Category Archives: நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள்

வையாசி 19- நகரத்தார் வாழ்க்கைப் பின்னம்

This gallery contains 4 photos.

கடல் கடந்து தன வாணிகம் செய்யப்போன நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வாழ்க்கைச் செழிப்பையும், இடர்பாடுகளையும் விவரிக்கிறது இந்த நாவல். இதுவரைக்கும் இத்தனை விரிவாக அவர்களது வாழ்க்கையை வேறு எவராலும் பேசப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.                    (….நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

முக்குவனை அறிவோமா?

This gallery contains 4 photos.

அண்மையில் “துறைவன்” என்றொரு நாவல் வாசிக்க நேர்ந்தது. கிறிஸ்டோபர் ஆன்றணி எழுதியது. ஒரே மூச்சில் வாசிக்க முடிந்த நாவல் அது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நெய்தல் நில மக்களின் ஒரு பிரிவான முக்குவர் குறித்த எழுத்து. கிறிஸ்டோபர் ஆன்றணி முக்குவர் இனத்து வாழ்வியலை, பண்பாட்டை, மொழியை உயிர்ப்புடன் இந்நாவல் மூலம் தமிழ்கூறும் நல்லுலகிற்க்கு அளித்திருக்கிறார். இஃதோர் முயற்சி.. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை- ஒரு கோழியின் கூவல்

This gallery contains 1 photo.

http://orukozhiyinkooval.blogspot.in/2016/02/enbiladhanai-veyil-kaayum-naanjil-naadan.html என்பிலதனை வெயில் காயும் ஜகன் கிருஷ்ணன் நாவலைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களை தெளிவு படுத்துகிறேன். விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நாவலில் அட்டை படத்தில் நாவலின் பெயரையே தவறாக அச்சிட்டிருக்கிறார்கள். “என்பிதலனை வெயில் காயும்” என்றிருந்ததை கொஞ்சம் உற்று நோக்கியபின் தான் புரிந்தது. தலைப்பையே குளறுபடி செய்யும் அளவிற்கு என்ன ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

யானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்

This gallery contains 1 photo.

ஏக்நாத் எனும் இளைய நண்பனை ஒரு கவிதைத் தொகுப்பு மூலம் அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கவிதைகளுக்குப் பொழிப்புரை எழுதினாற்போன்ற சிறுகதைத் தொகுதி ஒன்றும் வாசித்தேன். மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கெடை காடு’ என்ற அவர் நாவல், எம் புருவத்தை மேலேற்றியது. வாசிப்பு சுவாரசியத்துடனும் நாட்டு மருந்து மணத்துடனும், மக்கள் மொழியின் நுட்பங்களுடனும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

அஃகம் சுருக்கேல் – வாழ்த்துரை

This gallery contains 1 photo.

’அஃகம் சுருக்கேல்’ எனும் தலைப்பில் எனது கட்டுரைகள் சில தெரிவு செய்யப்பட்டு இங்கே தொகுப்பாகிறது. இஃதோர்  பன்முகத் தன்மை கொண்ட தொகுப்பு. எனது கட்டுரைகளில் சில மறுபடியும் வாசகர்களைச் சென்றடைவதில் எனக்கு மகிழ்ச்சி…… (நாஞ்சில்நாடன்)

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் என்னும் தமிழாசான்…

This gallery contains 4 photos.

நாஞ்சிலின் கட்டுரைகள், தேர்ந்துகொண்ட தலைப்பில் நின்று திறம்படப் பேசுவதுடன், பழந்தமிழிலக்கியப் பாக்களை மேற்க்கோள்களாகக் கொண்டு வாசிப்பவர் தம்மை வசீகரிப்பவை. மூன்றுபக்க முன்னுரைக்கும்கூட அவர் நான்கைந்து குறட்பாக்களையும், நாலடியாரையும் துணைக்கிழுத்துக் கொள்வார். ஒருவிதத் தாள லயத்துடன், அவர் கட்டுரைகளை ஆள்வதழகு. தொடர்ந்து அச்சொற்களுக்குப் பின் செல்லும் வாசகர் அறிவார் மகிமை. …(கீரனூர் ஜாகீர் ராஜா) (புதிய புத்தகம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு!

This gallery contains 6 photos.

