Tag Archives: நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள்

சிலிகான் ஷெல்ஃப்

சிலிகான் ஷெல்ஃப் நாஞ்சில்நாடனுக்கு சாஹித்ய அகாடமி விருது by RV http://siliconshelf.wordpress.com/2010/12/21/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a4/ கொஞ்ச நாள் முன்னால்தான் தகுதி அற்றவர்களுக்கு சாஹித்ய அகாடமி விருது தருகிறார்களே என்று குறைப்பட்டுக் கொண்டேன். கமிட்டி காதில் விழுந்துவிட்டதோ என்னவோ இப்போது நாஞ்சில்நாடனுக்கு விருது கிடைத்திருக்கிறது. சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுதிக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். நான் நாஞ்சில் நாடனின் ஏழெட்டு … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நினைவுகளின் சுவட்டில்

நாஞ்சில் நாடன்       சொல்வனம்  http://solvanam.com/?p=11783 அகல்’ பதிப்பக நண்பர் பஷீருக்கு என் நினைவுக் குறிப்பு நூலொன்று எழுதித் தரவேண்டும் என ஐந்தாண்டுகளாக ஆசையுண்டு. ‘பேய்க்கரும்பு.’ கையில் பிடித்துத் திரியும் பட்டினத்துப் பிள்ளை போன்று, எனது மரியாதைக்குரிய படைப்பாளி, ‘பாதசாரி’ எப்போதுமதை வழி மொழிபவர். பார்க்கும் இடத்திலெல்லாம் ‘மீனுக்குள் கடல்’ எனும் அவரது நூலுக்குள் இருக்கும் ‘காசி’ … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மங்கலம்,குழுஉக்குறி,இடக்கரடக்கல்(2)

(நாஞ்சில் நாடன்) முதல் பாகம்: ..https://nanjilnadan.wordpress.com/2010/12/16/முலை/ (இன்னும் வரும்)  

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்” (19) காடு

“தீதும் நன்றும்” (19) காடு காடுகள் நிறைந்து இருந்தது நம் நாடு! ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’ – என்பது திருக்குறள். மணி நீர் என்பதற்கு மணி போன்ற நிறத்தினை உடைய, எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்றும், அணிநிழற் காடு என்பதற்குக் குளிர்ந்த நிழலை உடைய செறிந்த காடு என்றும் பொருள் … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (18) வெற்றிலை

“தீதும் நன்றும்” (18) வெற்றிலை அடகு என்று சொன்னால் தமிழில் இலை என்றும், கீரை என்றும் பொருள். ‘அடகென்று சொல்லி அமுதினை இட்டாள் கடகம் செறிந்த கையாள்’ என்று பாரி மகளிர் சமைத்தளித்த கீரையை அமுது எனப் புகழ்ந்தாள் ஒளவை. அசோகவனத்தில் சிறை இருந்த சீதை, ராமனின் தவிப்பை எண்ணி வருந்தும்போது, ‘அருந்தும் மெல் அடகு … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம்

“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம் மார்ச் மாதம் மகளிர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது! கோலாகலம் என்பது நகை வாங்கு, புடவை வாங்கு, உயர்வான விடுதியில் ஒப்பனைப் பொருட்கள் வாங்கு, நடனங்களுக்காக முன்பதிவு செய்துகொள் என நாள்தோறும் தினசரியில் வணிக விளம்பரங்கள். அவ்வாறுதான் நமக்கு அட்சய திரிதியை, காதலர் தினம், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (16) எங்கோ?

“தீதும் நன்றும்” (16) எங்கோ? மராத்திய மாநிலத்தில், மும்பையில் இருந்து தேசத்தை நேர் வகிடெடுத்து கிழக்கே நாக்பூர் போகும் பாதைக்கும், செங்குத்தாகக் கீழே இறங்கும் சென்னைப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அலுவல் பயணம் என்பது சிரமங்கள் நிறைந்தது. என்றாலும், அந்த மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பாலைகளும் பிறவும் இருந்தன. சுமார் 20 ஆண்டுகள் முன்பு, மும்பையில் எமது … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்” (15) புத்தகங்கள்

