கிழமையில் நாலைந்து முறை கோவைப்புதூர் வ.உ.சி.நகரில் இருந்து நகரத்து மையமான மணிக்கூண்டு போவேன். வ உ சி நகர் எனும்போது அது வ.உ.சிதம்பரனார் நகர் எனக் கொளல் வேண்டும். அவர் கப்பலோட்டிய தமிழன் என்று சொல்லல் வேண்டுமோ! வ.உ.சி என்பதில் நடுநாயகமான ‘உ’ எனும் குறிலெழுத்து குறிப்பது உலகநாத பிள்ளை என்ற அவர் தகப்பனார் பெயர். எனது குடிமைப் பொருள் வழங்கும் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பித்து, ஒன்பது முறை பதினெட்டாம்படி சவுண்டி, முகவரி மாற்றம் பதிவுசெய்து வாங்கியபோது, அதில் வ.ஊ.சி நகர் என்று எழுதப்பட்டிருந்தது. இன்றும் இருக்கிறது. மாட்சிமை பொருந்திய வட்டாட்சியர் கையெழுத்துடன். வட்டாட்சியர் வளாகச் சுற்று சுவரில் ‘தமிழ் வாழ்க’ என வான்பெரிய வாழ்த்தும் வரையப்பெற்றுள்ளது
😁நன்றி..
கேளாமல் உதவிக்கரம் நீட்டி, மொக்கைப்பட்டம் வாங்குவது எனக்கும் வாடிக்கைதான். பரவாயில்லை, நான் தனியன் இல்லை….
நல்ல பதிவு.நடத்துனர் செய்த்து தவறு.சரியான சில்லரை மட்டுமே கொடுக்க
வற்புறுத்தியிருக்க வேண்டும். பிறர் கஷ்டம் தெரிய வேண்டாமா?
enakkum idupola anubavam undu. thane sendru uthavinaal ilakkaaramaka ninaikirarkal, sandeham kolkiraarkal. sila neram ketta peyarum bonusa kidaikudu. pohattum sir – avan buththi appadi. avanukkaaha naama yen sir nall gunathai maathikkanum. uthavuvom, manam nimmathi perum.