Tag Archives: குங்குமம்

காவலன் காவான் எனின் – கைம்மண் அளவு 16

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் அண்மையில் கடலூர் சென்று வந்தேன். 2013 ஜூன் மாதம், வாழ்நாள் சாதனைக்கான, கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ பெறுவதற்காக கனடா சென்றிருந்தபோது திரு.மதிவாணன் குடும்பத்தினருடன் 25 நாட்கள் றொறன்ரோ நகரில் தங்கி இருந்தேன். இந்தியா வந்திருந்த மதிவாணன் மூலம் அவர் குடும்பத்தினருக்குச் சில புத்தகங்கள் அனுப்ப வேண்டிய காரியம் இருந்தது. சித்திரைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு 15- பேரூந்து காமம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் இந்த வயதிலும் மாதம் மூவாயிரம் கிலோ மீட்டர் சராசரியாகப் பேருந்துப் பயணம் எமக்குப் பிழைப்பு. சென்னையும் சென்னை கடந்த ஊர்களும் என்றால் ரயில் மார்க்கம். நம்மையும் இலக்கியவாதி என்று எவரும் கருதினால், தூர தேசப் பயணங்களுக்கு வான்வழி. சொந்தச் செலவில் எங்கு போவதானாலும் பேருந்துதான்.  சொகுசுப் பேருந்துக்கு மாற்றாக, சற்று காசு மிச்சமாகுமே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கைம்மண் அளவு 14, துருப்பிடித்த பேரூந்துகள்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் நாகர்கோயில் போயிருந்தேன் அண்மையில். நாகர்கோயிலா அல்லது நாகர்கோவிலா என்றொரு வழக்குண்டு இன்னமும். அதைத் தமிழறிஞர் தீர்க்கட்டும். ‘நாஞ்சில் நாடன் நாகர்கோயில் போவது அதிசயமா? என்னவோ சுவிட்சர்லாந்து போனதுபோல் சொல்கிறாரே’ என்பார் எமை அறிந்தார். அதுவும் சரிதான். என் 87 வயதுத் தாய் வாழும் ஊர்,  சகோதர சகோதரிகளும் சுற்றமும் வாழும் ஊர். காரணம் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கைம்மண் அளவு13- துருப்பிடித்த வேல்

This gallery contains 2 photos.

நாஞ்சில்நாடன் திருவனந்தபுரத்தில் தம்பானூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே மிகச்சிறந்த சைவ உணவு விடுதி ஒன்றுண்டு. அங்கு செல்லும் நண்பர்களுக்கு அந்த விடுதியை முன்மொழிவேன். அந்நகரில் தங்க நேரிடும் நாட்களில் விரும்பிப் போவதுண்டு அங்கே. விலை, கோவை அல்லது சென்னை விலைகளுக்கு மாற்றுக் குறைந்ததில்லை என்றாலும் உணவின் தரம் உயர்வாக இருக்கும். நெரிசல் மிகுந்த நாட்களில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எப்படி கட்டங்கட்டமா இலக்கியமாக்குறது?

This gallery contains 1 photo.

