உலக வரலாற்றில் இரட்டையர் எனப் பலர் இருக்க்கூடும். அத்தகு இரட்டையரில், தமிழ்க் கவிப்புலத்தில் புதைந்து கிடப்பவர் இருவர். இவர்கள் Twins அல்லர். ஒருதாய் மக்களும் அல்லர். இவர்கள் பெயரில் தனிப்பாடல் திரட்டில் 12 பாடல்கள் கிடைக்கின்றன. இரட்டையர் இருவரும் முது சூரியர் மற்றும் இளஞ்சூரியர் என வழங்கப்பெற்றுள்ளனர். இவை அவரின் புனைப் பெயர்களாக இருக்கலாம். இருவரும் சேர்ந்தே பாடல்கள் புனைந்துள்ளனர்.