சென்ற கிழமை காலையில் வெங்கடாசலபதி விளித்தார். அப்போது அவருக்கு பின்னிராக்காலம். “ஒரு சந்தேகம்! அமாவாசைக்குத் தமிழ்ச் சொல் என்ன? எட்டாவது வாசிக்கும் என் மகள் கேட்கிறாள்!” இது உரையாடலின் சாரம். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கானடாவில் வசிக்கும் சிறுமிக்குத் தோன்றியது, கல்லுக்குழியில் கால்நீட்டி உட்கார்ந்திருக்கும் நமக்குத் தோன்றவில்லையே என்று நாணமாகவும் இருந்தது.
கருத்த வாவு, கருத்த உவா, காருவா. என்ன என்ன வார்த்தைகளோ…நிலவே உன்னை,, அம்மாவாசைக்கு .. இத்தனை. சொற்களா? சொற்கடல் , எம் தாய் தமிழ் …வளர்க்கும், நாஞ்சிலார் , நாளும் வாழ்க, நலமுடனே!
ஐயா… உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒரு பல்கலை ஆராய்ச்சி படிப்பிற்க்கும் மேல்.
நாஞ்சில் நாடன் ஐயாவுக்கு என் அன்பு வணக்கம்.
கருத்த வாவு என்னும் தலைப்பிலமைந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தபோது ஓராச்சர்யம் எதிர்ப்பட்டது. ஓரிரு நாட்களுக்கு முன் என் நண்பர் என்னிடம் “உவா என்றால் நிலவா?” என்று கேட்டார். அப்போது எனக்கு பதில் தெரியவில்லை. இக்கட்டுரையை எதேச்சையாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கும்போது உவா என்னும் சொல்லுக்கான விரிவான விளக்கம் அக்கட்டுரையில் கிடைத்தது எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. கட்டுரை மிகவும் அருமை.
தங்களுக்கு என் அன்பு நன்றி.