எந்த விருதானாலும் ஏதாகிலும் மனக்குறை எவருக்காவது இருக்கும். அது நியாயமானதாகக்கூட இருக்கலாம். விருது வழங்குதல் எனும் சடங்கில் , நடுநிலை என்ற சொல் 24காரட் தங்கம் அல்ல. அது 18காரட்டுக்கு பழுதில்லாமல் இருந்தால் போதுமானது என்று நினைப்பவன் நான். ஈயமும் பித்தளையும் விருது பெரும்போதுதான் சங்கடங்கள் ஏற்ப்படுகின்றன. ஈயத்தின், பித்தளையின் செல்வாக்கை அஞ்சியஞ்சி முனகல்களும் கேட்கின்றன.