Category Archives: நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள்

மண்டியிட்டு வாழ்வாரே வாழ்வார்

This gallery contains 6 photos.

பேரகராதி குறிக்கிறது, மண்டி என்றால் கால் மடக்கி முழந்தாளில் நிற்பது என. அதைத்தான் மண்டியிடுதல், மண்டி போடுதல் என்கிறோம். நாம் எவரிடமும் மண்டியிட மாட்டோம் என்று வீர வசனம் பேசி , சில நூறு கோடிக்கும் கையளவு  சீட்டுக்கும் மண்டியிடுபவரை நாம் அறிவோம். தமிழ் அரசியல் பண்பாடு பாதாளம் ஏழினும் கீழாய் பாய்ந்து கொண்டிருக்கிறது. மண்டியிட்டால் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

This gallery contains 12 photos.

மழை பெய்தது. தாவரங்கள் செழித்தன. மனிதனுக்குத் தின்ன ஆயிரம் இருந்தது. அதுவும் பள்ளி மாணவனுக்கு எதிலும் எதுவும் சர்வ சுதந்திரம். அந்த நாளினி மீளாது!.

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

தேடிச் சோறு நிதம் தின்று

This gallery contains 7 photos.

யாவர்க்கும் தெரிந்த பழமொழிதான். “ஆத்துக்குள்ளே நிண்ணு அரகரா என்றாலும், சோத்துக்குள்ளே இருப்பான் சொக்கலிங்கம்,”என்பது அதிகாலை ஆற்றுக்குச் சென்று நீராடி, நெற்றியில் நீறணிந்து, கிழக்கு திக்கும் கதிரவனைப் பார்த்து, கை கூப்பித் தொழுது நின்றாலும் சொக்கலிங்கம் சோற்றுக்குள்ளே தான்  இருப்பான் என்று பொருள்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சோறும் கறியும்

This gallery contains 9 photos.

எனது எண்பது சிறுகதைகளின்  தொகுப்பான ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ நூலுக்கு முன்னுரை எழுதிய எம் கோபாலகிருஷ்ணன் ‘புளிமுளம்’ என்பது நாஞ்சில் நாடனின் கதாநாயகி எனக் குறிப்பிட்டார். உண்மையில் ஒருகாலத்தில் புளிமுளம் என்ற சொல் கேட்ட உடனேயே நாவூறி நிற்பேன்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

எவ்வுருவோ நின்னுருவம்

This gallery contains 4 photos.

கேரளம் பலாப்பழத்தை தனது மாநிலப் பழமாக அறிவித்ததைத் தொடர்ந்து இன்றைய செய்தி சொன்னது அன்னாசிப் பழத்தை திரிபுரா மாநிலம் அறிவித்துள்ளதாக, பண்டு எனும் மாம்பழத்தை தெலுங்கானா தனது மாநில பழமாக அறிவித்துள்ளது. மராத்திய மாநிலம் அல்போன்ஸா என்றும் ஆப்புஸ் என்றும் வழங்கப்பெறும் மாங்கனியைஅறிவித்துள்ளது. கர்னாடகமும் ஆந்திரமும்  ஏற்கனவே ஏதேனும் ஒரு கனியை அறிவித்திருக்கலாம், அல்லது அறிவிக்கலாம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நெல்லுச் சோறும் ராகிக் களியும்

This gallery contains 6 photos.

உணவில் மேல், கீழ் என்று கிடையாது. எந்த உணவு சிறந்த உணவு என்பதை தீர்மானிப்பது உங்களது பசிதான். நல்ல பசி இருந்தால் எதையும் திங்கலாம்….(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிறுகோட்டுப் பெரும்பழம்

This gallery contains 5 photos.

கேரளம் பெருமிதத்துடன் பலாப்பழத்தை தனது அதிகாரப்பூர்வமான பழம் என்கிறது. நாமும் சொல்லலாம் வாழையை. ஆனால் அத்தகு யோசனைகள் தோன்ற நமக்கெல்லாம் நேரம் எங்கே? வேண்டுமானால் பெரும்பாலும் பிரதான கட்சித் தலைவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்தின் பல்வகை மதுபானங்களை டாஸ்மாக் மூலம் விநியோகிக்கப்படுவதை நமது அதிகாரப்பூர்வமான பானம் என்பார்கள். மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் நமது அதிகாரப்பூர்வமான உணவு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

மரவள்ளிக் கிழங்கு ருசி… மரணம்வரை போகாது!

This gallery contains 2 photos.

மரவள்ளிக் கிழங்கு ருசி… மரணம்வரை போகாது!’  நாஞ்சில் நாடனின் பால்ய நினைவு! சின்ன வயது ஞாபகங்கள் என்பது நம் எல்லோருக்கும் ரசனையானது. அந்த வரிசையில் தன் சிறு வயது ஞாபகங்களை, நமக்காக தவழ விடுகிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். ” 1955- ஆண்டு வாக்கில் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு நாஞ்சில் நாடு இணைந்து இருந்தது. மொழிவாரியாக … Continue reading

More Galleries | Tagged | 1 பின்னூட்டம்