Category Archives: விகடன் கதைகள்

சிறுவர் செடி வளர்ப்போம்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் இன்று  ஒன்று நன்று!  (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம் ! நாஞ்சில் நாடன் பேசுகிறேன் ! கோவையில், பெரிய கல்யாணங்களுக்குப் போனால், மணமக்களை வாழ்த்தி, சாப்பிட்டுத் திரும்பும் பொது, தாம்பூலப் பையில் ஒரு தாவரக் கன்று தருகிறார்கள்.  சில பெரிய துணிக்கடைகளிலும் துணி வாங்கித் திரும்பும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாரத தேசமென்று தோள் தட்டுவோம்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் ! தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் ! சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை,  அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பெருந்தவம்- (முழுக் கதை)

நாஞ்சில்நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடனும் ஒரு சிறுகதையும்

This gallery contains 4 photos.

வீரக்குமார்…ஈரோடு சிவகிரி http://www.veerawritings.blogspot.in/2012/11/blog-post_1374.html வெகுஜன ரசிப்புத்தளத்தில் இருந்து வந்த என் வாசிப்பு அனுபவத்தை இலக்கியப்படுத்திய என் முதல் முன்னோடி நாஞ்சில்நாடன். அவரின்கதைகளைப் பிடித்துக்கொண்டுதான் என் முதல் அடியை தீவிர வாசிப்பின்மாபெரும் கோட்டைக்குள் அடி எடுத்து வைத்தேன். அவருடைய எழுத்தின்தடத்தை ஒட்டியே என் ஆரம்பகால வாசிப்புகளின் ஒப்பீடு இருந்தது.கதைசொல்லலில் அவருக்கிருந்த துல்லியத்தன்மை எனக்குள் பெரும்கிளர்ச்சியை  உண்டாக்கியிருந்த காலத்தில் அவரின் கதைகள் மூலமாகவேநான் நாஞ்சில் நாட்டைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை என்மனதுக்குள் உருவாக்கிக் கொண்டேன். தொடர்ந்த அவருடையதான எழுத்தின்வாசிப்பு தந்த உற்சாகத்தின் காரணமாக அவருடைய கதைகளின்களங்களையும் அவரின் கதாபாத்திரங்களையும் பார்த்துவிடவேண்டும் என்றநாடகத்தனமானதொரு எண்ணம் எனக்குச் சிறு செடியைப் போல் முளைவிடத்துவங்கியது. பின்னாளில் அது பெருமரமாய் வளர்ந்து நிற்கையில் நான்நாஞ்சில் நாட்டுப் பயணத்தைத் தீர்மானித்துவிட்டேன். கன்னயாகுமரிமாவட்டத்தின் செழிப்பான பல கிராமங்களின் தொகுப்பேநாஞ்சில் நாடு. அதில் ஒன்று வீரநாராயணமங்களம். நாஞ்சில் நாடனுடையசொந்த ஊர். நாகர்கோவிலிருந்து இறச்சகுளம் சென்று பின் வலம் திரும்பிச்செல்ல ஆரம்பித்தவுடனேயே அவரின் சிறுகதைத் தொகுப்பைத்திறந்துவைத்துப் படிக்க ஆரம்பித்ததைப் போன்ற உணர்வு உண்டானது. அவரின் கதாபாத்திரங்களான சின்னத்தம்பியா பிள்ளையும் பூதலிங்கம்பிள்ளையும் பூமணியும் வழியெங்கும் குறுக்கிட்டார்கள். அவர் விரித்துவிரித்து எழுதிய நெர்கதிர் வயல்வெளிகளும் நீலப்பச்சை மலைக் குன்றுகளும்சிதிலப்பட்ட தார்ச்சாலைகளும் வரவேற்க, வீரநாராயணமங்களம் நோக்கிமெல்ல நகர்ந்தேன். வழக்கமாக சின்னத்தம்பியா பிள்ளை குளிக்கும் பழையாறு கிளை பிரிகின்றஇடத்தை திருவிதாங்கூர் மகாராஜா காலத்து சுடு செங்கல் சுண்ணாம்புக்காரைப்பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்தேன். சிதைபட்ட பாலத்தில் வேலைநடந்து கொண்டிருந்தது. அவர் எழுதின படி அப்பொழுதும் பிள்ளைமார்களும்சின்னஞ்சிறார்களும் குளித்துக் கொண்டுதானிருந்தார்கள். வீரநாராயணமங்களம் வந்தவுடன் முதலில் தென்பட்டது அவர் படித்த அந்தப்பள்ளி. நவீன தமிழ் இலக்கியச் சூழலின் ஒரு தவிர்க்க முடியா ஆழுமையைத்தந்த அந்த ஆரம்பப்பள்ளியையும் அதன் அருகிலேயே ஓடிய வாய்க்காலின்படித்துறையையும் பக்கத்தில் உயர்ந்திருந்த ஆழமரத்தையும்வியப்புடன்பார்த்துக் கொண்டு நின்றேன். கதைகளின் வழியே எனக்குள் பதிந்திருந்தஅத்தனை உறுப்புகளும் என் கண்முன்னே நிஜமாக விரிந்து நின்ற அந்தத்தருணங்கள் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குறுக்கிட்டஒருவரிடம் –ஒருவேளை மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம்பேயாகத் தெரிவது போலவோ என்னவோ, அவர் கூட ‘எடலக்குடிராசா’போலவே இருந்தார். – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பெருந்தவம்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இன்று ஒன்று நன்று (முதல் நாள்)

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)                                                ………………………தொடரும்

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

இன்று… ஒன்று… நன்று!

