கேரளம் பலாப்பழத்தை தனது மாநிலப் பழமாக அறிவித்ததைத் தொடர்ந்து இன்றைய செய்தி சொன்னது அன்னாசிப் பழத்தை திரிபுரா மாநிலம் அறிவித்துள்ளதாக, பண்டு எனும் மாம்பழத்தை தெலுங்கானா தனது மாநில பழமாக அறிவித்துள்ளது. மராத்திய மாநிலம் அல்போன்ஸா என்றும் ஆப்புஸ் என்றும் வழங்கப்பெறும் மாங்கனியைஅறிவித்துள்ளது. கர்னாடகமும் ஆந்திரமும் ஏற்கனவே ஏதேனும் ஒரு கனியை அறிவித்திருக்கலாம், அல்லது அறிவிக்கலாம். கோவா முந்திரி எனப்படும் கொல்லா மாவை அறிவிக்கலாம். சீத்தாப்பழம் வட மாநிலங்களிலும் வளரும் பயிர்தான். எவர் முந்திக்கொள்வாரோ? பேரிட்ச்சை கொய்யா, நாவல், ஆப்பிள் கலிங்கர் எனத் தொடரலாம். தமிழ்நாடு வாழைப்பழத்தைக் கொண்டாடக் கூடும். ஆனல் நமது தலைவர்களுக்கு பழம் படம் தேடுவதை விட பணம் தேடுவதில்தான் நாட்டம்.
நமக்கும், நம் மொழிக்கும்
நாஞ்சில் ஐயா
நாம் பெற்ற வாள் !!
(வாள் = ஒளி )