ஆல்தோட்ட பூபதி நாஞ்சில் சார் மாதிரி கொஞ்சம் எள்ளல் கலந்து சொல்லியாகணும்னா: வெயிலிலும் காற்றிலும் அவ்வப்போது கொட்டும் மழையிலும் இருந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அந்தக் கட்டிடத்தைத் தாங்கி வரும் முழுக்க துருவேறிய தகரக் கூரைகள்.அது இறங்கும் இடத்தில்தான் இருந்தது மில்லின் முதல் கேட். அதன் அருகே, அப்பனே காட்டடா என வயிற்றில் சிவனே வந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு 12 அச்சம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன்… 38 ஆண்டுகளுக்கு முன்பு, பம்பாயில் வாழத் தலைப்பட்ட பிறகு விடுமுறையில் ஒருமுறை சொந்த ஊருக்கு வந்தபோது, எழுத்தாளர் நகுலனை முதன்முறையாக திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். எனது எண்ணிறந்த குருக்கன்மார்களில் அவரும் ஒருவர் அவர் காலமாவது வரை அது தொடர்ந்தது. நான் திருவனந்தபுரத்தில் பெண் கட்டியதும் வசதியாகப் போய்விட்டிருந்தது. ‘அனந்தபுரம்’ என்பதைச் சொல் மாற்றி, நீல.பத்மநாபன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கைம்மண் அளவு 11..இளைய நேயம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் தேச விடுதலை பெற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகே, திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்ட தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரையின் பாதி தாலுகாக்களைக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாயிற்று. இந்த மாவட்டத்துக்காரர்கள் நெடுங்காலம் ரயில் பார்த்தது சினிமாக்களில்தான். திருநெல்வேலி அல்லது திருவனந்தபுரம் போக வேண்டும், ரயிலை நேரில் பார்க்க. புகைவண்டி என்றும், தொடர்வண்டி என்றும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கைம்மண் அளவு..10 பாடலில் பாவம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ரசிகமணி என நேயத்துடன் விளிக்கப்படும், டி.கே.சி என்று அறியப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார் இன்றிருந்தால் வயது 134. அவரது அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக  இருந்தவர் ல.ச எனப்பட்ட வித்வான் ல.சண்முகசுந்தரம். இவ்வாண்டு மார்ச் 24ம் நாள் இரவில், தமது 94வது வயதில் காலமானார். பழுத்த பழம். தமிழ் அவரை அங்ஙனம்  கனியச் செய்திருந்தது. செய்யுளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு(9). அரிச்சந்திர கட்டம்

This gallery contains 2 photos.

அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன் தொடர்புடைய மயான காண்டத்து கட்டத்தை இந்தி யில் ‘ஹரீஷ்சந்திர காட்’ என்கிறார்கள். ‘ஹரீஷ்சந்த்ர’ எனும் பெயர்ச்சொல் தமிழில் தொல்காப்பியர் அனுமதித்த தற்பவம் எனும் இலக்கணப்படி ‘அரிச்சந்திரன்’ ஆயிற்று. கட்டம் என்றால் கோடு என்றும் காட்சி என்றும் சாதாரணமாகப் பொருள் கொள்கிறோம். ஆனால், காட் எனும் வடமொழிச் சொல் தமிழாகிக் கட்டம் என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு..8, கல்லாதவன் கற்ற கவி

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் சில ஊர்களின் பெயர்கள் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ என்றிருக்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்களுக்கு நம்மூர் பெயர்கள் நாவில் வழங்கவில்லை. எனவே, அவர்களின் நாத்திறன் பொருந்தும்படி உச்சரித்தனர்.  ஓவியம்: மருது தூத்துக்குடியை ‘டூட்டுக்கோரின்’ என்றும், திருவல்லிக்கேணியை ‘டிரிப்ளிகேன்’ என்றும், கோழிக்கோடைக் ‘காலிகட்’ என்றும், வதோதராவை ‘பரோடா’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கைம்மண் அளவு…6. – பேரூந்து அனுபவங்கள்

This gallery contains 2 photos.

(‘பல்சான்றீரே பல்சான்றீரே’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் இரு வரிகள்: ‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’‘ நல்ல செயல்களைச் செய்ய இயலாது போனாலும், நல்லது அல்லாத செயல்களைச் செய்யாது ஒழுகுங்கள்) …நாஞ்சில் நாடன் பேருந்து நிறுத்தங்களில் காத்திருப்பது எமக்கு சீலம். அரை நூற்றாண்டாக – அதாவது 18,250 நாட்களில் – தினமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கைம்மண் அளவு.. 5

This gallery contains 2 photos.

(பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பது எந்த குறிப்பிட்ட சாரார்க்கும் தாத்தன், பாட்டன், அம்மாச்சன், அப்பன் சொத்தா? மற்றவர்க்கும் உரிமையானதில்லையா? உலகம் முழுக்க ஒரே மொழியா, ஒரே தத்துவமா, ஒரே கொள்கையா, ஒரே மதமா, ஒரே இசையா, ஒரே பண்பாடா, ஒரே உணவா? அவரவர் கருத்தைச் சொல்ல அவரவர்க்கு உரிமை இல்லையா? என் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு.. 4

This gallery contains 4 photos.

நாஞ்சில் நாடன் ஓவியம்: மருது முப்படையிலும் எமக்கு நண்பர் உண்டு. அவர்கள் முப்படைத் தளபதிகளாக இருத்தல் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நண்பர்களை வாசகர் என்றழைக்கும் இறுமாப்பு இல்லை எனக்கு. முப்படைகளிலும் நண்பர்களை வைத்திருப்பவன் தாகத்துடன் இருக்க மாட்டான். தாகம் தீர்க்கும் நண்பர்களை விடவும் எனக்கு நாலாவித உதவிகள் செய்யும் நண்பர் ஒருவர் உண்டு. விருதுநகர் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கைம்மண் அளவு.. 3

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் காசிக்கு கருத்தரங்குக்குப் போன கதை சொன்னேன். அங்கு நான் கற்றுக்கொண்டதைச் சொல்ல வேண்டாமா? 2014 டிசம்பர் 24ம் நாள் மாலை வாரணாசி வானூர்தித் தளத்தில் இறங்கும்போது மாலை 6 மணி. அப்போது அறிவித்தார்கள் – ‘‘வாரணாசிக்கு வருக! நீங்கள் நற்பேறு செய்தவர்கள்! காலநிலை வெகு வசீகரமாக இருக்கிறது. தற்போதைய தட்பம் 80நீ மட்டுமே!’’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு ..2

This gallery contains 3 photos.

(உலகமெங்கும் பத்து கோடி மக்களின் தாய்மொழி, தமிழ்நாட்டில் மட்டும் ஏழரை கோடி மக்களின் மொழி, அதன் எழுத்தாளர் அகில இந்திய அரங்கில், பத்தாயிரம் மைல்கள் தாண்டிய அயல்மொழியில் உரையாற்றும் அவலம். மிக அவமானமாக இருந்தது எனக்கு. தமிழ் மொழிக்கு என ஓர் நாடு உருவாக இருந்த கனவும் நமது துரோகத்தால் நிர்மூலமாயிற்று. தமிழ் அர்த்தமாகாத, ஆங்கிலமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கைம்மண் அளவு…. குங்குமம் தொடர் ..1

This gallery contains 13 photos.

கற்பது என்பது பாடப் புத்தகம் வாசிப்பது மட்டும் அல்ல. கேட்டுத் தெரிந்து கொள்வதும், பாடப் புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பதும் கல்விதான். எனவேதான் ‘கல்வி கேள்வி’ என்று கேள்வியைக் கல்விக்கு அடுத்து வைத்தனர். ‘கற்றலின் கேட்டல் நன்று’ என்பார்கள். கம்பனை நான் எழுத்தெண்ணி கற்க்கவில்லை. பாடம் கேட்டேன். ‘தனக்கு கற்க்க வாய்ப்பற்றுப் போயிருந்தாலும், கற்றவரைச் சேர்ந்து ஒழுகினால் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்தவாரம் முதல்.. கைம்மண் அளவு

இந்தவாரம் முதல்.. குங்குமம் வார இதழில் , நாஞ்சில்நாடன் எழுதும் கைம்மண் அளவு… தொடர் கட்டுரைகள்

Posted in அனைத்தும், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு.. புதிய தொடர்..

Posted in அனைத்தும், கைம்மண் அளவு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திருப்பு முனை (குங்குமம் பேட்டி)

This gallery contains 10 photos.

த சே ஞானவேல் குங்குமம் 8-10-2012 இதழிலிருந்து படங்கள்: புதூர் சரவணன்

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்