This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் …..
This gallery contains 1 photo.
எப்போதுமே,,,நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தில் ஒரு அங்கதம் இருக்கும்,,, !அது,,சமயத்தில் குத்தாலத்துச் சாரல் மழை போல,,பெய்யும்,,,!ஏன்யா,,,திப்பரப்புன்னு சொல்ல மாட்டியளோ ? என்னு கேட்டிராதிய,,, சில சமயத்துல,,,,இப்ப,,கன்னியாரி மாவட்டத்துல பெய்த,,கோடை மழையாட்டம்,,,அடிச்சுப் பொழிக்கும்,,,அடிச்சிப் பொழிக்கிற ஆட்டத்துல,,,,அங்கதத்துக்கே அங்கதம்,,,,வந்து,,சன்னதம் வந்துரும்,,,,சாமீ கொண்டாடியாட்டு ஆராசனை வந்து ஆடுக ஆட்டத்தைப் பார்த்தா ? என்னய்யா? மனுசன்,,இந்த கிழிகிழிக்கானே ?எவனும்,, எந்த அரசியல் … Continue reading
This gallery contains 1 photo.
வல் விருந்து வாசு பாலாஜி நாஞ்சில் நாடனை முதலில் எப்போது வாசித்தேன் என்பது நினைவில் இல்லை. வாழ்க்கைச் சுழலில் முங்காமல் முழுகாமல் ‘மிதவை ’ பற்றி நீந்தி ‘சதுரங்க குதிரையில்’ ஏறி ‘எட்டுத் திக்கும் மதயானைகளை’ வீழ்த்தி ஆசுவாசமாகி திரும்ப நாஞ்சில் நாடனை கண்டடைந்தபோது வருடங்கள் ஓடியிருந்தன. புத்தகக் கண்காட்சியில் முதன் முறையாக வாங்கிய … Continue reading
This gallery contains 2 photos.
முனியும் முனியும் – நாஞ்சில் நாடன் அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி எனச்சில அற்புதமான நாவல்களை எழுதிய எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்புகள் ‘பிறிதொரு நதிக்கரையில்’ தொடங்கி சில உண்டு. அவற்றுள் ஒன்றின் தலைப்பு முனிமேடு. யாவுமே தமிழினி வெளியீடுகள். நமது தீப்பேறு யாதெனின் முதல்தரத்து நூல்கள் எவையும் விருதுகள், பரிசுகள், கௌரவங்களைத் தீர்மானிக்கிறவர் கண்களில் படவே மாட்டா! ஏனெனில் முதல்தரத்துப் படைப்பாளிகள் எவருமே ஆள்பிடிக்க … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, ஊதியூதி, நான்கு அகப்பை அதிகமாகவே குடித்த களைப்பில் இருந்தார். தோய்ந்த கலவி முடிந்த களிப்பும் சோர்வும் தெரிந்தது முகத்தில். ‘கலவியாம், முயக்கமாம், புணர்ச்சியாம், உவப்பாம்… … Continue reading
This gallery contains 1 photo.
கொத்தமல்லி, மிளகாய் வத்தல், நெற்றுத் தேங்காய்த் துருவல் எல்லாம் வறுத்து, நல்ல மிளகு, காயம், கடுகு, ஓமம், பூண்டு, சின்ன உள்ளி, கருவேப்பிலை, சுக்கு எல்லாம் வெதுப்பி, தனித்தனியாக அரைத்து குழம்பு கூட்டிவைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, புளி ஊற்றாமல், மொளவச்சம் வைக்கலாம் என்ற கணக்கில் வாசல் படிப்புரையில் உட்கார்ந்து உள்ளியும் பூண்டும் உரித்துக் … Continue reading
This gallery contains 10 photos.
சவம் நினைந்து உரைத்தல் நாஞ்சில் நாடன் “சும்மச் சும்மா சொறிஞ்சுக்கிட்டே நிக்காதயும் வே! முடியாதுண்ணு ஒருக்கச் சொல்லியச்சுல்லா!” குரலில் கடுப்பம் கூட்டித் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளையிடம் வன்முகம் காட்டினார் கும்பமுனி. நேரம், மாலை மயங்கிக்கொண்டிருந்தது. காகம், மைனா, கொக்கு, நாரை, செண்பகம், புறா, பருந்து, கிளி, சிட்டுக்குருவி, சாம்பல் குருவி, தேன்சிட்டு யாவும் கூடடையும் மும்முரத்தில் இருந்தன. … Continue reading
This gallery contains 7 photos.
