“இதுல பத்துல ஒன்னு மந்திரிக்குப் போயிரும் பெருசு… இன்னொரு பங்கு அதிகாரிக்கும் போயிரும்…”
“அதெப்பிடி தம்பி?”
“நூறு உதிரி பாகம் வாங்கனும்னு வைங்க… டயர், ட்யூப், கியர், கிளட்ச் மாதிரி… நூறுக்கு ஆர்டர் போடுவானுக அறுபது தான் டெம்போக்கு வரும்… பில்லு நூறுக்கும் வந்திரும்.. மிச்சம் காசாட்டுப் போயிரும்…”
“அப்பம் பஸ் ஓட்டுகது…
பழசிலே நல்லதாப் பாத்துக் கழுவித் தொடச்சுப் போட்டுக்க வேண்டியதுதான்… அதுனால தான் மேள தாளத்தோட பஸ் ஓடுது..”
“ஏம்பா? தனியார் புதுசா ஒரு பஸ் எறக்குனா பத்து வருசம் அலுங்காமக் குலுங்காம புதுப்பொண்ணு மாதிரி ஓடுது, கெவர்மென்ட் பஸ் மாத்திரம் மூனு வருசத்திலே இப்படி ஆடுது??