ஆப்பிளைத் தோல் சீவ ஆரம்பித்தேன். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவதும்…
”மூணு கொளம் வெட்டினேன். ரெண்டு கொளம் பாழு… ஒண்ணுலே தண்ணியே இல்லே’ என்ற கதையாக இருந்தது.
விவசாயி ஏமாற்ற மாட்டான். முடியாமற் போனால் தற்கொலை செய்து கொள்வான். வியாபாரி செய்யக்கூடியவன் தான். ஐந்தில் ஒன்று அழுகல், ஒரு கிலோ என்பது எண் நூற்று ஐம்பது கிராம் என்பதுவே வணிகத் தத்துவம். தாய்ப்பாலில், இளநீரில் மட்டுமே இன்னும் கலப்படம் இல்லை. இந்தியன் என்பவனே மாற்றி மாற்றித் தமக்குள் சூன்யம் வைத்துக் கொள்பவர் போலும்!
“அதமம்” என்ற வார்த்தையின் விளக்கமே இப்போதுதான் தெரிந்துகொண்டேன் , நல்ல பகிர்வு , வணிகமயமான வாழ்வின் அவலம் , துயர் எனக்கும் பலமுறை நிகழ்ந்திருக்கிறது .
“athenna 234 me ippadithaan irukumo” – idhuthaan naanjilaar style. arumai.