“தீதும் நன்றும்” (15) புத்தகங்கள் புத்தகங்கள் பரிசளிக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் பரவலாகியுள்ளது. ஒருவகையில் திராவிட இயக்கங்களுக்கு அதில் சிறப்பான பங்கு உண்டு. மாணவப் பருவத்தில், சினிமாவுக்குப் போனாலும், கோயில் திருவிழாவுக்குப் போனாலும், கையில் ஒரு புத்தகம் வைத்து நடப்பது இளைஞருக்கு அலங்காரமாக இருந்தது. திருமண அன்பளிப்பாகவும் அன்று புத்தகம் வழங்கினார்கள். மணமகனுக்கு, ‘இல்லறம் என்பது நல்லறம்’ … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்” (14) கிராமியக் கலை

“தீதும் நன்றும்” (14) கிராமியக் கலை  இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. அது வெறும் ஒற்றைப் பரிமாணம் உள்ள வாசகம் அல்ல. கிராமங்களில் இந்தியா, விவசாயமாக, கைத்தொழில்களாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலைகளாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் துள்ளித் திரியும் கன்றுகளாக, நாவற் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (13) ‘நீரின்றி அமையாது உலகு!

“தீதும் நன்றும்” (13) ‘நீரின்றி அமையாது உலகு! மொரப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 12 மைல் தொலைவில் மூக்கனூர்பட்டி. சின்னஞ்சிறு கிராமம். அங்கிருந்து பேருந்து ஏற இரண்டு மைல் நடக்க வேண்டும். இப்போது விருந்தாளி போல, சிற்றுந்து ஒன்று வந்து போகிறது. சிற்றுந்து ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் மற்றும் சில பணிகள் உண்டு. வீட்டில் வெஞ்சன சாமான் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில்நாட்டு வெள்ளாளார் வாழ்க்கை

சமீபத்தில் படித்தவை: ஜெயமோகன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60405201&format=html நாஞ்சில்நாட்டு வெள்ளாளார் வாழ்க்கை [வரலாறு] நாஞ்சில்நாடன் காலச்சுவடு பதிப்பகம் நாஞ்சில்நாடனின் இந்நூல் அவரது சாதியைப்பற்றிய ஒரு சுயவரலாறு. ஆனால் இத்தகைய ஒரு நூலில் நாம் சாதாரணமாகக் காணும் இரு கூறுகள் இதில் இல்லை. ஒன்று இது தன் சாதி குறித்த பெருமிதம் அல்லது தன்னுணர்வு எதையுமே வெளிப்படுத்தவில்லை. தன் சாதியின் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பனுவல் போற்றுதும்: சங்க இலக்கியத் தாவரங்கள்

பனுவல் போற்றுதும்: சங்க இலக்கியத் தாவரங்கள் http://solvanam.com/?p=9413 எழுத்தாளர் நாஞ்சில் நாடன், தன்னைக் கவர்ந்த புத்தகங்களைக் குறித்து ஒரு தொடராக சொல்வனம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். இத்தொடரின் பெயர்: ‘பனுவல் போற்றுதும்’. சமீபத்தில் அக்கினிநட்சத்திர வெயில் உக்கிரமாய்க் காய்ச்சிக் கொண்டிருந்த ஒரு வைகாசி நாளில், நண்பர் செழியனின் புதுமனை புகுவிழாவுக்காக மரபின்மைந்தன் முத்தையா, செளந்தர் வல்லதரசு … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழரும், தாவரமும்

தமிழரும், தாவரமும் தொடர்ந்து எழுதாவிட்டாலும் வாசித்துக்கொண்டு இருக்கும் காரணத்தால், அவ்வப்போது என்னை ஈர்த்த சில புத்தகங்கள் பற்றி அறிமுகக் கட்டுரை எழுதும் திட்டம் உண்டு எனக்கு. நிச்சயமாக ஆய்வுக்கட்டுரையாக அவை அமையாது. நான் உழைத்து ஈட்டிய பணம் கொடுத்து வாங்கிய புத்தகங்களாக அவை இருக்கும். எனவே எழுதுவது என் சுதந்திரம். யாரும் மதிப்புரை எழுதும் முனைப்பில் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிராந்து

பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்) பாவண்ணன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60305104&format=html (பிராந்து – சிறுகதைத்தொகுதி. நாஞ்சில் நாடன். வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, இராஜ வீதி, கோவை-641 001. விலை ரூ100.) கால் நூற்றாண்டுக்காலமாகத் தொடர்ந்து எழுதிவரும் நாஞ்சில் நாடனுடைய சிறுகதைகளும் நாவல்களும் தமிழ் இலக்கிய உலகில் தனித்த அடையாளம் கொண்டவை. … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மும்பாய் சிறுகதைகள்

