Category Archives: தலைகீழ் விகிதங்கள்

தாழ்ந்தே பறக்கும் தரித்திரக் கொடி

This gallery contains 6 photos.

அறம், அறச்சீற்றம் என்ற சொற்கள் நீர்த்து, குலைத்து,சவுக்களித்துப் போய்விட்டன சமகாலச் சூழலில்.  அறம், நீதி, ஒழுக்கம் என்று குன்றேறி நின்று கூவுகிற பலர் எழுதும் தலையங்கங்களை வாசித்தால், நாம் கண்ணாடியை மாற்றிப் போட்டிருக்கிறோமோ என்று தோன்றும். “தன் படை வெட்டிச் சாதல்” என்பது எனதோர் கட்டுரைத் தலைப்பு. இங்கு பகைவர் செய்யும் கேடுகளை விட மக்களின் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

தலைகீழ் விகிதங்கள் 10 – 11

This gallery contains 12 photos.

ஆயின 34 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில்? நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரிநிலையம் திரு. செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர் போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன…..நாஞ்சில்நாடன் முன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தலைகீழ் விகிதங்கள் 8

This gallery contains 10 photos.

நாவல் வெளியானது 1977 ஆகஸ்ட்டில்.  அந்த ஆண்டில் சென்னை CHRISTIAN LITERATURE SOCIETY நடத்திய நண்பர் வட்டக் கருத்தரங்கில், நாவல் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட தினத்தில்,பன்னிரண்டாவது அமர்வில், சிலிஷி பொதுச்செயலாளர் திரு. பாக்கிய முத்து, ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்து உரையாற்றியவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்,பேராசிரியர். ச.வே. சுப்பிரமணியம். அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் ‘சிட்டி’பெ. கோ. சுந்தரராஜன், பேராசிரியர் சிவபாத … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

தலைகீழ் விகிதங்கள் 7

This gallery contains 10 photos.

முதல் புத்தகம் வந்த தினம் நினைவில் இல்லை. ஆனால் அச்சிட்டு முடித்த அன்று, அச்சுக் கோத்த நான்கு இளம் பெண்கள் என்னிடம் வந்து நாவலை வியந்து பேசினார்கள். பின்பு எத்தனைப் பாராட்டுகள் பெற்றபோதும், அதற்கு இணையான கர்வம் ஏற்பட்டதில்லை. அச்சகத்தில் பணிபுரிந்த யாவருக்கும்BUD செலவில் மாலையில் மசால்தோசை வாங்கிக் கொடுத்தேன். மூன்று நாட்கள் பொறுத்துப் போனபோது, மை, அட்டை வார்னீஷ் மணக்க எனது முதல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தலைகீழ் விகிதங்கள் 6

This gallery contains 8 photos.

தலைகீழ் விகிதங்கள்’ நாவலின் அட்டைப்படம் மவுண்ட் ரோட்டில் ஓர் அச்சகத்தில் அடித்தோம். அன்று அது அண்ணாசாலையாக ஆகி இருக்கவில்லை. அன்றைய தமிழகச் சட்டமன்ற சபாநாயகராக இருந்த க. ராஜாராமுக்குச் சொந்தமான அச்சகம் அது, ஆனந்த் தியேட்டர் பக்கம். நாங்கள் செய்து கொண்டு வந்திருந்த பிளாக்குகளில் ஒன்று‘மெரிக்க’வில்லை என்றனர். மறுபடியும் பிளாக் எடுத்து சரிசெய்ய ஞான. ராஜசேகரன் பம்பாயில் இருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தலைகீழ் விகிதங்கள் 5

This gallery contains 10 photos.

நாஞ்சில் நாடனிடம் தலைகீழ் விகிதங்கள்)திரைப்படமாய் (சொல்ல மறந்த கதை) வெளிவந்தபோது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற கேள்விக்கு, ‘ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பொதுவாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதைப் போலத் திரைப்படப் புகழ், பரபரப்பு எதுவும் தன்மீது விழவில்லை’ எனப் பதிலளித்தவர், இழந்த, நமது அடையாளங்களை மீட்க முடியுமா என்னும் கேள்விக்கு நமது அடையாளம் என்ன என்பதை முதலில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தலைகீழ் விகிதங்கள் 4

This gallery contains 5 photos.

தலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் தலைப்பும் வைத்தாயிற்று.  நண்பர்கள் யாவரும் ஒரு சுற்று நாவலை வாசித்துப் பாராட்டினார்கள்.பின்பு வெளியீட்டு முயற்சிகள், மூலப்படியைத் தூக்கிச் சுமந்து கொண்டு சென்னைப் பதிப்பகங்களுக்கு நாவல் காவடி. ஒருவர், ‘வைத்துவிட்டுப் போ,பார்க்கலாம்’ என்றார். வேறொருவர், ‘முன்னூறு ரூபாய் வாங்கிக்கோ’என்றார். பிறிதொருவர் நிற்க வைத்துப் பேசி அனுப்பினார். கலைக்கூத்தன் மூலம் அறிமுகமாகியிருந்த, தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராகப் பணியாற்றிய, சிலம்பொலி செல்லப்பனார் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தலைகீழ் விகிதங்கள் 3

This gallery contains 6 photos.

நாவல் எழுத ஆரம்பித்தேன். 1975-ல் எழுதத் தொடங்கிய நாவல் வளர்ந்தது, முழுத்தாளில் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள். மோகமுள், பாரதியார், பெரியார் திரைப்படங்களைப் பின்பு இயக்கிய ஞான. ராஜசேகரன் அப்போது பம்பாயில்CENTRAL INTELIGENCE BUREAU-வில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரும் நானுமாக, சனி ஞாயிறுகளில் அவரது குடியிருப்பில் உட்கார்ந்து வரிவரியாய் வாசித்து எடிட் செய்து நாவலை 400 பக்கங்களுக்குச் சுருக்கினோம். ‘தலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

தலைகீழ் விகிதங்கள் 2

This gallery contains 7 photos.

முதலில் என்னை நாவல் எழுதச் சொன்னவர் இருவர். ‘ஏடு’ பொறுப்பாசிரியராக இருந்த, கந்தர்வக்கோட்டை பிறந்த, காலம் சென்ற மரபுக் கவிஞர் வே. கலைக்கூத்தன். ‘மனிதனை நான் பாடமாட்டேன்’ என்பது அவரது முக்கியமான கவிதைத் தொகுப்பு. கலைக்கூத்தன் பம்பாய் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். கலைஞர் மு. கருணாநிதி பம்பாய் வந்திருந்தபோது, கலைக்கூத்தன், விடுதி அறையில் அவரைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தலைகீழ் விகிதங்கள் 1

This gallery contains 7 photos.

நாவல் எழுத ஆரம்பித்தேன். 1975-ல் எழுதத் தொடங்கிய நாவல் வளர்ந்தது, முழுத்தாளில் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள். மோகமுள், பாரதியார், பெரியார் திரைப்படங்களைப் பின்பு இயக்கிய ஞான. ராஜசேகரன் அப்போது பம்பாயில்CENTRAL INTELIGENCE BUREAU-வில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரும் நானுமாக, சனி ஞாயிறுகளில் அவரது குடியிருப்பில் உட்கார்ந்து வரிவரியாய் வாசித்து எடிட் செய்து நாவலை 400 பக்கங்களுக்குச் சுருக்கினோம்.       … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்