This gallery contains 2 photos.

                நாஞ்சில்நாடன் விகடன் வாசகர்களுக்கு வணக்கம்… ‘இன்று… ஒன்று… நன்று!’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் இந்த நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே… நமக்குள்ள பரிமாறிக்க!  நம்ம சந்ததிகள் நல்லா இருக்கணும், எல்லா வளங்களும் பெறணும்னு ஆசைப்படுறோம். அதுக் காக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பின்பனிக்காலம்

நாஞ்சில் நாடன் (‘அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ! இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே! நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!’) ஆனந்த விகடன் புகைப்படம்:-  nellaieruvadi.com எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சங்கிலிப் பூதத்தான்

This gallery contains 16 photos.

  நாஞ்சில் நாடன் பெயர் சங்கிலிப் பூதத்தான் என்றாலும் அழைப்பது சங்கிலிப் பூவத்தான் எனும் மருவிய வழியில்தான். நீங்கள் எண்ணுவதுபோல, பூதத்தாழ்வானுக்கும் பூதத்தானுக்கும் எத்தொடர்பும் இல்லை. பூதத்தாழ்வான் வைணவ அடியான், காலத்தால் பிற்பட்டவன்.கடல் மல்லையில் அவதரித்து நூறு பாசுரங்கள் அருளிச் செய்தவன். பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. பூதம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தாலிச்சரண்

This gallery contains 14 photos.

நாஞ்சில் நாடன் நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற தாலிகட்டுக்கள் அதற்கு முன்பும் நடந்திருக்கும். பின்பும் நடக்குமாக இருக்கும். கிழக்குப் பார்த்து விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது.  கிழக்கென்பது அனுமானம் தீர்மானித்தது. காங்கிரீட் அடுக்குப் பெட்டிகளுக்குக் கிழக்கும் மேற்கும் என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் போல. ஆனால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நானும் விகடனும்!

இந்த வாரம் : நாஞ்சில் நாடன்     வாயு வேகம் மனோ வேகமாக நினைவு பின்னோக்கிப் பாய்கிறது. ‘எடுத்தது கண்டார்… இற்றது கேட்டார்’ எனச் சொல்லும் கம்பனின் விரைவு. தோளில் கிடந்த உத்தரீயம் காற்றில் பறந்து கீழே விழுந்ததை எடுக்க இறங்கியபோது நள மகாராஜனின் புரவி நூறு காதம் கடந்து போய்விட்டதுபோல் மனதின் வேகம். … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ யாமுல ஆடி பூவெடுக்க! விகடன் பேட்டி

  சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தன் ஊர் வீரநாராயணமங்கலம்பற்றியும், தன் குதூகல இளமைப் பருவம் பற்றியும் இங்கே மனம் திறக்கிறார்.  ”நாகர்கோவில் பக்கத்துல ‘வீரநாராயணமங்கலம்’ கிராமம்தான் என் ஊர். மொத்தமே 120 வீடுங்கதான் இருக்கும். பெரும்பாலும் சொந்தக்காரங்களா இருப்பாங்க. உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடுவாங்க. நாஞ்சில் நாட்டில் தி.மு.க வேர்விட்ட காலத்துல, … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடன் கதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காடு

 நாஞ்சில் நாடன் 0

Posted in இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாம்பு

புலமைக்காய்ச்சல். இது சங்கடமான ஒன்றுதான். ஆனால் தவிர்க்கவே முடியாது . எழுதுபவனுக்கு தன் எழுத்து மிக மிக அந்தரங்கமானது . அந்த அந்தரங்கத்தன்மை காரணமாகவே அவனால் அது குறித்து ஒரு உணர்ச்சி சமநிலை கொள்ள இயல்வது இல்லை . நல்ல படைப்பை யார் எழுதக் கண்டாலும் எழுத்தாளனுக்கு வயிறு சற்று எரியும் என்றுதான் நான் எண்ணுகிறேன். … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பரிசில் வாழ்க்கை

நாஞ்சில் நாடன் ஊருக்கு மேல் கையில் நீர் வளம் ததும்பிய தலங்களில் இருந்தன சாத்தாங்கோயில்கள். ஆற்றங்கரை குளத்தங்கரை போக சில சமயம் தோப்புகள்,திரடுகள்,விளைகள் நடுவிலும், அபூர்வமாக வயற்காடுகளின் திட்டுக்களிலும் சாத்தா நிலை கொண்டிருப்பார். சாத்தாங்கோயில் என்பதுதான் வழக்கு.மற்றபடி கிறிஸ்துவின்,என்று நீ அன்று நான் உன் எதிரி அல்லவோ எனும் நிரந்தரமான எதிரியான சாத்தானின் கோயில் எனப் … Continue reading

