This gallery contains 2 photos.
எஸ் ஐ சுல்தானுக்கு மட்டுமல்ல , இது உங்கள் எல்லோருக்குமான அழைப்பு. அனைவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கிறோம்.
This gallery contains 2 photos.
எஸ் ஐ சுல்தானுக்கு மட்டுமல்ல , இது உங்கள் எல்லோருக்குமான அழைப்பு. அனைவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கிறோம்.
This gallery contains 4 photos.
வீரக்குமார்…ஈரோடு சிவகிரி http://www.veerawritings.blogspot.in/2012/11/blog-post_1374.html வெகுஜன ரசிப்புத்தளத்தில் இருந்து வந்த என் வாசிப்பு அனுபவத்தை இலக்கியப்படுத்திய என் முதல் முன்னோடி நாஞ்சில்நாடன். அவரின்கதைகளைப் பிடித்துக்கொண்டுதான் என் முதல் அடியை தீவிர வாசிப்பின்மாபெரும் கோட்டைக்குள் அடி எடுத்து வைத்தேன். அவருடைய எழுத்தின்தடத்தை ஒட்டியே என் ஆரம்பகால வாசிப்புகளின் ஒப்பீடு இருந்தது.கதைசொல்லலில் அவருக்கிருந்த துல்லியத்தன்மை எனக்குள் பெரும்கிளர்ச்சியை உண்டாக்கியிருந்த காலத்தில் அவரின் கதைகள் மூலமாகவேநான் நாஞ்சில் நாட்டைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை என்மனதுக்குள் உருவாக்கிக் கொண்டேன். தொடர்ந்த அவருடையதான எழுத்தின்வாசிப்பு தந்த உற்சாகத்தின் காரணமாக அவருடைய கதைகளின்களங்களையும் அவரின் கதாபாத்திரங்களையும் பார்த்துவிடவேண்டும் என்றநாடகத்தனமானதொரு எண்ணம் எனக்குச் சிறு செடியைப் போல் முளைவிடத்துவங்கியது. பின்னாளில் அது பெருமரமாய் வளர்ந்து நிற்கையில் நான்நாஞ்சில் நாட்டுப் பயணத்தைத் தீர்மானித்துவிட்டேன். கன்னயாகுமரிமாவட்டத்தின் செழிப்பான பல கிராமங்களின் தொகுப்பேநாஞ்சில் நாடு. அதில் ஒன்று வீரநாராயணமங்களம். நாஞ்சில் நாடனுடையசொந்த ஊர். நாகர்கோவிலிருந்து இறச்சகுளம் சென்று பின் வலம் திரும்பிச்செல்ல ஆரம்பித்தவுடனேயே அவரின் சிறுகதைத் தொகுப்பைத்திறந்துவைத்துப் படிக்க ஆரம்பித்ததைப் போன்ற உணர்வு உண்டானது. அவரின் கதாபாத்திரங்களான சின்னத்தம்பியா பிள்ளையும் பூதலிங்கம்பிள்ளையும் பூமணியும் வழியெங்கும் குறுக்கிட்டார்கள். அவர் விரித்துவிரித்து எழுதிய நெர்கதிர் வயல்வெளிகளும் நீலப்பச்சை மலைக் குன்றுகளும்சிதிலப்பட்ட தார்ச்சாலைகளும் வரவேற்க, வீரநாராயணமங்களம் நோக்கிமெல்ல நகர்ந்தேன். வழக்கமாக சின்னத்தம்பியா பிள்ளை குளிக்கும் பழையாறு கிளை பிரிகின்றஇடத்தை திருவிதாங்கூர் மகாராஜா காலத்து சுடு செங்கல் சுண்ணாம்புக்காரைப்பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்தேன். சிதைபட்ட பாலத்தில் வேலைநடந்து கொண்டிருந்தது. அவர் எழுதின படி அப்பொழுதும் பிள்ளைமார்களும்சின்னஞ்சிறார்களும் குளித்துக் கொண்டுதானிருந்தார்கள். வீரநாராயணமங்களம் வந்தவுடன் முதலில் தென்பட்டது அவர் படித்த அந்தப்பள்ளி. நவீன தமிழ் இலக்கியச் சூழலின் ஒரு தவிர்க்க முடியா ஆழுமையைத்தந்த அந்த ஆரம்பப்பள்ளியையும் அதன் அருகிலேயே ஓடிய வாய்க்காலின்படித்துறையையும் பக்கத்தில் உயர்ந்திருந்த ஆழமரத்தையும்வியப்புடன்பார்த்துக் கொண்டு நின்றேன். கதைகளின் வழியே எனக்குள் பதிந்திருந்தஅத்தனை உறுப்புகளும் என் கண்முன்னே நிஜமாக விரிந்து நின்ற அந்தத்தருணங்கள் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குறுக்கிட்டஒருவரிடம் –ஒருவேளை மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம்பேயாகத் தெரிவது போலவோ என்னவோ, அவர் கூட ‘எடலக்குடிராசா’போலவே இருந்தார். – … Continue reading
This gallery contains 1 photo.
வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் … Continue reading
This gallery contains 1 photo.
– சரா http://news.vikatan.com/index.php?nid=6000 ‘தீதும் நன்றும்’ மூலம் வெகுவாக கவனத்தை ஈர்த்தவரும், ‘சூடிய பூ சூடற்க’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம், ‘பனுவல் போற்றுதும்’. சென்னைப் புத்தகக் காட்சியில், வாசகர்கள் வாங்கிய தமது புத்தகங்களில் கையெழுத்திட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம், 10 புத்தங்களைப் பரிந்துரைக்கக் கேட்டபோது, … Continue reading
This gallery contains 13 photos.
தன்னம்பிக்கை அற்ற, நோக்கத் தெளிவற்ற அல்லது நோக்கமேயற்ற, முயற்சி அற்ற, கடும் உழைப்பு அற்ற, பழமையில் மரியாதையும் புதுமை எதுவென்ற பிரித்தறி ஆற்றலும் அற்ற இந்தச் சமூகம் நேற்றைச் சுமந்துகொண்டு நாளையை நோக்கி நகரப் பிரயத்தனப்படுகிறது. இந்தச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட சிலருக்கு அது புலப்படுகிறது. ஆனால் வெகுசனத்துக்குப் புலப்பட வேண்டும். தன் … Continue reading
ஜெயமோகன் முந்தைய பகுதிகளுக்கு: கமண்டல நதி தொடரும்…
இந்த வாரம் : நாஞ்சில் நாடன் வாயு வேகம் மனோ வேகமாக நினைவு பின்னோக்கிப் பாய்கிறது. ‘எடுத்தது கண்டார்… இற்றது கேட்டார்’ எனச் சொல்லும் கம்பனின் விரைவு. தோளில் கிடந்த உத்தரீயம் காற்றில் பறந்து கீழே விழுந்ததை எடுக்க இறங்கியபோது நள மகாராஜனின் புரவி நூறு காதம் கடந்து போய்விட்டதுபோல் மனதின் வேகம். … Continue reading
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தன் ஊர் வீரநாராயணமங்கலம்பற்றியும், தன் குதூகல இளமைப் பருவம் பற்றியும் இங்கே மனம் திறக்கிறார். ”நாகர்கோவில் பக்கத்துல ‘வீரநாராயணமங்கலம்’ கிராமம்தான் என் ஊர். மொத்தமே 120 வீடுங்கதான் இருக்கும். பெரும்பாலும் சொந்தக்காரங்களா இருப்பாங்க. உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடுவாங்க. நாஞ்சில் நாட்டில் தி.மு.க வேர்விட்ட காலத்துல, … Continue reading
( நெல்லையில் 30.01.2011 அன்று , சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமை வகித்து தி.க.சி நிகழ்த்திய உரை ) அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களே .. வணக்கம் . சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்குவதில் … Continue reading
ஜெயமோகன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/03/21/ஜெயமோகன்கண்டகும்பமுனி/ 2 ஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் … Continue reading
ஜீவானந்தன் (’நதியின் பிழையன்று௦ நறும்புனல் இன்மை’ கட்டுரை தொகுப்புக்கு முன்னுரை) ..
