Tag Archives: தீதும் நன்றும்

தீதும் நன்றும் 23.கலைச் செல்வங்கள்

கலைச் செல்வங்கள் கிராமத்தில் குரூரமான சொலவம் ஒன்று உண்டு: ‘மலடி, அடுத்த வீட்டுக் குழந்தையின் அணவடைத் துணியை மோந்து பார்த்தது போல!’ என்று. பாரம்பரியப் புகழ்மிக்க நினைவுச் சின்னங்கள் ஏதுமற்ற பல நாட்டினரும் தமது சின்னச் சின்ன வரலாற்றுச் சின்னங்களைக்கூடப் போற்றிப் பாதுகாத்து வெளிநாட்டுப் பயணிகளுக்குக் காட்டிக் காட்டி மகிழ்கின்றனர். தொல் வரலாறு உடைய பிற … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தீதும் நன்றும்

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (21) வதந்தி

“தீதும் நன்றும்” (21) வதந்தி ஆவணப்படுத்தப்பட்ட முதல் வதந்தி எதுவாக இருக்கும்? மகாபாரதத்துக் கிருஷ்ணனும் தர்மாத்மாவான தர்மனும் சேர்ந்து செய்த காரியம் அது. மனதின்றி, கிருஷ்ணனின் வற்புறுத்தலில் தர்மன் பரப்பிய வதந்தி. துரோணாச் சாரியாரின் மகன் அஸ்வத்தாமன், சிரஞ்சீவி வரம் பெற்றவன். அதகளத்தில் அவன் இறந்துவிட்டான் எனப் பொருள்படும்படி, ‘அஸ்வத்தாம அதக, குஞ்சரக’ என்று யானை … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (20) மாணவிகளுக்கு சுகாதாரம்

“தீதும் நன்றும்” (20) மாணவிகளுக்கு சுகாதாரம் பள்ளியில் வாசித்திருந்த காலை, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில், என்னுடன் பயின்ற பெண் பிள்ளைகள் 13 அல்லது 14 வயதில் வயதுக்கு வந்தனர். பள்ளி விடுமுறை நாட்களில் தெருக்களில் அலையும்போது வாசல் தெளித்துக்கொண்டோ, கோலம் வரைந்துகொண்டோ, ஆற்றங்கரைப் படித்துறைகளில் துவைத்துக் குளித்துக் கரையேறும் கோபிகைகள் போலவோ, இடுப்புக் குடத்துடனோ கண்டதுண்டு. … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்” (19) காடு

“தீதும் நன்றும்” (19) காடு காடுகள் நிறைந்து இருந்தது நம் நாடு! ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’ – என்பது திருக்குறள். மணி நீர் என்பதற்கு மணி போன்ற நிறத்தினை உடைய, எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்றும், அணிநிழற் காடு என்பதற்குக் குளிர்ந்த நிழலை உடைய செறிந்த காடு என்றும் பொருள் … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (18) வெற்றிலை

“தீதும் நன்றும்” (18) வெற்றிலை அடகு என்று சொன்னால் தமிழில் இலை என்றும், கீரை என்றும் பொருள். ‘அடகென்று சொல்லி அமுதினை இட்டாள் கடகம் செறிந்த கையாள்’ என்று பாரி மகளிர் சமைத்தளித்த கீரையை அமுது எனப் புகழ்ந்தாள் ஒளவை. அசோகவனத்தில் சிறை இருந்த சீதை, ராமனின் தவிப்பை எண்ணி வருந்தும்போது, ‘அருந்தும் மெல் அடகு … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம்

“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம் மார்ச் மாதம் மகளிர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது! கோலாகலம் என்பது நகை வாங்கு, புடவை வாங்கு, உயர்வான விடுதியில் ஒப்பனைப் பொருட்கள் வாங்கு, நடனங்களுக்காக முன்பதிவு செய்துகொள் என நாள்தோறும் தினசரியில் வணிக விளம்பரங்கள். அவ்வாறுதான் நமக்கு அட்சய திரிதியை, காதலர் தினம், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (16) எங்கோ?