Posted in இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தன்ராம் சிங்

 நாஞ்சில் நாடன் சிங் எனும் துணைப்பெயர்  கொண்டவரெல்லாம்  பஞ்சாபி என எண்ணிக்கொள்ள வேண்டாம். தன்ராம் சிங் பஞ்சாபி அல்ல. கேட்டால் அவன் தன்னை நேப்பாளி என்பான். அவர்களுக்கும் சிங் என்று துணைப்பெயர் உண்டு. ஆனால் உண்மையில் தன்ராம் சிங் திபேத்துக்காரன். நேப்பாளி என்று சொன்னால் வடநாட்டில் சமூக அங்கீகாரம் சற்று அதிகம் என்பதை உங்களுக்குத் தெரியச் … Continue reading

Posted in நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

கொங்கு தேர் வாழ்க்கை

நாஞ்சில் நாடன் லைன் வீடென்று சொல்வாரிங்கு. ஒருவேளை சென்னையின் ஸ்டோர் வீடுகள் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை. முதலில் நாற்பது அடி அகலமும் அறுபதடி நீளமும் கொண்ட காலிப் புரையிடம் ஒன்றை நினைவில் கொண்டுவரலாம். அதாவது ஒரு கிரவுண்ட் அல்லது ஐந்தே கால் சென்ட். தெருவில் இருந்து மனையின் அகலப் பக்கத்தின் நடுவில் முன்வாசல். தொடர்ந்து ஐந்து … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஆத்மா (விகடன் … முழு கதை)

ஆத்மா நாஞ்சில் நாடன்  ஆவணங்களில் அவர் பெயர் பீதாம்பர் பாண்டுரங்க்நாத்ரே. இதில் பீதாம்பர் அவர் பெயர், பாண்டுரங்க் என்பது தகப் பனார். நாத்ரே என்பது குலப் பெயர். குலப் பெயரைவைத்து சாதியைத் தெரிந்துகொள்ளலாம் எனினும், குலப் பெயர் சாதிப்பெயர் அல்ல. Sur Name என்பர் வடவர் புலங்களில். நம்மில் நாடார், செட்டியார், தேவர், கவுண்டர்போல் அல்ல; மராத்தியத்தில் குல்கர்னி, … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

கான் சாகிப்(2)

This gallery contains 5 photos.

நாஞ்சில் நாடன் முன் கதை;  கான் சாகிப் (1)      கான் சாகிப்(3)

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கான் சாகிப் (1)

This gallery contains 6 photos.

தனிமையில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துகொண்டிருக்கு அலுத்துப்போய் கால் போன போக்கில் போகிற அனுபவம் அலாதியானது. அப்போது தனக்கு கொஞ்சம் இலக்கியமும் தன்னோடு கூடவருபவருக்கு நிறைய்ய இலக்கியமும் தெரிந்து இருப்பது எவ்வளவு  சிலாக்கி யமான விஷயம் என்பதை நாஞ்சில் நாடன் அசத்தலாக எடுத்துவைக்கிறார்.கான்சாஹிப்போடு சேர்ந்து சுற்றிய தெருக்கள்,பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், மனிதர்கள், ,சிகப்பு விளக்குத்தெருவும் பெண்களும் என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பேச்சியம்மை

பேச்சியம்மை மூன்று நாட்களாக விடாத அடைமழை. வானம் வெளிவாங்காமல் மூடாக்குடன் இருந்தது. நடுப்பகலில் இரவு ஏழு மணி ஆனது போல இருள் மயக்கம். வீடுகள், கோயில்கள், மண்டபங்கள் யாவும் கழுவிவிட்டது போல் ஈரத் துலக்கம். மழைத் தண்ணீர் புழுதி அரித்து ஓடி, தெரு மணல் மினுங்கக்கிடந்தது. தெருவில் பள்ளம் நோக்கி ஓடும் தண்ணீர் இரண்டு கை … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நீலவேணி டீச்சர்

நாஞ்சில் நாடனின் “தெரிவை” ‘நீலவேணி டீச்சர் ‘ சிறுகதை http://tvrk.blogspot.com/2010/03/blog-post_05.html வார இதழ்களில் சிறுகதைகளே அதிகம் வருவதில்லை என வாசகர்கள் சொல்வதும்..சிறுகதைகள் இப்போதெல்லாம் அதிகம் படிக்கப்படுவதில்லை என இதழ் ஆசிரியர்கள் தரப்பு சொல்வதும் வாடிக்கையாய் விட்டது.ஆனால் பல சிறுகதைகள் இன்னமும் நம்மால் மறக்கப் படாமல் மூளையின் ஒரு ஓரத்தில் சப்பணம் போட்டு அமர்ந்துக் கொண்டு இருப்பது … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்