Tag Archives: சுல்தான்

“தீதும் நன்றும்” (9) தாய் மனம்

“தீதும் நன்றும்” (9)  தாய் மனம் கோயம்புத்தூரில் வாழ்கின்ற இந்த இருபது ஆண்டுகளில், அலுவல் நிமித்தமாக முப்பது முறைக்கும் குறையாமல் காரைக்குடி போனதுண்டு. அலைச்சலில் ஒரு சுகம் இருந்ததுபோல, அலுவலக வேலைகளைச் சுளுவாக முடிக்கும் திறனும் இருந்தது. கிராமங்களில் விறகு கீறுபவர்களைக் கவனித்தால் தெரியும், சிலர் மொத்த பலத்தையும் செலுத்தி மாங்குமாங்கென்று கோடரி போடுவார்கள். சிலர் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (8) கொடை மடம்

“தீதும் நன்றும்” (8)  கொடை மடம் கொடை மடம் என்று ஒரு சொல் உண்டு தமிழில். சமகாலத் தமிழில் சொன்னால், மடத்தனமாகக் கொடுப்பவன் என்று பொருள். முல்லைக் கொடிக்கு ஏறி வந்த தேரை ஆதாரமாக நிறுத்தியவன் பறம்பு மலைப் பாரி. தோகை மயில் கார்மேகம் கண்டு தோகை விரித்து, பாதம் நகர்த்தி ஆடியபோது, மயில் குளிரில் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்” 7. தாலி

“தீதும் நன்றும்” 7.  தாலி  தாலி னில் தமிழில் கீழாநெல்லி என்றும் மட்பாண்டம் என்றும் பொருள் தருவது. ஆனால், தாலி எனும் இரண்டெழுத்து மங்கல அணிகலன் தமிழர் வாழ்வில் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது. ஏனெனில், தாலி வெறும் ஆபரணம் மட்டும் அல்ல. அதன் மீது அளவு கடந்த புனிதம் ஏற்றப்பட்டு, சடங்குகளில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தமிழ்ப் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘தீதும் நன்றும்” (6) பயங்கரவாதம்

‘தீதும் நன்றும்” (6)  பயங்கரவாதம் எதிர்காலத்தில் நம் வீட்டை விட்டு வெளியே இறங்கும் முன், உடனடியாகச் செய்துவைக்க வேண்டிய வேலைகள் சில உண்டு. தொலைதூரப் பயணம் என்பதல்ல. சாலைக்குப் போய் பால், செய்தித்தாள், பற்பொடி வாங்கி வரப் போனாலும்கூட. அசம்பாவிதமாக, அகாலமாக மரணமுறும் வாய்ப்பு மிக அதிகம். எனவே, செய்துவைக்க வேண்டியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துவிடுவது … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்

நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள் புதியமாதவி, மும்பை என் முதல் கவிதை நூல் – சூரியப்பயணம் கவிதைகளுக்கு ஓர் அணிந்துரைக்காக நாஞ்சில்நாடனின் முகவரித் தேடி என் கவிதைகள் பயணித்தன. அப்போது என் வாசிப்பு நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு, தலைகீழ்விகிதங்கள், சதுரங்ககுதிரை மட்டுமே. மும்பையில் என்னையும் நாஞ்சிலாரையும் அறிந்த நண்பர்கள் நாஞ்சிலாரின் அணிந்துரைக்காக என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள். … Continue reading

Posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கதாவிலாசம்

நாஞ்சில் நாடன் எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசம்   மதுரை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த நாட்களில், ரயில்வே நிலையத்தின் வெளியே உள்ள பிளாட்பாரத்தில் உள்ள இட்லிக் கடைகள் தான் எங்களது பசியாற்றுமிடங்கள். நான்கு நட்சத்திர ஓட்டல், ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதெல்லாம் இவற்றின் முன் தூசி. (அங்கே இரவில் மர பெஞ்சில் உட்கார்ந்தபடி, கையில் இட்லித் … Continue reading

Posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிறியன செய்கிலாதார்…. நாஞ்சில் நாடன்

சிறியன செய்கிலாதார்… – நாஞ்சில் நாடன் http://azhiyasudargal.blogspot.com/2010/03/blog-post_13.html பேராசிரியர் த மு பூரணலிங்கனார் கனவை பேராசை என்று துணிய முடியாது. ஒருகையில் நின்று யோசிக்கையில் இந்த டாக்டர் பட்டம் அவரது புலமைக்கு அநாவசியம் என்று தோன்றும்.அவர்க்கென தனியான பெருமையை இது எங்கே சேர்த்து விடபோகிறது ? மறு பக்கம் நின்று யோசிக்கையில் அவருடைய கல்வித்தகுதிகளில் மகுடம் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

