கவிதையொன்று வாசித்தேன்!
தன்பலம் கொண்டு நடமாடித் திரிகிற நிலமை கெட்டு முதுமை வந்து குறுகி, காலன் கண்முன் நின்று சொடக்கு போடும் பருவத்தில், பெற்ற பிள்ளைகளும் கட்டிய மனைவியுமே முகம் சுளிப்பார்கள். வெற்றிலை பாக்கை உரலில் போட்டு இடித்து, வாயில் ஒதுக்கி குதப்பிக் கொள்வது இருக்கட்டும், இரண்டு இட்லியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கரண்டியில் கோரி ஊட்டும் காலம் விரைவில் வந்து எய்தி விடலாம். அதற்க்கு முன்பே, நன்னெஞ்சே, இறைவனின் திருத்தலம் நாடு!