”யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்றாரே கணியன் பூங்குன்றன் தனது 13 வரிப் பாடலில்! “நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ” என்றாரே சங்க கால ஒளவை. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்றாரே, பொன்முடியார்! “உண்டால் அம்ம இவ்வுலகம்”என்றாரே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி! “பசிப்பிணி மருத்துவன்” என்றாரே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்! “உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை மினியாது கற்றல் நன்றே” என்றானே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்! யாவும் புறநானூற்று வரிகள்!!