நமக்கென்ன அதைப்பற்றி? “மயிரே மாத்திரம் என்று போய்விடலாம் நாம். சோலி மயிரைப் பாருவே! என்றிருக்கலாம். ‘மயிருக்கு சமானம்’ என்று நினைக்கலாம். “மயிராச்சு” என்று அலட்சியப் படுத்தலாம். “மயிரு மண்ணாங்கட்டீண்ணுட்டு. வேற பொழப்பு மயிரு இல்ல பாரு என்று புறக்கணிக்கலாம். “மயிரைச் சுட்டுக் கரியாக்க முடியுமா டே? எனலாம். இது வெறுமன முட்டைக்கு மயிரு புடுங்கப்பட்ட வேலை என்று தேறலாம்.
என்றாலும் நம் கவலை மயிர் எனும் சொல் செய்த பாவம் என்ன, பழியென்ன, பகையென்ன, குற்றம் என்ன?






