எனவே
சற்றே இரக்கமுடையவராய் இரும்!
பழிபாவம் அஞ்சும்,
ஆண்டவனையும் அறத்தையும் எண்ணும்!
கலப்படத்தில் ஊழலில் ஊழியத்தில்
மலையில் காட்டில் மணலில் கனிமத்தில்
சாராயத்தில் வைத்தியத்தில் கல்வியில் தரகில்
அடித்து மாற்றியது போதுமென்று
ஆறு மனமே! சற்றே தேறு மனமே!
கண்மணிகாள்!
உடன் பிறப்புகளே!
இனமானச் சொந்தங்களே!
ஒன்றை நீ நெஞ்சில் நிறுத்து!
பத்தாயிரம் கோடி பறித்துக் குவித்தாலும்
யாவர்க்குமாம்
எட்டடி மண்,
ஒரு வண்டி விறகு,
அரை லிட்டர் ஆவின் பால்!

பேராசை கொண்டு அலையும் பணபேய்களின் தலையில் நச்சென்று வைக்கும் கொட்டு இந்த கவிதை