கும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர். சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பி செலுத்துவார், பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக. நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு. ……………..(நாஞ்சில்நாடன்) கும்பமுனி கதைகளை இணையத்தில் படிக்க:  https://nanjilnadan.com/category/கும்பமுனி/

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் http://solvanam.com/?p=40353 சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர், சொல் ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், மரபிலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இன்னொரு முகமாக  கவிஞர் என்பது திகழ்கிறது என்பதைப் பலர் அறிய வாய்ப்பில்லை. அண்மையில் வெளிவந்த இதுவரை அவர் எழுதிய கவிதைகளின் முழுத்தொகுப்பான ”வழுக்குப் பாறை” யின் முன்னுரையில் அவரே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எட்டு கிரிமினல் கேஸ் – முன்னுரை

This gallery contains 13 photos.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்பான தொன்மங்களின் அறச்சிக்கல்கள் இவை. பாவலர் வாழ்ந்த காலத்துக் தென்திருவிதாங்கூர் கோர்ட் மொழியில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். குறிப்பாக வாதி, பிரதிவாதி, சாஷிகள், வக்கீல், வியாச்சியம், விசாரணை, பிரதிவாதி வக்கீல் கிராசு, வாதி வக்கீல் றீக்கிராசு, ஆர்டர், பிரசிடிங்ஸ், குற்றப்பத்திரிக்கை, ஹியறிங், ஜட்ஜ்மெண்ட், அப்பீல், புணர் விசாரணை போன்ற சொற்களை பயன்படுத்தியே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தொல்குடி – முன்னுரை

This gallery contains 4 photos.

 நானெழுதிய எந்த நூலையும் ஆழ்ந்து வாசிக்காமல் ‘இவன் வட்டார வழக்குகாரன், வெள்ளாள எழுத்துக்காரன், இவன் அம்மா இவனை அமாவாசை அன்று பெற்றாள்’ என்றெல்லாம் ‘வயிற்றுக் காந்தல் கண்ணி’ பாடுபவர்களை யாரால் என்ன செய்யவியலும்? அவர்கள் செல்வாக்குடையவர்கள். 29ம் நூற்றாண்டை இன்றே சிந்திக்கிறவர்கள், பாறையைப் பிழிந்து பழரசம் போலப் பருகுகிறவர்கள், வாசித்திராத எம்மொழி எழுத்தும் இனிமேல்தான் எழுதப்படவே … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்

33 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு கதாசிரியனின் சிறுகதை தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளை தருகின்றது. … நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மனிதம் பேசும் கதைகள்

This gallery contains 5 photos.

சிண்ரெல்லால்லாக்களும், ராசகுமாரர்களும். தமிழ் சிறுகதைப் புலத்தில் முற்போக்கு, பெண்ணிய, தலித்திய, பின்நவீனத்துவ எனும் பதாகைகள் ஏந்திவரும் எழுத்துக்கள் உண்டு. உண்மை சார்ந்து பேசும் எழுத்துக்கு ரத, கஜ, துரக, பதாதிகள் அவசியமில்லை. வினோலியாவும் அவை பற்றி எல்லாம் கவலைப்படுபவராகத் தெரியவில்லை. தனது எழுத்தின் நாணயம் பற்றியே அக்கறைப்படுகிறார் என்பதை நமது வாசிப்பு அனுபவம் சொல்கிறது…. துரிதப் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிதவை 2015 முன்னுரை

This gallery contains 8 photos.

    எந்த கலை வடிவத்தின் போக்கையும் காலம் தீர்மானிக்கிறது, சீர்பார்க்கிறது ….நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இரக்கம் என்று ஒரு பொருள் இலாதவர்

This gallery contains 9 photos.

நண்பர் கோமல் அன்பரசன் எழுதி, விகடன் பிரசுரமாக வெளிவரும் ‘கொலை கொலையாம் காரணமாம்’ எனும் நூலில் தொகுக்கப்பட்டுள்ள, தமிழகத்தை குலுக்கிய 25 வழக்குகளின் செய்திகளை வாசித்து வரும்போது, மனதளவில் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். தத்தம் கட்சிக்காரர்களை காப்பாற்ற, தப்புவிக்க, தமது நிர்வாகத் திறமை குறைபாடுகளை மறைக்க, பொருளாசை காரணமாக அறம் பிறழ்ந்து செயல்படும், செயல்பட்ட அரசுகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அன்பின் ஆழம்

This gallery contains 6 photos.

