Tag Archives: குமுதம் தீராநதி

செத்தாருள் வைக்கப்படும்

This gallery contains 4 photos.

புகழ்பெற்ற நடிகர் எவரும் இறந்து போகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எத்தனை கோடிகள் கருப்புப் பணம் வாங்கி இருப்பார்? எத்தனை கோடிகள் வரி ஏமாற்று செய்திருப்பார்? எத்தனை ஒழுக்கக் கேடுகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருப்பார்?. ‘அந்த நாள் இந்தியாவுக்கு இருட்டாக விடிந்தது’ என்று தலைப்புச் செய்தி போடும் நாளிதழ்கள். ‘இந்திய வானில் நேற்றிருந்த வயிரத் தாரகை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இல்லை, இல்லை, இல்லவே இல்லை!

This gallery contains 1 photo.

மது வேண்டி எவனிடமும் இரந்தேனில்லை எவள் நிதம்ப வாசனைக்கும் விரைந்தேனில்லை கூலிக்காய் எவரையும் நான் புகழ்ந்தேனில்லை சலுகைக்காய் குய்யமெதும் தாங்கவில்லை முன்னுரைக்கும் மதிப்புரைக்கும் அலைந்தேனில்லை தமிழ்த்துறையின் தாழ்வாரம் உருண்டேனில்லை பதிப்பாளர்முன் குனிந்து நின்றேனில்லை விருதுக்காய் பரிசுக்காய் நடந்தேனில்லை சுயசாதி இருக்கைக்காய் நச்சவில்லை சவத்துக்குத் தேசக்கொடி உவந்தேனில்லை எவர்காலும் நக்குவதெம் தமிழும் இல்லை .

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மயிர் பெறுமா உம்முயிர்?

This gallery contains 2 photos.

எந்தப் பொய்யை நம்பணும் என்பது ஊடகத் தேர்வு! மொழியின் திசையைத்  தடத்தைக் கூவி விற்பதும் அவரது தேர்வு! உம்மால் ஆவதொன்றில்லை திறனிருந்தால் காட்டு உன் திக்கை சமை உன் தடத்தை, நிறுவு உன் அடையாளம் அல்லால் முக்காது முனகாது பொத்திக்கிட்டுப் போ!!

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக