தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கும் ஒரு பாதுகாப்பு, பெரும்பாலான அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நவீன இலக்கியவாதிகளை வாசிப்பாரும் இல்லை: அறிந்தவரும் இல்லை. திருக்குறளை வீரமாமுனிவரும், கம்ப ராமாயணத்தை உமறுப்புலவரும் எழுதினார்கள் என்று அரசியல் தலைவர்கள் சொற்பொழிவாற்றும் காலகட்டம் இது. மேலும் சமகால அரசியல் சூழல், அரசியல் சம்பவங்களைப் புனைவாகவேனும் எழுத முயல்வோருக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. தமிழ் எழுத்தாளனைக் கொல்ல, துவக்கு வேண்டாம், ஒரு சைக்கிள் மோதல் போதும்.
Beautiful
Excellent Sir as usual.
A. Chandrasekar.
arumai iyya.