வன்னி

திரும்பவும் சொல்கிறேன்சொல்லின் தீ போதாதுசிந்தையில் தீ வேண்டும்இருந்தால் நம்மை இரண்டாந்தர இந்தியனாககறுப்பனாகதமிழன் தானே என்று இளப்பமாக எவரும் கருத மாட்டார்நமது மொழியும்மரபும்பண்பும் இம்மாநிலத்து எவரும் நமக்கு இட்ட பிச்சையில்லைஉரிமைகாவலர் எனக் கருதும் எந்தக் கோவலரும் இதைக் காக்க மாட்டார்கள்மரபையும்பண்பையும்மொழியையும் காப்பதாகப் பேசுவார்கள்செயலில் வைப்பாட்டிகளின் வாரிசுகளுக்கும்பத்துத் தலைமுறைக்குச் சொத்துச் சேர்ப்பார்கள்
பஞ்ச பூதங்கள் என்பர். பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்பன அவை. நாம் ஐம்பெரும் பூதங்கள் என்போம். நிலம், நீர், வளி, வெளி என்பன அவை. வளி எனில் காற்று, கால். வெளி எனில் வானம், space. ‘ஐந்தறு பூதம் சித்திப்போய் ஒன்றாக’ என்பார் பாரதி.

பூதங்கள் அற்றுப் பொறி அற்றுச் சார் ஐம்புலன்கள் அற்றுப்

பேதம் குணம் அற்றுப் பேராசைதான் அற்றுப் பின்முன் அற்றுக்

காதம் தரணங்களும் அற்ற அனந்தக் காட்சியிலே

ஏதம் களைந்திருப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே!

என்கிறார் பட்டினத்தார், ஏகம்ப மாலையில்.
இறைவா! காஞ்சிபுரத்து ஏகம்பனே! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பெரும் பூதங்கள் அற்று, ஐம்பொறிகளும் அற்று, அவ்வையம் பொறிகள் சார்ந்த சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புலன்களும் அற்று, வேறுபாடுகள் அற்று, இராசதம், தாமசம், சாத்வீகம் ஆகிய முக்குணங்களும் அற்று, பேராசை அற்று, உயிரின் இரு நிலைகளாகிய முந்தைய நிலையும் இப்போது உள்ள நிலையும் அற்று, அதாவது இருள் நிலை, மருள் நிலை அற்று, வஞ்சனை செய்யும் கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனும் நான்கும் அற்று, ஆனந்தக் காட்சியில் குற்றம் களைந்திருப்பேன்!
பஞ்ச பூதங்களுக்கு என சிவத்தலங்கள் உண்டு. முறையே காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் என்பார்கள். என்னவென்று தெரியாமலேயே அனைத்துத் தலங்களுக்கும் நான் போனதுண்டு. பம்பாயில் நான் பணிபுரிந்தபோது, நூற்பாலை இயந்திரங்கள் விற்பனைக்கு, தனிப் பிரதிநிதியாக, எங்கள் தலைமை அலுவலகம் என்னை காளஹஸ்தி அனுப்பியது இப்போது நினைவுக்கு வருகிறது.
எக்காரணம் பற்றியும் இஃதோர் ஆன்மீகப் பயணக்கட்டுரை அல்ல. நாம் இங்கு தீ பற்றிப் பேசப்போகிறோம். ஐம்பெரும் பூதங்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது தி. ஆகவே தான் முக்கண்ணனின் மூன்றாவது கண்ணில் தீ என்றார் போலும். கிரேக்க இதிகாசங்களில் எவ்வினைக்கும் ஒரு கடவுள் உண்டு. எடுத்துக்காட்டுக்கு Morpheus. தமிழில் மார்ஃபீயஸ் என்று எழுதுவோமா? இருபுறமும் இறகுடைய கடவுள். கனவுகளின் கடவுள். அப்பெயரில் ஒரு Blended Premium Brandy இருக்கிறதே என்று கேட்கலாம். அதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.
நம்மிடம் தீக்கு ஒரு கடவுள் உண்டு. அக்னி என்பார்கள். அக்கினி என்றும் எழுதலாம். அக்கினி தேவன் என்பார் நெருப்புக் கடவுளை அனலன் என்றொரு சொல்லுண்டு அக்கினி தேவனைக் குறிக்க. பரிபாடலில் செவ்வேள் கடுவன் இளவெயினனார் பாடல், தீக்கடவுளைக் குறிக்க அனலம் எனும் சொல்லை ஆள்கிறது. ஆக, அனல், அனலம், அனலன் எனில் நெருப்பு என்று அறியலாம். சூரியனின் இன்னொரு பெயர் அனலி. அனலி எனில் நெருப்புமாம். சிவபெருமானை அனலாடி என்கிறது தேவாரம். அக்கினி என்பவன் The God of Fire. அக்கினி தேவன் என்பவன் வேறு. அக்கினி குமாரன் என்பவன் வேறு. அவன் ஸ்கந்தன். அதாவது முருகன். முருகனை அக்கினிப் பூ என்பார்கள்.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்பன நான்கு திசைகள். இதை நான் சொல்லவேண்டியதில்லை. திருமாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வார்,

குட திசை முடியை வைத்துக்

    குணதிசை பாதம் நீட்டி,

வடதிசை பின்பு காட்டித்

   தென்திசை இலங்கை நோக்கி

கடல் நிறக் கடவுள் எந்தை

   அரவனத் துயிலுமா கண்டு

உடல் எனக்கு உருகுமாலோ!