மொகித்தே – நாஞ்சில் நாடன் – தொகுப்பு – மும்பாய் சிறுகதைகள் கே ஆர் மணி http://www.thinnai.com/?module=displaystory&story_id=60609015&format=html நாஞ்சில் நாடன், (நா.நா) படிச்சா போதும்.. பம்பாய் தெரிஞ்சிக்கலாம்.. கேள்விப்பட்டிருப்பீர்கள்.. எந்த எழுத்தாளரும் மண்ணின் மனம் முழுவதையும் தன் எழுத்தில் சமைத்துவிடமுடியாது. அதன் குணம்,வேர், இயல்பு போன்றவற்றை ஒரளவாவது எழுத்திற்குள் உட்காரவைத்துவிட்டால் போதும். மற்றவற்றை வாசகனின் சிந்தனை … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பேச்சியம்மை

பேச்சியம்மை மூன்று நாட்களாக விடாத அடைமழை. வானம் வெளிவாங்காமல் மூடாக்குடன் இருந்தது. நடுப்பகலில் இரவு ஏழு மணி ஆனது போல இருள் மயக்கம். வீடுகள், கோயில்கள், மண்டபங்கள் யாவும் கழுவிவிட்டது போல் ஈரத் துலக்கம். மழைத் தண்ணீர் புழுதி அரித்து ஓடி, தெரு மணல் மினுங்கக்கிடந்தது. தெருவில் பள்ளம் நோக்கி ஓடும் தண்ணீர் இரண்டு கை … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நீலவேணி டீச்சர்

நாஞ்சில் நாடனின் “தெரிவை” ‘நீலவேணி டீச்சர் ‘ சிறுகதை http://tvrk.blogspot.com/2010/03/blog-post_05.html வார இதழ்களில் சிறுகதைகளே அதிகம் வருவதில்லை என வாசகர்கள் சொல்வதும்..சிறுகதைகள் இப்போதெல்லாம் அதிகம் படிக்கப்படுவதில்லை என இதழ் ஆசிரியர்கள் தரப்பு சொல்வதும் வாடிக்கையாய் விட்டது.ஆனால் பல சிறுகதைகள் இன்னமும் நம்மால் மறக்கப் படாமல் மூளையின் ஒரு ஓரத்தில் சப்பணம் போட்டு அமர்ந்துக் கொண்டு இருப்பது … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனின் கும்பமுனி ஜெயமோகன்

நாஞ்சில் நாடனின் கும்பமுனி   ஜெயமோகன் ஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் எதிராக … Continue reading

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்”(12) காதல்

“தீதும் நன்றும்”(12) காதல் அன்பெனும் சொல்லுக்கு மாற்றாக நாம் பாசம், நேசம், பரிவு, பிரியம், சினேகம், நட்பு, பற்று, காதல் போன்ற சொற்களைக் கையாள்கிறோம். அன்பின் மேலானதோர் நிலையைக் காதல் என்று கொள்ளலாம். பருவ வயதுடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஊற்றெடுக்கும் உணர்ச்சியை மட்டுமே சொல்வதும் இல்லை. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி‘ என அடியார் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (11) பந்தா

“தீதும் நன்றும்” (11) பந்தா ‘பந்தா’ என்றொரு சொல் தமிழ் மக்கள் நாவில் வழங்குகிறது இன்று. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்து ஆய்வறிஞர், தூய தமிழ்ச் சொல்லாக்க அகர முதலிகள் துறைத் தலைவர், பேராசிரியர் ப.அருளி அவர்கள், தமது ‘அயற்சொல் அகராதி’யில் பந்தா Panthah எனும் சொல்லின் வேர்ச் சொல் சம்ஸ்கிருதம் என்றும், அதன் பொருள் வழி, … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (10) மொழி

“தீதும் நன்றும்”   மொழி மொழி என்பது மெத்தப் படித்த, உயர் பதவி வகிக்கும், தலைமுறைகளுக்குச் செல்வம் சேர்க்க உதவும் வெறும் ஊடகம் மட்டுமல்ல. குறியீடுகள் மூலமும், சைகைகள் வழியாகவும், நயன அல்லது முக அசைவுகள் காட்டியும், வாய் மூலமும், வாயே திறக்காமலும் ஏற்படுத்திய ஒலிக் குறிப்புகள்கொண்டும் பரிமாறிக்கொண்டது ஆதிக் காலம். ஒலிக் குறிப்புகள் மொழியாக உருவெடுக்கின்றன. … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக