இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து, தலைவர் வாழ்க கூச்சல் போட்ட கூட்டம் ஓய்ந்தபின், என்னிடம் கேட்டார் ஐயன்.
“இப்ப எதுக்கு ஜாங்கிரி குடுக்குறாங்க…”
‘எதுக்கு குடுப்பானுக? கொலைக் கேசுல விடுதலை ஆனா, சொத்துகுவிப்பு வழக்கிலே தண்டனை பெற்று வெளியே வந்தா, ஊழல் வழக்கிலே தப்பிச்சு வெளியே வந்தா…”