






திரு நாஞ்சில் நாடன் அவர்களின் செம்மொழி பாதுகம் கதைக்கு வாட்ஸாப்பில் வந்த அங்கத விமர்சனம் .நன்றி திரு மகரபூஷணம்.
பத்ம விருது,செம்மொழி விருது வாங்கினால் பாத்ரூம் கட்டண விலக்கு கிடைக்குமா ? விருது உருவான நாளிலிருந்து இன்று வரை யாரும் கேட்காத கேள்வி; யாருக்குமே கேட்க வேண்டும் என்று தோன்றாத கேள்வியும் கூட.மக்கள்&மாநில அவை 2-உம் கூடி ஏகமனதாக கட்டண விலக்கு அளித்தால் கூட,இது மாநில உரிமையில் ஒன்றியக்குறுக்கீடாக முடியுமேயன்றி,முத்தார ம்மன் கோயில் சிலைக்கு பின் செலவாதிக்கு போவது தான் ஒரே நடைமுறைத் தீர்வு.
உங்களுடைய இந்த கேள்வி -யக்ஷ ப்ரஷ்னம்;
எந்த தருமபுத்திரனா லும் பதில் சொல்ல முடியாது.
இந்த கேள்வியை ஆங்கிலம்/இந்தி வாயிலாக ஒன்றிய உணர்வுகள் அறிய நே ருங்காலை,விருது ஏலம் விடுவதை அறவே நிறு த்தலாம்;அல்லது விருது பற்றி இதுநாள் வரை யாரும் கேட்காத,கேட்க துணியாத,கேட்கவேதோன்றாத கேள்வியை கேட்ட ஒரே காரணத்திற்காகவே உங்களுக்கு ஒரே அடியாக க்யான் பீட் விருது அளித்து உங்கள் வாயை மூட வடகிழக்கு எல்லைப்புறக் கொல்லையில் எங்காவது மேதகு ஆளுனர் ஆக்கலாம்!
எனது Bunkermate கண்ணுப்பிள்ளே இல்லையேல்,கும்பமுனி,குடத்தில் இட்ட விளக்காக அல்ல, குழிக்குள் அமிழ்த்திய விளக்காக கூட தேறமாட்டார் !! சரிதானே?