“தீதும் நன்றும்” (16) எங்கோ? மராத்திய மாநிலத்தில், மும்பையில் இருந்து தேசத்தை நேர் வகிடெடுத்து கிழக்கே நாக்பூர் போகும் பாதைக்கும், செங்குத்தாகக் கீழே இறங்கும் சென்னைப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அலுவல் பயணம் என்பது சிரமங்கள் நிறைந்தது. என்றாலும், அந்த மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பாலைகளும் பிறவும் இருந்தன. சுமார் 20 ஆண்டுகள் முன்பு, மும்பையில் எமது … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்” (15) புத்தகங்கள்

“தீதும் நன்றும்” (15) புத்தகங்கள் புத்தகங்கள் பரிசளிக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் பரவலாகியுள்ளது. ஒருவகையில் திராவிட இயக்கங்களுக்கு அதில் சிறப்பான பங்கு உண்டு. மாணவப் பருவத்தில், சினிமாவுக்குப் போனாலும், கோயில் திருவிழாவுக்குப் போனாலும், கையில் ஒரு புத்தகம் வைத்து நடப்பது இளைஞருக்கு அலங்காரமாக இருந்தது. திருமண அன்பளிப்பாகவும் அன்று புத்தகம் வழங்கினார்கள். மணமகனுக்கு, ‘இல்லறம் என்பது நல்லறம்’ … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்” (14) கிராமியக் கலை

“தீதும் நன்றும்” (14) கிராமியக் கலை  இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. அது வெறும் ஒற்றைப் பரிமாணம் உள்ள வாசகம் அல்ல. கிராமங்களில் இந்தியா, விவசாயமாக, கைத்தொழில்களாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலைகளாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் துள்ளித் திரியும் கன்றுகளாக, நாவற் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (13) ‘நீரின்றி அமையாது உலகு!

“தீதும் நன்றும்” (13) ‘நீரின்றி அமையாது உலகு! மொரப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 12 மைல் தொலைவில் மூக்கனூர்பட்டி. சின்னஞ்சிறு கிராமம். அங்கிருந்து பேருந்து ஏற இரண்டு மைல் நடக்க வேண்டும். இப்போது விருந்தாளி போல, சிற்றுந்து ஒன்று வந்து போகிறது. சிற்றுந்து ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் மற்றும் சில பணிகள் உண்டு. வீட்டில் வெஞ்சன சாமான் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்”(12) காதல்

“தீதும் நன்றும்”(12) காதல் அன்பெனும் சொல்லுக்கு மாற்றாக நாம் பாசம், நேசம், பரிவு, பிரியம், சினேகம், நட்பு, பற்று, காதல் போன்ற சொற்களைக் கையாள்கிறோம். அன்பின் மேலானதோர் நிலையைக் காதல் என்று கொள்ளலாம். பருவ வயதுடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஊற்றெடுக்கும் உணர்ச்சியை மட்டுமே சொல்வதும் இல்லை. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி‘ என அடியார் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (11) பந்தா

“தீதும் நன்றும்” (11) பந்தா ‘பந்தா’ என்றொரு சொல் தமிழ் மக்கள் நாவில் வழங்குகிறது இன்று. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்து ஆய்வறிஞர், தூய தமிழ்ச் சொல்லாக்க அகர முதலிகள் துறைத் தலைவர், பேராசிரியர் ப.அருளி அவர்கள், தமது ‘அயற்சொல் அகராதி’யில் பந்தா Panthah எனும் சொல்லின் வேர்ச் சொல் சம்ஸ்கிருதம் என்றும், அதன் பொருள் வழி, … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (10) மொழி

“தீதும் நன்றும்”   மொழி மொழி என்பது மெத்தப் படித்த, உயர் பதவி வகிக்கும், தலைமுறைகளுக்குச் செல்வம் சேர்க்க உதவும் வெறும் ஊடகம் மட்டுமல்ல. குறியீடுகள் மூலமும், சைகைகள் வழியாகவும், நயன அல்லது முக அசைவுகள் காட்டியும், வாய் மூலமும், வாயே திறக்காமலும் ஏற்படுத்திய ஒலிக் குறிப்புகள்கொண்டும் பரிமாறிக்கொண்டது ஆதிக் காலம். ஒலிக் குறிப்புகள் மொழியாக உருவெடுக்கின்றன. … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (9) தாய் மனம்

“தீதும் நன்றும்” (9)  தாய் மனம் கோயம்புத்தூரில் வாழ்கின்ற இந்த இருபது ஆண்டுகளில், அலுவல் நிமித்தமாக முப்பது முறைக்கும் குறையாமல் காரைக்குடி போனதுண்டு. அலைச்சலில் ஒரு சுகம் இருந்ததுபோல, அலுவலக வேலைகளைச் சுளுவாக முடிக்கும் திறனும் இருந்தது. கிராமங்களில் விறகு கீறுபவர்களைக் கவனித்தால் தெரியும், சிலர் மொத்த பலத்தையும் செலுத்தி மாங்குமாங்கென்று கோடரி போடுவார்கள். சிலர் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (8) கொடை மடம்

