அரசியல் பழகு
ஆள்வது பணம்
இரக்கம் தவிர்
ஈன்றாள் பகர்
உலகம் உனது
ஊழல் பயிர்வளர்
எதிரியைப் பொசுக்கு
ஏவலர் சாவார்
ஐயமின்றி அள்ளு
ஒப்புக்கு உரை
ஓட்டு உயிர்
ஒளவை சொல் நஞ்சு
அஃறிணை போல வாழ்

அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
Saattai adigal.Sorani ullavarkku.