”கம்பலை” எனும் தலைப்பில் தற்போது தொகுப்பாகும் கட்டுரைகள் இருபத்து நான்கும், மிகச் சமீபத்தில், 2017-18 காலகட்டத்தில் எழுதப் பெற்றவை. என்னைத் தொடர்ந்து வாசிப்பவர் அறிவார் சொல், மொழி என சீராக எனது எழுத்து தீவிர கதிப்பட்டிருப்பதை. உண்மையில் இந்த வகையிலான கட்டுரைகள் மற்றெவரும் தடம் பதித்திராத களம் என்பதையும் உணர்வார்கள். ஆடுகளமா, அமர்க்களமா, படுகளமா என்பதையும் அவரே முடிவு செய்வார்…( நாஞ்சில் நாடன்)