  சிலர் கேட்டுக்கொண்டால் மறுக்க முடிவதில்லை. ஊரில் கேட்பார்கள் ”ஆத்திலே சாடச் சொன்னா சாடுவியா?” என்று. ஆம், சாடுவோம். ஆனால் அவர்கள் அவ்வித காரண காரியம் இன்றி சாடச் சொல்ல மாட்டார்கள். அந்த உறுதியினால்தான் இதை எழுதத் துணிந்தேன். தமிழின் சமகாலத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரும், சிறுகதை என்றும், நாவல் என்றும், கட்டுரை என்றும் செயற்கரிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கவிதை, ஞானம், இறை

This gallery contains 11 photos.

இதுகாறும் நான் எழுதிய முன்னுரைகள், மதிப்புரைகள், பிற கட்டுரைகளில் எழுதிய குறிப்புகள் யாவும் பதிவில் உள்ளன. முனைந்தால் யாரும் தேடி எடுத்துவிட இயலும். எனக்கெதிராக இலக்கிய உலகில் வலிந்து மேற்க்கொள்ளப்படும் பரப்புரையை என் பதிவுகளே எதிர்கொள்ளும். நான் மேலே குறிப்பிட்ட பதிவுகள் வழி நின்று , நான் ஆதரித்த ஆசிரியர்களின் ஜாதி, மதம்,இனம், வர்க்கம் பற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன்.. சாலப்பரிந்து

மண்ணும் மனிதரும் . . . ஈரோடு க. மோகனரங்கன் http://malaigal.com/?p=1195 (முன்னுரை) நாஞ்சில் நாடனின் கதைகளை முதலில் படிக்க நேர்ந்தபோது நான் முதிரா இளைஞன். வாசிப்பில் அதீத ஆர்வமும், அதே சமயத்தில் இலக்கியம் குறித்து திட்ட வட்டமான கருத்தாக்கங்கள் கொண்டவனாகவும் இருந்தேன். எந்த ஒரு நூலையும் படித்த முதல் தடவையி லேயே அதைப் பற்றிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்மணி கலாரசிகன்- எப்படிப் பாடுவேனோ ?

1-06-2014 தினமணி- தமிழ்மணி பகுதியில்  நாஞ்சில்நாடனின் ‘எப்படி பாடுவேனோ?’ கட்டுரை தொகுப்புக்கு கலாரசிகனின் மதிப்புரை

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged | 2 பின்னூட்டங்கள்

செவி கைப்ப.. (*தி பரமேசுவரி)

This gallery contains 10 photos.

முதன்முறையாக தி.பரமேசுவரி அறிமுக நாளை நினைவுப் படுத்துகிறேன். 2009ம் ஆண்டின் மத்தியில் , சென்னை யில் பரீக்‌ஷா ஞானி வீட்டுத் தோட்டத்தில் நடந்த ‘கேணி’ கூட்டத்தில் நான் உரையாற்றியபோது. அன்றே எனக்குத் தோன்றியது, ம.பொ.சியின் தமிழ் நெருப்பு இன்னும் அணைந்து போகவில்லை என்று. …………………….நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில்நாடனும் ஒரு சிறுகதையும்

This gallery contains 4 photos.