தினமலர் -அங்காடித் தெரு- ரசனை பல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட மாமிசத் துண்டு போல் உறுத்தாமல், எச்சில் பண்டத்தை தட்டி பறிக்கும் நண்பனின் நேசத்தைப் போல் இயல்பானது நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள். இவருடைய ‘சூடிய பூ சூடற்க’ என்கிற சிறுகதை தொகுதிக்கு, இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் தொடர்ந்து பாராட்டு விழாக்களில் கலந்து … Continue reading
”நூற்றாண்டு தமிழ் சாதனை’-சிறப்புமலர் 2000ல் நாஞ்சில் நாடனின் கட்டுரை’ எனது படைப்புலகம்’ பாகம் 1/3 2ம் பாக தொடர்ச்சிக்கு :. https://nanjilnadan.wordpress.com/2011/02/16/எனது-படைப்புலகம்-23/
எட்டுத் திக்கும் மதயானை புத்தகத்தின் முன்னுரையில் நாஞ்சில் நாடன், டிசம்பர் 9, 1998
நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது ஏதோ எனக்கே கிடைத்ததைப்போல ஒரு சந்தோஷம். நாஞ்சில் நாடனின் கதாநாயகர்களின் சிந்தனையும் என்னுடையதும் எப்போதும் ஒத்துப்போவது போல ஒரு தோணல். நாஞ்சில் நாட்டிற்கே உரிய எள்ளல் மிகுந்த அவரின் நடை, பெண் பயணிகள் சிறுநீர் கழிக்க அவர்களுக்கு இருக்கிற பிரச்சினைகள், சதை வியாபாரம் செய்கிற பத்திரிக்கைகள் என்று பல சமூக பிரச்சனைகளிலும் … Continue reading
ஒவ்வொரு முறையும் சாகித்ய அகாடமி விருது பற்றி பேச்சுக்கள் கிளம்பும் போதேல்லாம் நாஞ்சில் நாடன் பெயர் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். 1998 இல் வெளியான இவரின் ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவலுக்கே சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு அவரின் “சூடிய பூ சூடற்க” என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாடமி விருது இவரை சாகித்யம் … Continue reading
http://picasaweb.google.com/lh/sredir?uname=dskumar.science&target=AL… Invitation to view Senthil Kumar Devan’s Picasa Web Album – Nanjil 3-jan-2011
இதுவரை சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள ஜெயகாந்தன், அசோகமித்ரன் உள்ளிட்ட படைப்பாளிகள் வரிசையில் இடம்பெறும் நாஞ்சில் நாடனை, படைப்புலகம் பாராட்டி மகிழ்கிறது. கவிஞர் மனுஷ்யபுத்திரன்: கடந்த சில ஆண்டுகளாக சாகித்ய அகடமி விருது பொருத்தமற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது என்கிற சர்ச்சை நிலவி வந்தது. ஆனால், நாஞ்சில் நாடனுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம், இந்த சர்ச்சை … Continue reading
அக்கரை ஆசை நாஞ்சில்நாடன் ”தீதும் நன்றும்” உலகமயமாதலால் உலகமே சிறியதோர் கிராமம். எல்லாம் இங்கேயே கிடைக்கின்றன. இப்போது வெளிநாடு போவோர்,தாம் தங்கும் மாதங்களைக் கணக்கிட்டு சோப்பும், பேஸ்ட்டும், க்ரீமும் இங்கிருந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். காரணம், விலையும் மலிவு… தரமும் உண்டு. மேலும், விமானத்தில் குறைந்தது 20 கிலோ அனுமதிப்பார்கள். அரேபியா போகும் புத்திசாலி … Continue reading