’இளையதாக முள்மரம் கொல்க’ என்றானே வள்ளுவ பேராசான்! திருவள்ளுவருக்குக் காவி உடுத்துவதா, உருத்திராக்கம் பூணுவதா, பூணூல் போடுவதா, அவர் சமணரா, கிறித்துவரா, மழிப்பதா, நீட்டுவதா என்பதில் மட்டும்தானே நம் கவலை! எமது பண்பாட்டுச் சிறப்பு என்று புல்லரித்துப் புளகப்பட்டு, இறவன் கோயில் எல்லாம் ஏறி இறங்கி, பிரசாதம் வாங்கி நக்குவது அன்றி நாம் கொன்ற முள்மரம் எத்தனை? ஊழல் மலிந்த அத்தனை அரசியல்காரர்களும், அதிகாரிகளும், வணிகரும், நீதிமான்களும், ஊடகக்காரரும், திரைத்தொழில் புரிபவரும், கல்விக்காரரும், மருத்துவக்காரரும் இன்று முள்மரங்களாக, பெருவிருட்சங்களாக மாறிச் சமூக நலன்களைத் தின்று வேரோடிச் செழிக்கவில்லையா? அவர்களுக்கு சொறிந்து கொடுப்பதுதான் நமது சமூகப் பொறுப்பா? இறை பணியா? பண்பாட்டுக் காவலா? அறங்களின் மாட்சியா??
மிக அருமையான பதிவு
நாஞ்சில் நாடன் ஐயாவின் கட்டுரைகள் இலக்கிய நயம் கொண்டவை ,அதில் இயற்கையின் மீதும் மனுடத்தின்மீதும் அவருக்கு உள்ள அக்கறை தெரியும்,அதேசமயத்தில் அதன் மீது ஏற்படும் தாக்குதல்களையும் கண்டிப்பார். இந்த கட்டுரையும் அவ்வாறே இருக்கிறது
நன்றி அய்யா.🙏
படித்த பொழுதில் மகிழ்ச்சி, குற்ற உணர்வு, நெகிழ்ச்சி மற்றும் இயலாமையால் வரும் கோபம் அனைத்தும். படிக்கும்
அறுபதை நெருங்கும் அனைவருக்கும் நிச்சயம்.🙏