2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”

கோவையிலிருந்து செயல்பட்டுவரும் “சிறுவாணி வாசகர் மையம்”2018 முதல் ஆண்டுதோறும் சமகாலத்தில் வாழும் படைப்பாளுமையான திரு.நாஞ்சில்நாடன் பெயரில் விருதுவழங்கி வருகிறது.
2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது” “மணல்வீடு”திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.விழா பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
விருதாளர் பற்றி…
சேலம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த தவசி கருப்புசாமி என்கிற மு.ஹரிகிருஷ்ணன் (44)ஆவணப்பட இயக்குநர்.ஓர் நிகழ்த்து கலைஞர்.தனித்துவமான படைப்பாளி.மணல்வீடு இதழாசிரியர்.
கூத்து,மரப்பாவைக் கூத்து,தோற்பாவைக் கூத்து உள்ளிட்ட கொங்குமண்டல நாட்டார் கலைகள் மற்றும் கலைஞர்களின் வாழ்வியல் மேம்பாடு,கலைகளின் ஆவணமாக்கம் முதலான களப்பணிகளில் தொடர்ந்து இயங்கி வருபவர்.
வளரும் தலைமுறையினருக்கு நமது தொல் கலைகள் குறித்த கவனத்தையும் விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும் ஆதாரப் படிவம் மாறாது அவற்றை அவர்களுக்குப் பயிற்றுவிக்கவும் கூத்துப் பள்ளி ஒன்றினை சேலம் மாவட்டம் ஏர்வாடியில் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
மயில்ராவணன், நாயிவாயிச்சேல, குன்னத்திநாயம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் கொங்கு மண்டல நிகழ்த்து கலைஞர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகைநூல் மற்றும்
அழிபசி, தாண்டுகால், அங்குசம் ஆகியவை இவரது கவிதைத் தொகுதிகள் ஆகும்.
விருது பற்றி….
கலை, இலக்கியம் , சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் நாஞ்சில் நாடன் விருது , பரிசுத் தொகை ரூபாய் 50,000 , பாராட்டுப் பத்திரம் மற்றும் விருதுச் சிற்பம் அடங்கியது .
2018 இல் ஓவியர் ஜீவா அவர்களுக்கும்,
2019 ஆம் ஆண்டு
முனைவர் ப. சரவணன் அவர்களுக்கும்
2020 ல் பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன் அவர்களுக்கும் நாஞ்சில்நாடன் விருது வழங்கப்பட்டது.
——————
சிறுவாணி வாசகர் மையம் பற்றி…..
கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .
இந்த அமைப்பின் மூலம் “மாதம் ஒரு நூல்” எனச் சிறந்த படைப்புகள்(ஏப்ரல்-மார்ச்/12 நூல்கள்) வணிகநோக்கின்றி குறைந்த வருடக் கட்டணத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதன் தலைவராக
திருமதி சுபாஷிணி திருமலை , ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
கௌரவ ஆலோசகர்களாக
திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC) ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
————-
தொடர்புக்கு
ஜி.ஆர்.பிரகாஷ்
ஒருங்கிணைப்பாளர்
சிறுவாணி வாசகர் மையம்
9940985920

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும் and tagged , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s