பேரூந்தில் ஏறி வீடு திரும்பும் வழியில் ஒரே பிரதோஷ சிந்தனை. எந்த சமரசமும் இன்றித் தமிழன் எல்லா வேலைகளையும் எப்படி எந்த மனச் சங்கடமும் இன்றிச் செய்கிறான்? அட்சய திரிதியைக்கு நகைக்கடை வாசலில் வரிசையில் நிற்கிறான். பிரதோஷத்துக்கு சிவன்கோவில் பிரகாரத்தில் பழி கிடக்கிறான். எத்தனை மெகாத்தொடர் நாடகங்கள் ஆனாலும் தொலைக்காட்சி பெட்டி முன் சலிப்பின்றி அமர்ந்திருக்கிறான். தல, இளைய தளபதி, சூப்பர் ஸ்டார், அகிலாண்ட நாயகன் சினிமாக்களுக்காக ஆயிரம் பணத்துக்கு இருக்கை முன்பதிவு செய்கிறான். கடை திறக்க இன்னும் மூன்றுமணி நேரம் இருக்கும்போதே மதுச்சாலைகள் முன் காவல் நிற்கிறான். தீமைக்கும் தீமைக்கும் நடக்கும் தேர்தல் போரில் ஏதோவோர் தீமையின் பக்கம் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும், இரண்டாயிரம் பணத்துக்கும் வாக்களிக்கிறான். ஆண்டுக்கு ஆயிரம் கோடி சம்பாதிக்கும் கிரிக்கட்காரனின் விளையாட்டுச் சூதாட்டம் காண இரவெல்லாம் கண் விழிக்கிறான்.
காலத்திற்கு தேவையான நல்ல பதிவு
viyaabaara ulahil ithuvum oru thanthirame.
“Akshaya”.Thanks for the correct definition.