கதை சொல்லி: மாலதி சிவா
அந்தப் பக்கம் நாடக சீசன். வருக்கை சக்கைப் பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், செங்கை வருக்கை மாம்பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், வெள்ளரிக்காய்க்கு ஒரு சீசன் இருப்பது போல், நாடகங்களுக் கான சீசன் அது. எல்லா ஊர்களிலும் சரித்திர சமூக நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. யார் குற்றவாளி? நீதி என் கையில், பண்ணையார் வீட்டுப் பாப்பா, பாவத்தின் பரிசு என்று சமூக சீர்திருத்த நாடகங்கள். தளவாய் வேலுத்தம்பி, ஊமைத்துரை, புலித்தேவன் என்று சரித்திர நாடகங்கள். ஊருக்கு ஊர் ஏதாவது ஒரு திருவிழாவை முன்னிட்டு – முப்பிடாரி அம்மன் கோயில் கொடை, பங்குனி உத்திரம், நம்பிரான் விளையாட்டு, பொங்கல் விழா என்று காரணங்காட்டி, நாடகங்கள் முக்கிய நிகழ்ச்சிகளாயின.
நாடகத்தைச் சாக்கிட்டு, ‘ரிகர்சல்’ இருக்கிறது என்று சொல்லி, விடலைப்பையன்களுக்கு, இரவு சாப்பாட்டுக்கு மேல் வெளியே சென்று விடலாம். நாற்பது பக்க நோட்டைக் கையில் வைத்துக்கொண்டு பண்ணையார்களிடம், பாமரர்களிடம், ஊருக்குள் வியாபாரத்துக்கு வரும். எண்ணெய்க்காரன், காய்கறிக்காரன், மீன்காரன் என்று பணப்பிரிவு செய்யலாம். நாடக நாள் நெருங்க நெருங்க மேக்கப்காரனுக்கு, ஸ்பீக்கர் செட்காரனுக்கு, பந்தல், மேடை அமைப்பவனுக்கு, மியூசிக் செட்டுக்கு என்று அச்சாரம் கொடுக்க அலையலாம். ஒத்திகை நாட்களில் நாடகக் கலைஞர்களுக்கு சுக்குக் காப்பி, ஆமைவடை விளம்பும் ஏற்பாடுகளில் முனையலாம்.
பெரும்பாலும் மாசி, பங்குனி மாதங்களில் நாடகக் காய்ச்சல் தீவிரமாய் அடிக்கும். வயல்கள் அறுவடை முடிந்து காய்ச்சலுக்குக் கிடக்கையில், பள்ளிக்கூடம், கல்லூரிகள் அடைத்திருக்கையில் அங்கு எல்லோருக்கும் நிறைய ஓய்வு இருந்தது. தாயக்கட்டம், நாயும் புலியும், இருபத்தெட்டு குலாம்களி போல் நாடகமும் ஒரு ரசமான பொழுது போக் காயிற்று. இந்நாடகங்கள் மூலம் தொய்ந்து கிடக்கும் நாடகக் கலையின் நரம்புகளை இழுத்து முறுக்கிக் கட்டுவதோ, சமுதாயத்தைக் கீழ் மேலாகப் புரட்டி சாதி பேதமற்ற, ஏழை பணக்காரனற்ற சமத்துவ சமூகத்தை சிருஷ்டித்துப் பார்ப்பதோ அவர்களுக்கு நோக்கம் கிடையாது.
மாலதி தன்னுடைய அருமையான வாசிப்பினால் கதாபாத்திரங்களுக்கும், வசனங்களுக்கும் உயிர் கொடுத்துள்ளார் என்றால் மிகையாகாது. “டப்பு” சுந்தரத்தை நம் கண் முன் நிறுத்திவிட்டார்.
அன்புள்ள ஹேமா ,
நேரம் எடுத்துக்கொண்டு கேட்டதற்கும், உங்கள் அழகான எதிர்வினைக்கும் மிக்க நன்றி.
உங்கள் எதிர்வினை மேலும் செய்ய வேண்டும் என்கிற உற்சாகத்தை அளிக்கிறது.
மிக சிறப்பான ஒலி கதை. சுவாரஸ்யமான வசனங்கள் அருமை. மாலதி அவர்கள் டப்பு சுந்தரத்துக்கு உயிர் கொடுத்து டாப் சுந்தரமாக்கி நம் கண் முன்னே நிறுத்தி விட்டார்.🙏🙏
அன்புள்ள ராஜேஸ்வரி,
உங்கள் பாராட்டுதலுக்கு
மிக்க நன்றி.
நாஞ்சில் நாடன் அவர்களின் கதையின் சுவாரசியம் அப்படி.
எல்லாப் புகழும் அவருக்கே!
மீண்டும் நன்றி.