This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் ……
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் ‘கண்ணீரும் கம்பலையும்’ எனும் சொற்றொடரின் கம்பலை எனும் சொல் தேடிப் புறப்பட்ட போது, அது என்னைத் தொல்காப்பியம் வரை நடத்திச் சென்றது. கம்பலை எனும் தலைப்பில் முழுநீளக் கட்டுரை எழுதவும் தூண்டியது. அதுவே பிறகெனது கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்புமாயிற்று. அஃதே போன்று கருதித்தான் கால் பெயர்த்தேன் ‘கத்தி கப்படா’ எனும் சொற்றொடர் … Continue reading
This gallery contains 1 photo.
நமக்கென்ன அதைப்பற்றி? “மயிரே மாத்திரம் என்று போய்விடலாம் நாம். சோலி மயிரைப் பாருவே! என்றிருக்கலாம். ‘மயிருக்கு சமானம்’ என்று நினைக்கலாம். “மயிராச்சு” என்று அலட்சியப் படுத்தலாம். “மயிரு மண்ணாங்கட்டீண்ணுட்டு. வேற பொழப்பு மயிரு இல்ல பாரு என்று புறக்கணிக்கலாம். “மயிரைச் சுட்டுக் கரியாக்க முடியுமா டே? எனலாம். இது வெறுமன முட்டைக்கு மயிரு புடுங்கப்பட்ட வேலை … Continue reading
This gallery contains 1 photo.
“மாரி வாய்க்க!” நாஞ்சில் நாடன் பதிற்றுப் பத்து என்னும் நூலின் எட்டாம் பத்துப் பாடிய புலவர் அரிசில் கிழார் மட்டுமே பாட்டும் தொகையும் எனும் பதினெட்டு சங்க இலக்கிய நூல்களில் தகடூர் எனும் சொல்லை ஆண்டிருக்கிறார். அன்றைய தகடூர்தான் இன்றைய தர்மபுரி என்பதை நான் அறிந்துகொண்டேன். அதை அறிந்துகொள்ளக் காரணமாக இருந்தவர் கால் நூற்றாண்டுக்கு முன்பெனக்கு … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில்நாடன் கட்டுரை ஓசைபெற்று உயர் பாற்கடல் பல அரிய செய்திகளை அறிவிக்கிறது. இசை கேட்பதென்பது வலிய பல மன அழுத்தங்களில் இருந்து விடுதலை. எழுத வாசிக்க முனைகையில் மனம் குவியவும் என அவர் எழுதுவது அனுபவித்தவர்களுக்குப் புரியும்.ஒருவருக்கு சபாபதி. மற்றொருவருக்கு ராமன் என்று மிகத் தெளிவாக எளிதாக நாஞ்சில் கூறும்போது பரவசப்படுகிறோம். அவர் வட இந்திய இசையையும் ரசித்திருக்கிறார் … Continue reading
This gallery contains 9 photos.
தினமணி தீபாவளி மலர் 2020 நம்மைப் பற்றி, பிறர் எண்ணுகிற கெட்ட எண்ணங்கள் கூடச் செடியெனக் கொள்ளப்படலாம். ஏதாகிலும் செடியாய வல்வினைகளையும் தீர்ப்பதால்தான் அவன் இறைவன். இறைவன் என்பவன் எம்மதத்துக் கடவுளாகவும் இருக்கட்டும். அவன் செடியாய வல்வினைகள் போக்குபவன்.
This gallery contains 1 photo.
ஆவநாழி நாஞ்சில் நாடன் காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது சித்தர் பாடல், “வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமத்திருப்பார் இச்சரக்கை? என்பது தனிப்பாடல், ஈண்டு காயம் எனும் சொல்லின் பொருள் உடல், காயகல்பம் எனும் சொல் கேள்விப்பட்டிருக்கலாம். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில் ஒரு பாடல், “படிவட்டத் … Continue reading
This gallery contains 1 photo.
