எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக
இருந்தாலும், 27 வெளிநாட்டு சொகுசுக் கார்கள்
வைத்திருந்தாலும்,
எங்காவது ஒரு பயணத்தின்போது,
டயர் பொத்துக்கொண்டால்,
எளிமையான ஒரு தொழிலாளியின் கடைமுன் காத்துக்கிடக்க வேண்டும்.
பங்ச்சர் ஒட்டுபவர் செய்யும் வேலையை,
ஊரைச்சுருட்டிச் சேர்த்த, முதலில் வாங்கிய,
பல கோடி பெறுமதி உடைய காரில் போகிறவன் செய்ய முடியுமா?
பொன் சரிகைப் பட்டுடுத்தி, சில நூறு பவுன் நகைகள்
சாத்தி, காரிலிருந்து இறங்கி, கல்யாண வரவேற்புக்கு
நுழையும்போது செருப்பு அறுந்துபோனால்?
எனவே ஒளவை கேட்கிறாள்…
யான் இனத்தலைவன்,
மதத் தலைவன், மக்கள் தலைவன் என இறுமாந்து
நடந்து என்ன பயன்?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது!
(நாஞ்சில் நாடன்)..