குள்ளமாக, சற்றுக் கனமாக, மீசை இல்லாத வட்ட முகத்துடன் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் நிர்வாகக் குழு அறைக்கும் அலுவலக அறைக்கும் என நடந்து கொண்டிருந்தார். என் முகத்துத் திகைப்பை கண்டாரோ, அல்லது அவரது இயல்போ, ஏறிட்டுப் பார்த்து, முகம் மலர்ந்து, ‘வாங்கோ’ என்றார். பின்னர் அறிந்து கொண்டேன் அவர்தான் பெரியவர் S கந்தசாமி என்றும், பம்பாய்த் தமிழ்ச் சங்க நிறுவனர்களில் ஒருவர் என்றும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், அலுவலகம் விட்டால் தமிழ்ச் சங்கம் என்று வாழ்க்கையின் பண்பும் பயனும் அஃதே என்று இருப்பவர் என்றும்.
நன்றி