அவயான் பொந்து நாஞ்சில் நாடன் “கன்னி மூலையிலே அவயாம் பறிச்சு பெரும் பொடையாக் கெடக்கு” என்று புலுபுலுத்தபடி வந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. அவர் கையில் ஓல்ட் மாங்க் ரம் நிறத்தில் கட்டன் சாயா இருந்தது. சற்றே சாய்வான சூரல் நாற்காலியில், சபரிமலை ஐயப்ப சாஸ்தா அமரும் ஆசனம் போட்டு உட்கார்ந்திருந்தார் கும்பமுனி. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் … Continue reading
This gallery contains 2 photos.
ஜெயமோகன் “ஏல, அம்பத்தாறு ராச்சியத்து அரமனையும் காக்கைக்க குண்டிக்க கீள தானலே?” டீ குடிக்கப்போன இடத்தில் ஒரு குரல். ஆளைப் பார்க்க விழிகளைச் சுழற்றினேன். வயதான வாட்ச்மேன் கையில் கம்புடன் நின்றிருந்தார். “அப்பச்சி, அப்பம் காவல் நிக்கப்பட்ட எடத்திலே பீயைப் போட்டுவைக்கது நீருதானா?” என்றார் ஆட்டோ ஓட்டுநர். புன்னகையுடன் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். ஆ, கும்பமுனியும் தவசுப்பிள்ளையும் … Continue reading
This gallery contains 3 photos.
அன்புள்ள ஜெ, https://nanjilnadan.com/2018/08/20/பைரவதரிசனம்/ நாஞ்சில்நாடனின் இந்தக்கதை பிரமாதம்…கும்பமுனி தொடரில் இப்படி ஒரு வரி தோன்றவைப்பது தான் நாஞ்சிலின் முத்திரை..! “மூத்த பின்நவீனத்துவத் தமிழ் எழுத்தாளனின் பழுதுபட்ட கிழட்டு இருதயம் படபடவெனத் துடித்து, சற்று நேரம் நின்று, பின்பு சீராக அடிக்கத் துவங்கியது.” சரி- நாஞ்சில் தான் கும்பமுனி என்று படித்தாயிற்று. ஆச்சி தான் கண்ணுப்பிள்ளை என்ற … Continue reading
This gallery contains 6 photos.
“சரி! கடவுளே ஒம்ம முன்னால் வந்து நிண்ணா என்ன கேப்பேரு நீரு? ஒரு பாரத ரத்னா கேப்பேரா? அப்பிடி ஒரு நெனப்பிருந்தா அதுல நாய் பறிச்ச மண்ணை வாரிப் போடும்… அதெல்லாம் கடவுளாலயும் தரமுடியாது… ரஜினி காந்தும் நீரும் ஒண்ணா பாட்டா? மத்திய மந்திரி அஞ்செட்டுப் பேரு ஒம்ம பொறத்தால அலையதுக்கு? வேணும்னா கடவுள் கூட ஒரு … Continue reading
This gallery contains 6 photos.
பக்கத்து ஊர் வி.ஓ.விடம் விண்ணப்பம் போயிற்று. அவருக்குத் தெரியும் கும்பமுனி சள்ளை பிடித்த எழுத்தாளர் என்று. தலைத்தட்டு வரை பிடி உள்ளவர் என்பதும் தெரியும். மேலும் எங்காவது நேர்காணலில் வில்லங்கமாகப் பேசிவைத்து அது மாவட்ட ஆட்சியாளர் கவனத்துக்குப் போய், களியந்தட்டு விளைக்கு மாற்றல் செய்தால் என்னவென்று எங்கு சென்று முறையிடுவது? மறுபடி ஒரு இடமாற்றத்துக்கு சந்தை … Continue reading
This gallery contains 8 photos.
“எதையும் மொறயாச் செய்யணும் வே! நமக்கு எதுக்கு அரசாங்கத்து பொல்லாப்பு? ஏற்கெனவே நம்ம யோக்யதை கேள்விக்கு உள்ளாயாச்சு. நாளைக்கு எவனும் அறச்சீற்றம் கொண்டு முகநூல்ல எழுதுவான்… கனிமப் பொருள் களவாண்ட கும்பமுனி என்று… அதுக்கும் ஆயிரம் பேரு சொந்த பேரை ஒளிச்சு வச்சுக்கிட்டு லைக் போடுவான்…” தொடரும்….
This gallery contains 13 photos.