கர்நாடக சங்கீதம் என்று பரவலாக அறியப்படுகிற தென்னிந்திய இசையினை முறையாகக் கற்கும் பேறு பெற்றவனில்லை. பள்ளி நேரம் அல்லாத வேளைகளில் வயிற்றுப் பாட்டுக்காகக் கூலி வேலைக்குப் போகிறவன், இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆடும் நோக்கத்துடன் இலக்கங்கள் பல ஆண்டுக்குக் கொடுத்து பயிற்சி பெற முடியாதல்லவா? ஆனை தூறுகிறது என்று ஆட்டுக்குட்டி தூறினால் அண்டம் கீறிப் போகாதா? … Continue reading
This gallery contains 2 photos.
முனியும் முனியும் – நாஞ்சில் நாடன் அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி எனச்சில அற்புதமான நாவல்களை எழுதிய எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்புகள் ‘பிறிதொரு நதிக்கரையில்’ தொடங்கி சில உண்டு. அவற்றுள் ஒன்றின் தலைப்பு முனிமேடு. யாவுமே தமிழினி வெளியீடுகள். நமது தீப்பேறு யாதெனின் முதல்தரத்து நூல்கள் எவையும் விருதுகள், பரிசுகள், கௌரவங்களைத் தீர்மானிக்கிறவர் கண்களில் படவே மாட்டா! ஏனெனில் முதல்தரத்துப் படைப்பாளிகள் எவருமே ஆள்பிடிக்க … Continue reading
This gallery contains 2 photos.
நாஞ்சில் நாடன் முத்து, வித்து, சொத்து, சத்து, பித்து, மத்து என்பல போல் ஒலிக்கும் இன்னொரு சொல் தத்து. திசைச் சொல்லோ, திரி சொல்லோ, வட சொல்லோ அல்ல. இயற்சொல்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடன் வாழும் செந்தமிழ்ச்சொல். என்றாலும் தமிழ் கற்ற கர்வத்துடன் வினவுகிறேன் ஐயா! தத்து என்றால் என்ன பொருள்? இந்த இடத்தில் கட்டுரை … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் பதாகை – ஆகஸ்ட் 2020 எனக்கின்று ஓர்மையில் இருக்கும் திருக்குறளில் பாதிக்கு மேல் ஆறாம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் பயின்றவை. தமிழ்நாட்டு அரசியல் அறிவுச் சூழலுக்கு இயைந்து எனக்குமோர் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ பட்டம் தரலாம். ஆறாவது முதல் எட்டாவது வரை ஒழுகினசேரி எங்கோடிச் செட்டியார் தமிழாசிரியர். ஒன்பது முதல் பதினொன்று வரை தாழக்குடி மாதேவன் … Continue reading
This gallery contains 2 photos.
பழைய சினிமாக்களில், கதைகளில், பெற்ற தாய் அடம்பிடிக்கிற, சேட்டை செய்கிற மகனைப் பார்த்துப் “பொலி போட்டிருவேன்” எனச் சினந்து உரைப்பதைக் கேட்டிருப்போம். அந்தச் சொற்றொடர் எம்மண்ணின் பிறப்பு அல்ல. மாறாக, “வெட்டிக் கூறு போட்டிருவேன்” அல்லது “கொண்ணே போட்டுருவேன்” என்பார்கள். முரண்டு பிடிக்கும் சொந்தப் பிள்ளைகளை வெருட்டும்போது இந்தப் பொலி போடுதல், வெட்டிக் கூறு போடுதல், … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் பெற்ற தாய்த்திருநாட்டில் தாத்தா, மாமா, தாதா, தந்தை, அண்ணா, அம்மா என்றழைக்கப்பட்ட தலைவர் உண்டு. ஒவ்வொன்றும் ஓரோர் குணச்சித்திரம். தீவிரமாகத் தொல்லிலக்கியம் வாசிக்கத் தொடங்கிய பிறகு அம்மை என்ற சொல் எனக்கு நினைவுறுத்துவது காரைக்கால் அம்மையாரை. சர்வ நிச்சயமாக என்னைப் பெற்ற அம்மை சரசுவதிக்கு அடுத்தபடியாக. அம்மா என்பதுவே அம்மே, அம்ம, அம்மை, மா, மாம், மாயி, மையா. நாம் அம்மை என்றெழுதினால் அரைவேக்காட்டுத் திறனாய்வாளர்கள் அது மலையாளம், வட்டார வழக்கு என்பார். அம்மா, அம்மே, அம்ம என்பன அசைச் … Continue reading
This gallery contains 2 photos.
