This gallery contains 1 photo.
மது வேண்டி எவனிடமும் இரந்தேனில்லை எவள் நிதம்ப வாசனைக்கும் விரைந்தேனில்லை கூலிக்காய் எவரையும் நான் புகழ்ந்தேனில்லை சலுகைக்காய் குய்யமெதும் தாங்கவில்லை முன்னுரைக்கும் மதிப்புரைக்கும் அலைந்தேனில்லை தமிழ்த்துறையின் தாழ்வாரம் உருண்டேனில்லை பதிப்பாளர்முன் குனிந்து நின்றேனில்லை விருதுக்காய் பரிசுக்காய் நடந்தேனில்லை சுயசாதி இருக்கைக்காய் நச்சவில்லை சவத்துக்குத் தேசக்கொடி உவந்தேனில்லை எவர்காலும் நக்குவதெம் தமிழும் இல்லை .