“தீதும் நன்றும்” (8)  கொடை மடம் கொடை மடம் என்று ஒரு சொல் உண்டு தமிழில். சமகாலத் தமிழில் சொன்னால், மடத்தனமாகக் கொடுப்பவன் என்று பொருள். முல்லைக் கொடிக்கு ஏறி வந்த தேரை ஆதாரமாக நிறுத்தியவன் பறம்பு மலைப் பாரி. தோகை மயில் கார்மேகம் கண்டு தோகை விரித்து, பாதம் நகர்த்தி ஆடியபோது, மயில் குளிரில் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்” 7. தாலி

“தீதும் நன்றும்” 7.  தாலி  தாலி னில் தமிழில் கீழாநெல்லி என்றும் மட்பாண்டம் என்றும் பொருள் தருவது. ஆனால், தாலி எனும் இரண்டெழுத்து மங்கல அணிகலன் தமிழர் வாழ்வில் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது. ஏனெனில், தாலி வெறும் ஆபரணம் மட்டும் அல்ல. அதன் மீது அளவு கடந்த புனிதம் ஏற்றப்பட்டு, சடங்குகளில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தமிழ்ப் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘தீதும் நன்றும்” (6) பயங்கரவாதம்

‘தீதும் நன்றும்” (6)  பயங்கரவாதம் எதிர்காலத்தில் நம் வீட்டை விட்டு வெளியே இறங்கும் முன், உடனடியாகச் செய்துவைக்க வேண்டிய வேலைகள் சில உண்டு. தொலைதூரப் பயணம் என்பதல்ல. சாலைக்குப் போய் பால், செய்தித்தாள், பற்பொடி வாங்கி வரப் போனாலும்கூட. அசம்பாவிதமாக, அகாலமாக மரணமுறும் வாய்ப்பு மிக அதிகம். எனவே, செய்துவைக்க வேண்டியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துவிடுவது … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவர்கள் ‘தீதும் நன்றும் 4”

அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்… குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில் வந்து இறங்கி, புழுதி பரந்திருக்கும், பாவிய கற்கள் பெயர்ந்திருக்கும், சாக்கடை தேங்கி இருக்கும், பன்றிகள் மேய்ந்திருக் கும், தெரு நாய்கள் வெயில் பொறாது நாத்தொங்க நீர் வடித்து, இளைத்து நிழல் ஒதுங்கிக் கிடக்கும் உங்கள் தெருக்களில், சந்துகளில், முடுக்குகளில், இரு கரம் கூப்பி, எப்பக்கமும் தொழுது, புன்முறுவல் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தகங்கள் ‘தீதும் நன்றும் 5”

புத்தகங்கள் பரிசளிக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் பரவலாகியுள்ளது. ஒருவகையில் திராவிட இயக்கங்களுக்கு அதில் சிறப்பான பங்கு உண்டு. மாணவப் பருவத்தில், சினிமாவுக்குப் போனாலும், கோயில் திருவிழாவுக்குப் போனாலும், கையில் ஒரு புத்தகம் வைத்து நடப்பது இளைஞருக்கு அலங்காரமாக இருந்தது. திருமண அன்பளிப்பாகவும் அன்று புத்தகம் வழங்கினார்கள். மணமகனுக்கு, ‘இல்லறம் என்பது நல்லறம்’ எனும் தலைப்பில் ஒரே புத்தகம் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

‘தீதும் நன்றும்” 3 விவசாயி

‘தீதும் நன்றும்” 3 விவசாயி விவசாயி என்பவன் பயிர் வளர்ப்பவன். எனவே, உயிர் வளர்ப்பவன். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றும் ‘உழவே தலை’ என்றும் சொல்கிறார் திருவள்ளுவர். விவசாயியின் ஆதாரம் எனப்படுபவை மண்ணும், மழையும், சூரியனும், காற்றும், ஆகாயமும். எனவே, விவசாயி பஞ்சபூதங்களையும் மதித்தான். தொழுதான். இது சகல உலகத்து உழவர்க்கும் பொதுவானது. விதை முளைப்பது, … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஐ.டி. செக்டர் ‘தீதும் நன்றும்” (2)

‘தீதும் நன்றும்” (2)   ஐ.டி. செக்டர் ஏரிக்கரைப் படித்துறைகளில், நகரப் பேருந்து நிறுத்தங்களில், கல்யாண வீடுகளில், கருமாதிக் காடுகளில் இன்று சர்வ சாதாரணமாகக் கேட்கும் உரையாடல்களில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், அக்சஞ்சர், காக்னசன்ட், ஸ்டேட்ஸ், லண்டன், ஆஸ்திரேலியா எனும் சொற்கள் விரவிக்கிடக்கின்றன. மத்தியதர வீடுகளில் பலர், மேற்கண்ட நிறுவனங்களில் பணி நிமித்தம் சென்னை, பெங்களூரு, … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்