நாஞ்சில் நாடன்

நான் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருந்தபோது, நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. திடீரென ஒரு நாள் மாலை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தனர் ஐந்து மூத்த ஆண்கள். எனக்கப் போது இருபத்தோரு வயது. இன்னும் படிப்பு முடித்திருக்கவில்லை . வேலை கிடைத்திருக்கவில்லை. அஃதென்றும் பிரச்னை இல்லை என்றும், வேலை அவர்களே வாங்கித் தந்து விடுவதாகவும் சொன்னார்கள். பெண் , பெற்றோருக்கு ஒற்றைக்கொரு மகள் என்பதால் அவர்களது வீட்டோட இருந்து கொள்ளலாம் என்றனர்.



சொல்ல மறந்த கதை அவ்வளவு அருமையானது!
தன்னை தொகுத்து கொள்ளுதலில் ஆசானுக்கு நிகர் நீங்களே !!!
நிறைய பேசுங்கள்
எழுதுங்கள் . இது குறித்த விவரங்களை இத்தளத்தில்
பதிவேற்றம் செய்ய வேண்டும்.
P R இளங்கோ