கும்பமுனியை எவரால் என்ன செய்ய இயலும்? நாஞ்சில்நாடானைத்தான் எவரால் ஏது செய்ய இயலும்? சுயநலம் சுமந்தலையும் சிலர் சொல்லாம், கும்பமுனி பிற்போக்குவாதி, பாஸிசவாதி என்றெல்லாம். அவர்கள் கும்பமுனியை அறிய மாட்டாதவர். நாம் தெய்வமும் அல்ல, தெய்வாம்சம் பொருந்தியவரும் அல்ல. சராசரி மாந்தர். ஆனால், கொள்கைக் குன்றேறி நின்று அயோக்கியருக்கு இச்சகமும் பேசுவது கும்பமுனி இயல்பு அல்ல. கம்பனே இராவணன், கும்பகர்ணன், வாலி, குகன், அனுமான் எனும் போது, யாமே கும்பமுனி. கும்பமுனியை வாசித்து அறிந்து புரிந்து கொள்ளாதவர் புறக்கணிப்பை, அவதூறை நாம் எதற்குப் பொருட்படுத்த வேண்டும்?