Tag Archives: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயரால் இயற்றப்பெற்ற அறப்பளீசுர சதகம், காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்கள் கொண்டது. அறப்பள்ளி எனும் தளத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பெற்றது. நல் மனைவி, நன் மகன், உடன் பிறந்தார், நல்லாசிரியர், நன்மாணாக்கன் என்பவர் எப்படி இருத்தல் வேண்டும் என விவரிக்கும் பாடல்கள். கஞ்சன், தீயவை, மக்கட்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4.1

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்  சொல்வனம் http://solvanam.com/?p=16510 மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தாய்த் தெய்வம் அம்மன் என்றும் அம்மை என்றுமே விளிக்கப்பட்ட காலம், அவள் அம்பாள் ஆக்கப் படாத காம். குமரகுருபரரின் மற்றுமொரு கீர்த்தி பெற்ற நூல் இது. ‘தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி மீனாட்சியைப் பாடுவது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – தூது

This gallery contains 3 photos.

  நாஞ்சில் நாடன் தூது கோவை, உலா இலக்கியங்களைத் தொடர்ந்து நாம் பார்க்க இருப்பது தூது. பிற இந்திய மொழிகளிலும் பல்வகைத் தூதுக்கள் உண்டு. வடமொழியில் இதனை சந்தேசம் என்பர். எடுத்துக்காட்டுக்கு, காளிதாசனின் மேக சந்தேசம். அதாவது மேகத்தைத் தூது விடுவது. திருக்குறளில் 69ம் அதிகாரம் ‘தூது’ பற்றிப் பேசுகிறது. தூதுரைப்பவன் பண்புகள் பேசப்படுகின்றன. அன்புடைமை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 2

This gallery contains 1 photo.

   பிற்காலத்தில் அரசியல் தலைவர்கள் மீதும் உலாக்கள் பாடப்பட்டன. காமராஜர் உலா ஒன்றிருப்பதாகப் பேராசிரியர் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். பத்திருபதினாயிரம் கைவசம் இருக்குமானால், நாஞ்சில்நாடன் உலா எனவும் எழுதச் சொல்லலாம். ஆனால் தற்போதைய உலாவில் ஏழ் பருவத்துப் பெண்களின் பொது விளையாட்டு, பொழுது போக்கு, குறுஞ்செய்தி அனுப்புவதாக இருக்கும். நாஞ்சில்நாடன் தஞ்சைவாணன் கோவை மற்றுமோர் சிறந்த கோவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் செந்தமிழ்க் காப்பியங்கள் எனும் எனது முதற் கட்டுரையைத் தொடர்ந்து எழுதப்படுவது இது. இக்கட்டுரைகளின் மூலம், நான் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் எழுத்தெண்ணிப் படித்தவன் எனும் தீர்மானத்திற்கு வந்து விட வேண்டாம். நான் கற்ற அல்லது கற்கும் சிலவற்றை, ஒரு அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும் எனது தகவல்கள் முழுமையற்றவை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்