விலாங்கு

விலாங்கு   நாஞ்சில்நாடன் கள்ளிவெட்டிப் போட்டு ஒரு மணி நேரமாவது இருக்கும். துண்டு துண்டாக, இரண்டங்குல கனத்தில் திருகுக் கள்ளிகள் குட்டையாகத் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மிதந்தன. சில துண்டுகள் வெட்டுப்பட்ட வெள்ளை சோற்றுப் பாகத்தைக் காட்டிக் கொண்டு, சில ஜோடி ஜோடியான முள்முனை வரிசைகளை மாட்டுக் கொம்புகள் போல் நீட்டிக் கொண்டு கால்மாடு தலைமாடாக … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு இந்நாட்டு மன்னர்

 நாஞ்சில் நாடன் அவன் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’  என்ற பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப்போன கொம்பையாத்தேவர் சார்பிலோ, அல்லது நாடு விட்டுப் போன நல்லத்தம்பிக் கோனார் சார்பிலோ தான் அவன் ஓட்டுப்  … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன் – தீராநதி நேர்காணல்

நாஞ்சில் நாடன் – நேர்காணல்   கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள். … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவர்கள் ‘தீதும் நன்றும் 4”

அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்… குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில் வந்து இறங்கி, புழுதி பரந்திருக்கும், பாவிய கற்கள் பெயர்ந்திருக்கும், சாக்கடை தேங்கி இருக்கும், பன்றிகள் மேய்ந்திருக் கும், தெரு நாய்கள் வெயில் பொறாது நாத்தொங்க நீர் வடித்து, இளைத்து நிழல் ஒதுங்கிக் கிடக்கும் உங்கள் தெருக்களில், சந்துகளில், முடுக்குகளில், இரு கரம் கூப்பி, எப்பக்கமும் தொழுது, புன்முறுவல் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தகங்கள் ‘தீதும் நன்றும் 5”

புத்தகங்கள் பரிசளிக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் பரவலாகியுள்ளது. ஒருவகையில் திராவிட இயக்கங்களுக்கு அதில் சிறப்பான பங்கு உண்டு. மாணவப் பருவத்தில், சினிமாவுக்குப் போனாலும், கோயில் திருவிழாவுக்குப் போனாலும், கையில் ஒரு புத்தகம் வைத்து நடப்பது இளைஞருக்கு அலங்காரமாக இருந்தது. திருமண அன்பளிப்பாகவும் அன்று புத்தகம் வழங்கினார்கள். மணமகனுக்கு, ‘இல்லறம் என்பது நல்லறம்’ எனும் தலைப்பில் ஒரே புத்தகம் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் கவிதைகள்(தேர்வு ஜெயமோகன்)

நாஞ்சில் நாடன் கவிதைகள் (தேர்வு ஜெயமோகன்) http://www.thinnai.com/?module=displaystory&story_id=30205051&format=html 1 இந்தியரும் எம்மக்களும் உச்சரிக்கவியலாத ஊர்திகள் இராத்தங்க இருபதினாயிரம் வாடகை வான்வழிப்பயணம் கைக்கடிகாரம் காற்சட்டை மேற்சட்டை காலணிகள் கண்ணாடி எண்பதினாயிரம் அக்குள் நாற்றம் மறைக்க ‘தெளிப்பான் ‘ கணிப்பொறி முன்வலை கம்பியில்லாபேசி பிறந்தநாள் மணநாள் காதலர் தினம் புத்தாண்டு ஆயிரத்தாண்டு விழக்கள் காதல்காட்சிக்கும்கனவுக்காட்சிக்கும் மூன்றேகால் கோடி கிரிக்கெட் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

‘தீதும் நன்றும்” 3 விவசாயி

‘தீதும் நன்றும்” 3 விவசாயி விவசாயி என்பவன் பயிர் வளர்ப்பவன். எனவே, உயிர் வளர்ப்பவன். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றும் ‘உழவே தலை’ என்றும் சொல்கிறார் திருவள்ளுவர். விவசாயியின் ஆதாரம் எனப்படுபவை மண்ணும், மழையும், சூரியனும், காற்றும், ஆகாயமும். எனவே, விவசாயி பஞ்சபூதங்களையும் மதித்தான். தொழுதான். இது சகல உலகத்து உழவர்க்கும் பொதுவானது. விதை முளைப்பது, … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்) பாவண்ணன்

வாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்) பாவண்ணன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60703016&format=html விழுந்தால் வாய்பிளந்திருக்கும் பாழுங்கிணற்றுக்குள் விழவேண்டும். மேலேறி வந்தால் கொத்துவதற்குத் தயாராக படமெடுத்திருக்கும் பாம்புக்கு இரையாகவேண்டும். இப்படி இரு விளிம்புகளிலும் விழுங்கக் காத்திருக்கிறது மரணம். இடையில் விழுதைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறான் ஒருவன். எக்கணத்திலும் மரணம் நிகழலாம் என்ற நிலையிலும் மரஉச்சியில் காணப்பட்ட ஒரு தேன்கூட்டிலிருந்து … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஐ.டி. செக்டர் ‘தீதும் நன்றும்” (2)

‘தீதும் நன்றும்” (2)   ஐ.டி. செக்டர் ஏரிக்கரைப் படித்துறைகளில், நகரப் பேருந்து நிறுத்தங்களில், கல்யாண வீடுகளில், கருமாதிக் காடுகளில் இன்று சர்வ சாதாரணமாகக் கேட்கும் உரையாடல்களில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், அக்சஞ்சர், காக்னசன்ட், ஸ்டேட்ஸ், லண்டன், ஆஸ்திரேலியா எனும் சொற்கள் விரவிக்கிடக்கின்றன. மத்தியதர வீடுகளில் பலர், மேற்கண்ட நிறுவனங்களில் பணி நிமித்தம் சென்னை, பெங்களூரு, … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தாய்மொழியாம் எங்கள்?? ‘தீதும் நன்றும்” .1.

‘தீதும் நன்றும்” (1) கோவை ஹோப்ஸ் நிறுத்தத்தில், எனது பேருந்து வரவுக்காகக் காத்திருந்தேன். அந்தப் புள்ளியில் இருந்து நேராக அவிநாசி சாலையில் செல்லும் பேருந்துகளும் வலப் பக்கம் திரும்பி காமராஜ் சாலையில் போய் திருச்சி சாலையில் இணையும் பேருந்துகளும் உண்டு. எனக்கு அந்தப் பாதையில் போக வேண்டும். முன்மாலை நேரம். பள்ளி, கல்லூரி முடிந்து இருபால் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘

  மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம் பாவண்ணன் இக்கட்டுரைத் தொகுதியில் பதினெட்டு கட்டுரைகள் உள்ளன. கதையிலக்கியத்துக்கே உரிய புனைவுமொழியும் நடையும் சித்தரிப்புத்தன்மையும் கிட்டத்தட்ட ஒரு கதைத்தொகுதியைப் படிக்கிற உணர்வையே இக்கட்டுரைகள் தருகின்றன. படித்து முடித்தபிறகு பற்பல சின்னச்சின்ன சம்பவங்கள் மனத்தில் மிதந்தபடி உள்ளன. சொகுசுப் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன்

மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை  [24.1.2007ல் நாகர்கோயில் புனித சிலுவைக் கல்லூரியில் நடைபெற்ற நாஞ்சில்நாடன் கருத்தரங்கில் ஜெயமோகன் பேசியது] http://www.jeyamohan.in/?p=28 நாஞ்சில்நாடனின் படைப்புகள் குறித்த இக்கருத்தர்ங்கத்தில் பங்கெடுக்க நேர்ந்தமை மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. அவரது சொந்த மண்ணில் தாமதமாகவேனும் அவரை நாம் கௌரவித்திருக்கிறோம். இதற்கு ஒழுங்குசெய்த அனைவருக்கும்நென் மனமார்ந்த நன்றி. நாஞ்சில்நாடனின் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடன் கதைகள் பாவண்ணன்

  வாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)  பாவண்ணன்  விழுந்தால் வாய்பிளந்திருக்கும் பாழுங்கிணற்றுக்குள் விழவேண்டும். மேலேறி வந்தால் கொத்துவதற்குத் தயாராக படமெடுத்திருக்கும் பாம்புக்கு இரையாகவேண்டும். இப்படி இரு விளிம்புகளிலும் விழுங்கக் காத்திருக்கிறது மரணம். இடையில் விழுதைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறான் ஒருவன். எக்கணத்திலும் மரணம் நிகழலாம் என்ற நிலையிலும் மரஉச்சியில் காணப்பட்ட ஒரு தேன்கூட்டிலிருந்து … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்   ஜெயமோகன் 1991ல் நான் பாலகோட்டு [தருமபுரி மாவட்டம்] சுந்தர ராமசாமியைப் பார்க்க நாகர்கோயில் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போது சுந்தர ராமசாமி கோடு போட்ட உயர்தர முழுக்கைச் சட்டையை பாண்ட்டுக்குள் விட்டு நல்ல இடைப்பட்டை கட்டி காலுறை அணிந்து பவ்யமாக அமர்ந்திருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இனிய புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். நேர்த்தியான உடை … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்