது வினைத்திட்பம் அதிகாரத்துத் திருக்குறள். அதைச் செய், இதைச் செய், அதைச் செய்வேன், இதைச் செய்வேன், அதைச் செய்திருக்கலாம், இதைச் செய்திருக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளிய காரியம். ஆனால் அவர் சொன்னபடி அவரே செய்தல், அவர் எதிர்பார்த்தபடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குடி குறித்து மறுபடியும் – கைம்மண் அளவு 37

This gallery contains 12 photos.

நாஞ்சில் நாடன் முந்திய கிழமை மதுவிலக்குக் கொள்கை பற்றி நம் கருத்தைப் பரிமாறினோம். இத்தொடர் எழுதத் துவங்கிய பின்னர், எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தக் கட்டுரைக்கு வாசக நண்பர்கள் எதிர்வினை ஆற்றினார்கள். வாழ்நாளில் ஒருமுறை கூட மோரைத் தவிர வேறெதையும் மோந்து பார்த்திராத நண்பர்கள், ‘‘நீங்கள் பகிர்ந்து கொண்டவை நியாயமான நடுநிலையான கருத்துகள்’’ என்றார்கள். அவ்வப்போதும் … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

விருது – கைம்மண் அளவு 36

This gallery contains 13 photos.

நாஞ்சில் நாடன் Award எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக ‘விருது’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். இந்தச் சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம் எனப் பேரகராதி பொருள்கள் தருகின்றது. ‘வெற்றி’ எனும் பொருளில் விருது எனும் சொல்லைக் கம்பன் ஆள்கிறான். கம்ப ராமாயணத்தில் 7வது படலமான தாடகை வதைப் படலத்தின் பாடல் ஒன்று, … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

இருக்கட்டுமா? கொடுக்கட்டுமா? – சாகித்திய அகாதெமி விருது

எந்த தரப்பாக இருந்தாலும் படைப்பாளிகள் படுகொலையை நான் கண்டிக்கிறேன். அதற்காக எனக்கு அளிக்கப்பட்ட விருதை நான் ஏன் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என் எழுத்துக்காக, 40 வருடங்கள் உழைப்புக்காக, கொடுக்கப்பட்ட ஒரு நியாயமான அங்கீகாரத்தை நான் ஏன் திரும்பக் கொடுக்கவேண்டும்? ……. நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

மது – கைம்மண் அளவு 35

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் எனக்கு வாசகர் என்று எவரும் இல்லை. எல்லோரும் நண்பர்களே! இத்தொடரை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களில் பலர் கேட்டுவிட்டனர், ‘மதுவிலக்கு பற்றி வாய் திறக்க மாட்டீர்களா’ என! ஒருவேளை நாம் வாய் திறந்தால் மது மணம் வீசக்கூடும். சிலர் அதை மது நாற்றம் எனலாம். எமக்கதில் மறுப்பு இல்லை. நாற்றம் என்றாலும் தமிழில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

இரவல்- கைம்மண் அளவு 34

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு- ‘புத்தகத்தையும் மனைவியையும் இரவல் கொடுக்காதே’ என்று. போனால் திரும்பாது. புத்தகம் சரி, போனால் வராது. ஆனால் மனைவி எப்படி? அவள் எப்படி இரவல் போகக்கூடிய சாதனம் ஆவாள்? புத்தகம் தானாக கால் முளைத்து நடந்து போகாது; தானாக வரவும் செய்யாது. ஆனால் மனைவி என்பவள் அப்படியா? இரவல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தரகு – கைம்மண் அளவு 33

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் பத்தாண்டுகளுக்கு முன்பு, கோயம்புத்தூர் ராம் நகர் பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் தயாரித்து விற்பனை செய்யும் இயந்திரங்கள் வாங்க வரும் வாடிக்கையாளரைச் சில சமயம் மதிய உணவுக்கு அழைத்துப் போக நேரும். சிலர் சோறேதான் வேண்டும் என்பார்கள். சிலர் பியரே போதும் என்பார்கள். சிலர் அசைவம் இல்லாமல் உண்பதில்லை என்பார்கள். சிலருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பேசிச் சம்பாதிச்சது?? – கைம்மண் அளவு 32

This gallery contains 5 photos.

          நாஞ்சில் நாடன் சென்ற கட்டுரையை வாசித்து விட்டு, நான் கூட்டங்கள் பேசிப் பெரும் பொருள் ஈட்டுகிறேன் என்று நினைக்க ஏதுவுண்டு. அது வேறோர் இனம், சக்கரங்கள் மீதுலாவும் சர்க்கஸ் கம்ெபனி போல! டாடா சுமோ அல்லது இன்னோவா போன்ற வாகனத்தில் நடுவர் அடக்கம் ஏழு பேர் பயணிப்பார்கள்… பட்டிமண்டபங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , | 5 பின்னூட்டங்கள்

நம் மாணவ படைச்செருக்கு – கைம்மண் அளவு 31

This gallery contains 5 photos.

நாஞ்சில் நாடன் சில ஆண்டுகளாக, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறேன். கோவையின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரித் தமிழ் மன்றத்தில் துவக்க உரையாற்றப் போனபோது சொன்னேன், ‘‘பெரியவர்களை இனி செதுக்கவோ, இளக்கவோ, கரைக்கவோ இயலாது. உடைக்கத்தான் முடியும். அந்த அளவுக்கு சிந்தனைப் பாறையாக உறைந்து போனவர்கள்’’ என்று. என் முன்னால் அமர்ந்திருந்த கல்லூரி தாளாளரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

எஸ் எம் எஸ் எனும் தூது- கைம்மண் அளவு 30

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ‘தூது’ என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. செய்தி சொல்லவும் மறு செய்தி வாங்கி வரவும் தூது அனுப்பப்பட்டது. நட்பு நாட்டு, பகை நாட்டு வேந்தருக்கும், குறுநில மன்னர்களுக்கும் அரசர்கள் தூது அனுப்பினார்கள். எந்தச் செய்தியையும் பகிர்ந்து கொண்டார்கள். ‘தூது’ என்பது தொல் தமிழ்ச் சொல். சங்க இலக்கியங்களில் அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய- கைம்மண் அளவு 29

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் நாள்தோறும் பல சொற்கள் தமிழுக்கு அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றன. பழைய சொற்கள் காலாவதி ஆகிக்கொண்டும்! ‘கணினி’ என்றோ, ‘முகநூல்’ என்றோ, ‘குறுஞ்செய்தி’ என்றோ சொற்களை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எவரும் கேட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற சொல் தமிழுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும். காலத்தைக் கருதிக்கொண்டு எழுதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்