பிரபலங்களுக்கு பத்ம விருதுகள் அனைத்தும் வாங்கக் கிடைக்கும். பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு முது முனைவர் பட்டம் வழங்கி இறும்பூது எய்தி உவக்கும். குடியரசு தலைவர், முதன்மை அமைச்சர், முதலமைச்சர் என அமர்ந்து அவர்கள் இரவு உணவு அருந்துவார்கள். பிறந்த நாளுக்கு முன்னணி அரசியல் கொள்ளையர் வாழ்த்துவர். இறந்தால் வரிசையில் நின்று மலர் வளையம் வைப்பர். வாரிசுகளின் சிரசில் கைவைத்து ஆறுதலும் சொல்வர். ‘வானத்து அமரன் வந்தான் காண், வந்தது போல் போனான் காண்’ என்று புதுமைப்பித்தன் சொற்களில் இரங்கல் செய்தி விடுப்பார்கள். ஆனால் மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்தும், கடத்த முயற்சி செய்யும் தீவிர எழுத்தாளன் ரேஷன் கடையில் வரிசையில் நிற்பான். இஃதோர் அவலம், தொல்காப்பியன் பிறந்த மொழி பேசும் நாட்டில்.

Fantastic !!