ஜெயமோகன்
துரதிருஷ்டவசமாக நூல்களிலிருந்து பெற்ற ‘தரவுகளை’ கொண்டு எழுதுவது எழுத்தாளர்களின் வழக்கம் அல்ல. அவர்களுக்கு நேரடி அனுபவம், அதிலிருந்து உருவாகும் உள்ளுணர்வுதான் முக்கியமானது. அதை எழுதத்தான் அவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள்
ஓர் எழுத்தாளன் சாமானியர்களில் ஒருவனாக தன்னை உணர்வுரீதியாக அமைத்துக்கொண்டு எழுதுகிறான். அவனில் வெளிப்படுவது அக்குரல். அக்குரலுக்கு அறச்சார்பான ஒரு முக்கியத்துவம் உண்டு. அது புள்ளிவிபரங்கள் சார்ந்தது அல்ல.
*************
கி.ராஜநாராயணனோ, நாஞ்சில்நாடனோ ஒரு பண்பாட்டுக்கு பெருஞ்செல்வங்கள். உலகின் எந்தப் பண்பாட்டுக்கும் அவர்களைப்போன்றவர்கள் அருங்கொடைகள். அவர்கள் அன்றாடம் டிவியில் வந்து புள்ளிவிபர அடிப்படையில் வாதிடுபவர்களில் ஒருவர் அல்ல.
அவர்கள் தங்கள் புனைவுகளால் அந்த இடத்தை அடைந்தவர்கள். அப்புனைவுலகை தன் அனுபவ மண்டலத்தால் தான் புனைந்துகொண்ட வாசகர்களிடம் பேசுபவர்கள். மையஓட்ட நம்பிக்கைகளுக்கு, பொதுவான தர்க்கங்களுக்கு அப்பாலுள்ள ஓர் உலகம் அது. அங்கே நின்று அவர்கள் பேசுவது பண்பாட்டின் மற்றொரு குரல்.
அக்குரலை பண்பாட்டை அறிந்தவர்கள் மதிக்கவேண்டும். மதிக்காவிட்டால் புறக்கணிக்கலாம், அதைத்தான் தமிழ்ச்சமூகம் எப்போதும் செய்துவருகிறது.ஆனால் அவர்களும் நீங்கள் பேசுவதையே பேசவேண்டும் என எதிர்பார்க்கவேண்டாம். அவர்களை உங்கள் புள்ளிவிபரப்பேச்சாளர்களில் ஒருவராக ஆக்கி, உங்கள் அரசியல் சழக்குகளில் வைத்து மதிப்பிடவேண்டாம். அவர்களிடம் போய் உங்கள் பாணியிலான தர்க்கங்களை கோரவேண்டாம்…(ஜெயமோகன்)
முழுக்கட்டுரையையும் வாசிக்க கீழ்கண்ட சுட்டிக்குச் செல்லவும்:-
எழுத்தாளனின் பார்வை