”ஒமக்குத் தெரியாதா? மலையாளத்திலே வைக்கம் முகம்மது பஷீர்னு ஒரு பேரு கேட்ட எழுத்தாளர், பேப்பூர் சுல்தான்னு பட்டபேரு… ஒரு பேட்டியிலே சொல்லீருக்காரு, வாசல்ல கிடந்த நாயைக் காணிச்சு –இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கியிருக்குண்ணு” “நீரு அப்பம் பீக்குண்டி சுல்த்தானாக்கும்?” தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி … Continue reading
This gallery contains 6 photos.
கும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர். சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பி செலுத்துவார், பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக. நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு. ……………..(நாஞ்சில்நாடன்) கும்பமுனி கதைகளை இணையத்தில் படிக்க: https://nanjilnadan.com/category/கும்பமுனி/
This gallery contains 11 photos.
பூத்தன உதிரும் … புதியன பூக்கும்… யாவும் சாயும் சாயும் சாயும். சாயுங்காலம், சாயங்காலம்.. சாவுங்காலம்.. சாங்காலம்… என்ன பிரயோசனம், எவனுக்கு மனசிலாகு?? ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான். மற்றையான் செத்தாருள் வைக்கப்படுங்காரு வள்ளுவர். எவனாம் படிச்சிருக்கானா? படிச்சும் என்ன மண்ணாங்கட்டி?
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார் என்றும் உரை எழுத முடியாது. மற்ற நாட்களில் உருக்குத் தேங்காய் நெய். உண்மையில் எள்+நெய் தானே எண்ணெய்? எனவே வாரந்தோறும், சனிக்கிழமையில், எள் நெய் … Continue reading
This gallery contains 1 photo.
பல்கலை கழகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள்… ஹா…ஹா….ஹா….. (கும்பமுனி) தமிழனுக்கு தந்திரம் தாய்பாலில் சுரந்து பிறந்ததில் இருந்தே புகட்டப்படுகிறது…………….(கும்பமுனி)
This gallery contains 1 photo.
பல்வலி பாவிகளுக்குத்தான் வரும். நான் பெரும் பாவி. பல் போனால் ஜொள்ளு போகும், ஆனால் லொள்ளு போகாது ………………………………………………………………..கும்பமுனி
This gallery contains 3 photos.
ஆனால் பெரும் படைப்பாளிகள் எதிர்காலத்தை தொலைதூரத்திற்கு உற்றுப் பார்க்கிறார்கள். நாளைக்குரிய ஒழுக்க அற நெறிகளைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். ஆகவே பல சமயம் சமகாலத்தில் அவர்கள் ஒழுக்க மறுப்பாளர்களாகவும் கலகக்காரர்களாகவும் முத்திரை குத்தப்படுகிறார்கள்; வெறுக்கப்படுகிறார்கள். அச்சமூகம் அதேயளவு முன்னேறிய பின் கண்டடையப்படுகிறார்கள் (ஜெயமோகன்) நாஞ்சில்நாடன் முன்கதை:கும்பமுனி முற்றும். எஸ்.ஐ. சுல்தான்
This gallery contains 11 photos.
அடிப்படையில் கும்பமுனி ஓர் எழுத்தாளர். அதுவும் சிற்றிதழ்களில் எழுதும் நவீன எழுத்தாளர். ஆனால் நாஞ்சில் நாட்டில் சித்த வைத்தியமோ நாடிசோதிடமோ பார்க்கும் ஒரு முதியவரின் மனநிலைதான் அவரிடம் உள்ளது. ஒரு நவீன மனம் அடைவதாகக் கூறப்பட்ட பலவிதமான தத்துவ, ஆன்மீக, சமூகத் தொந்தரவுகள் அவரிடம் இல்லை. எழுதுவதற்குப் பணம் பாராமை, எவரும் தான் எழுதியதைப் படிக்காமை … Continue reading
This gallery contains 6 photos.
தமிழில் மிகக்கனமான சொற்கள் உண்டு. அவற்றில் ஆகக்கனமான சொற்களைத் தெரிந்து படைப்புத் தொழிலை அர்த்தப்படுத்தப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாகவே தமிழ் எழுத்தாளனுக்கு மிகையான சொற்களின் மீது மோகம் உண்டு. மிகையான சொற்களைப்பயன்படுத்தியே மொழியை நாசம் செய்ததில் எழுத்தாளர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. இது புலவர்களிடம் இருந்து அவனுக்கு கிடைத்த மோசமான ஆயுதம் என்று கருதுகிறேன். பல தளங்களில் … Continue reading