வீரக்குமார்…ஈரோடு சிவகிரி http://www.veerawritings.blogspot.in/2012/11/blog-post_1374.html வெகுஜன ரசிப்புத்தளத்தில் இருந்து வந்த என் வாசிப்பு அனுபவத்தை இலக்கியப்படுத்திய என் முதல் முன்னோடி நாஞ்சில்நாடன். அவரின்கதைகளைப் பிடித்துக்கொண்டுதான் என் முதல் அடியை தீவிர வாசிப்பின்மாபெரும் கோட்டைக்குள் அடி எடுத்து வைத்தேன். அவருடைய எழுத்தின்தடத்தை ஒட்டியே என் ஆரம்பகால வாசிப்புகளின் ஒப்பீடு இருந்தது.கதைசொல்லலில் அவருக்கிருந்த துல்லியத்தன்மை எனக்குள் பெரும்கிளர்ச்சியை  உண்டாக்கியிருந்த காலத்தில் அவரின் கதைகள் மூலமாகவேநான் நாஞ்சில் நாட்டைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை என்மனதுக்குள் உருவாக்கிக் கொண்டேன். தொடர்ந்த அவருடையதான எழுத்தின்வாசிப்பு தந்த உற்சாகத்தின் காரணமாக அவருடைய கதைகளின்களங்களையும் அவரின் கதாபாத்திரங்களையும் பார்த்துவிடவேண்டும் என்றநாடகத்தனமானதொரு எண்ணம் எனக்குச் சிறு செடியைப் போல் முளைவிடத்துவங்கியது. பின்னாளில் அது பெருமரமாய் வளர்ந்து நிற்கையில் நான்நாஞ்சில் நாட்டுப் பயணத்தைத் தீர்மானித்துவிட்டேன். கன்னயாகுமரிமாவட்டத்தின் செழிப்பான பல கிராமங்களின் தொகுப்பேநாஞ்சில் நாடு. அதில் ஒன்று வீரநாராயணமங்களம். நாஞ்சில் நாடனுடையசொந்த ஊர். நாகர்கோவிலிருந்து இறச்சகுளம் சென்று பின் வலம் திரும்பிச்செல்ல ஆரம்பித்தவுடனேயே அவரின் சிறுகதைத் தொகுப்பைத்திறந்துவைத்துப் படிக்க ஆரம்பித்ததைப் போன்ற உணர்வு உண்டானது. அவரின் கதாபாத்திரங்களான சின்னத்தம்பியா பிள்ளையும் பூதலிங்கம்பிள்ளையும் பூமணியும் வழியெங்கும் குறுக்கிட்டார்கள். அவர் விரித்துவிரித்து எழுதிய நெர்கதிர் வயல்வெளிகளும் நீலப்பச்சை மலைக் குன்றுகளும்சிதிலப்பட்ட தார்ச்சாலைகளும் வரவேற்க, வீரநாராயணமங்களம் நோக்கிமெல்ல நகர்ந்தேன். வழக்கமாக சின்னத்தம்பியா பிள்ளை குளிக்கும் பழையாறு கிளை பிரிகின்றஇடத்தை திருவிதாங்கூர் மகாராஜா காலத்து சுடு செங்கல் சுண்ணாம்புக்காரைப்பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்தேன். சிதைபட்ட பாலத்தில் வேலைநடந்து கொண்டிருந்தது. அவர் எழுதின படி அப்பொழுதும் பிள்ளைமார்களும்சின்னஞ்சிறார்களும் குளித்துக் கொண்டுதானிருந்தார்கள். வீரநாராயணமங்களம் வந்தவுடன் முதலில் தென்பட்டது அவர் படித்த அந்தப்பள்ளி. நவீன தமிழ் இலக்கியச் சூழலின் ஒரு தவிர்க்க முடியா ஆழுமையைத்தந்த அந்த ஆரம்பப்பள்ளியையும் அதன் அருகிலேயே ஓடிய வாய்க்காலின்படித்துறையையும் பக்கத்தில் உயர்ந்திருந்த ஆழமரத்தையும்வியப்புடன்பார்த்துக் கொண்டு நின்றேன். கதைகளின் வழியே எனக்குள் பதிந்திருந்தஅத்தனை உறுப்புகளும் என் கண்முன்னே நிஜமாக விரிந்து நின்ற அந்தத்தருணங்கள் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குறுக்கிட்டஒருவரிடம் –ஒருவேளை மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம்பேயாகத் தெரிவது போலவோ என்னவோ, அவர் கூட ‘எடலக்குடிராசா’போலவே இருந்தார். – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

This gallery contains 1 photo.

by RV மேல் ஐப்பசி 1, 2012 ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் லிஸ்ட் என்னுடைய reference-களில் ஒன்று. தோழி அருணா இந்த சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். எல்லா கதைகளுக்கும் இன்னும் சுட்டி கிடைக்கவில்லை. கிடைக்கும்போது அருணாவோ நானோசெந்திலோ அப்டேட் செய்கிறோம். Formatting பிரச்சினையால் இத்தனை நாள் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன், இதற்கு மேல் பொறுமை இல்லை. dt, dd syntax ஏன் சரியாக வேலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்

This gallery contains 1 photo.

மணி புறநகர் பேருந்தின் – இலக்கியப்பதிவு: சேத்தன் பகத்தின் எழுத்துக்கள் மெட்ரோதன்மையின் இளமைப்பக்கத்தைக் காட்டுகிற நேரத்தில் நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு மும்பை தமிழ் சாமான்யனின் அக, புற உலக வாழ்க்கையின் குறுக்குத்தோற்றத்தைக் காட்டுகிறது. புறநகர்ப் பேருந்தில் பயணம் செய்யும் பயணியின், அதன் பேருந்து நடத்துனருக்குமான கதை.  தளவாய் – மும்பாய் பெஸ்ட் – பயணி. தன் குடியிருப்பில் புதிதாய் வசிக்கவரும் மொகித்தே – பேருந்து நடத்துனர்.புதிதாய்க் குடிபுகுந்த வீட்டின் பூசைக்கு மொகித்தே அழைக்கிறான்.தளவாயும், அவன் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்