நாஞ்சில் நாடன் சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி விடுமுறை நாளொன்றில் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தேன். பல காலமாக நமக்குப் படிக்காத நாளெல்லாம் பிறவா நாளென்று ஆகிவிட்டது. அண்மையில் கோவை மாநகரில் 88 வயதான மூத்த படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், பறவைகள் ஆய்வாளர் பேராசிரியர் க. ரத்தினம் அவர்களின் பாராட்டு விழாவுக்குப் போயிருந்தேன். பாரம்பரியம் மிக்க அரசு கலைக் … Continue reading
This gallery contains 2 photos.
நாஞ்சில் நாடன் தருமமிகு சென்னையில் இருந்து எமது நாற்பதாண்டு குடும்ப நண்பர் வைத்தியநாதன் காலையில் கூப்பிட்டார். அவரைச் சிறிதாக அறிமுகம் செய்வதானால், அவர் மதுரை மகா வைத்தியநாதய்யரின் தம்பியின் கொள்ளுப் பேரன். அவர் பெயரைத்தான் இவருக்கு வைத்திருக்கிறார், இவரது தந்தை சென்னையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சிவசாமி ஐயர். நன்னூல் மனப்பாடமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். பழந்தமிழ் நூல்களில் நல்ல பயிற்சி உண்டு. சென்னை மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக … Continue reading
This gallery contains 1 photo.
Suresh Subramani விசும்பின் துளி – நாஞ்சில் நாடன் ~~~~ புகழ்பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குறித்த அறிமுகம் வாசகர்களுக்கு தேவையில்லை.அந்தளவிற்கு படைப்புலகில் பிரபலம் பெற்றவர் அவர். ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நேர்காணல்கள் என தமிழிலக்கியப் பரப்பில் அவரின் இலக்கியப்பணி பரந்து விரிந்து உள்ளது. இது இவரின் பதிமூன்றாவது கட்டுரை நூல். இவரின் கட்டுரைகள் … Continue reading
This gallery contains 1 photo.
தினமும் காலையில் கண்விழித்ததும் ஐம்பது அறுபது வாட்ஸ் ஆப் செய்திகள் கண்ணுறலாம். எனக்கென்றில்லை, யாவர்க்கும். ஈசன் அடி போற்றும், எந்தை அடி போற்றும், நேசன் அடி போற்றும், சிவன் சேவடி போற்றும், நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றும், மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றும், தேவார-திருவாசக மற்றும் சைவத் திருமுறைகளின் பாடல்கள் வரும். விதவிதமான சிவ மூர்த்தங்களும் … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் சிறு பிராயத்தில் ஊரில் பலரையும் தாத்தா, போத்தி, பாட்டா என விளித்திருக்கிறேன். ‘கானாங் கோழிக்குக் கழுத்திலே வெள்ளை, கடுக்கரைப் போத்திக்குப் புடுக்கிலே வெள்ளை’ என்று பாடியும் நடந்திருக்கிறோம். கறுத்த போத்தி, சோளாங்காடிப் பாட்டா, பழவூர்த் தாத்தா என்று, அவர்களின் பிதுரார்ஜிதப் பெயரறியாமல் சுய ஆர்ஜிதப் பெயராலேயே விளித்திருக்கிறோம். ஆனால் சொந்தமாகத் தாத்தா என்று … Continue reading