   என் செய்வேன் உலகத்தீரே!

என்று நாற்றிசையும் பேசுகிறார். குணதிசை எனில் கிழக்கு, குட திசை எனில் மேற்கு. திசைக்கோணங்கள் என்று நான்கும் சேர்த்து எட்டு திசைகள் என்பர். கிழக்கு, தென்கிழக்கு, வட கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு என்பன அட்ட திக்குகள். மேல் திசையும் கீழ்த்திசையும் சேர்த்து திசைகள் பத்து என்பார் முப்பரிமாணத்தில்.
இவற்றுள் தென்கிழக்குத் திசையின் ஆட்சியர் அக்கினி. சுந்தர காண்டத்தில், பிணி வீட்டுப் படலத்தில், கம்பன், ‘திசை நின்று ஆட்சியர் என்று இசைக்கின்றவர்’, என்கிறார். ஜில்லா கலக்டர் என்று அழைக்கப்பட்டவர், மாவட்ட ஆட்சியர் என்று அழைக்கப்பட்டத் தொடங்கியது கம்பன் சொல்லைக் கடன் வாங்கித்தான். ஆனால் அவர்களே தம் முற்பிறப்பில் கம்பராமாயணத்தை எரிக்கச் சொன்னார்கள். உண்ணீரில் குறியை விட்டு ஆழம் பார்ப்பவர்கள்.
எட்டுத் திக்குகளுக்கும் காவலர் எனக் கடவுள்கள். நாம் தென்கிழக்குத் திசையின் அதிபதியான அக்கினி குறித்துப் பேசினோம். எட்டுத் திசைகளையும் எட்டுக் களிறுகள் தாங்குவதாயும், எட்டு மா நாகங்கள் தாங்குவதாயும் நம் மரபில் தொன்மங்கள் உண்டு. தென் கிழக்குத் திசையின் திக்கயம் புண்டரீகம் எனும் களிறு. அதன் பிடியானை கபிலம். களிறு என்றால் ஆண்யானை என்றும் பிடி என்றால் பெண்யானை என்றும் தெரியும் தானே! தென்கிழக்கு மூலையை அக்கினி மூலை என்பார்கள்.
அக்கினி என்ற சொல்லுக்கு, யாகத் தீ என்றும் பொருள். அக்கினி கும்பம் என்பர் ஓமாக்கினி வளர்க்கும் குழியை. கொங்கு நாட்டில் குண்டம் என்றாலே தீ மிதிக்கும் குண்டம். மக்களின் அன்றாட வழக்கில் அக்கினிப் பரீட்சை என்றால் very riskly and dangerous job என்று பொருள்.
பண்டைய இந்திய மரபில், சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்றொரு வழக்கம் இருந்தது. ராஜாராம் மோகன் ராயின் அமைப்பு தொடர்ந்த போராட்டங்களினால் சதி சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டதாக அறிகிறோம். இன்றும் வட இந்திய உட்பகுதிக் கிராமங்களில் சில சமயம் சதி நடைமுறையில் இருக்கிறது எனச் செய்திகள் உண்டு. நமது பெண் தெய்வங்களில் பலரும் கணவரின் இறப்பின் போது உடன்கட்டை ஏறியவர்தாம். உடன்கட்டை ஏறுதலுக்கு தீப்பாய்தல் என்றொரு சொல்லும் உண்டு. சதியின் கொடுமையைக் காட்சி வடிவத்தில் நீங்கள் உணர வேண்டுமானால், ‘அத்தர் கலீ காத்ரா’ என்ற கெளதம் கோஷ் திரைப்படம் பார்க்க வேண்டும். சத்ருகன் சின்ஹா, வெட்டியானாக நடித்த படம். உடன் கட்டை ஏறுதலை அக்கினிப் பிரவேசம் என்றார்கள். இராமாயணத்து சீதையின் அக்கினிப் பிரவேசம் வேறு வகையானது. ஜெயகாந்தனின் ஆரம்பகாலச் சிறுகதையொன்றின் தலைப்பு அக்கினிப் பிரவேசம். ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கதை அது.
சீதை எரிபுகல், கம்பன் காட்டாத காட்சி. ஆனால் குறித்த நாளில் இராமன் வரத் தாமதம் ஆனதால், பரதன் சத்துருக்கனனைப் பார்த்து, ‘எரி போய் அமைக்க’ என்கிறான். செய்தி அறிந்த கோசலையும் ‘எரி அமைத்த மயானத்தை’ எய்த்கின்றாள். பரதனைப் பார்த்துச் சொல்கிறாள்.

‘நீ இது எண்ணினையேல், நெடு நாடு எரி

பாயும், மன்னரும் சேனையும் பாயுமால்;

தாயர் எம் அளவு அன்று; தனி அறம்

தீயின் விழும்; உலகம் திரியுமால்’

என்று. மகனே, பரதா! நீ எரியில் விழுந்து உயிர் துறக்க எண்ணினால், இந்த நாட்டில் உள்ள அனைவரும் தீப்பாய்வர். மன்னர்களும் அரிய சேனைகளும் எரி பாய்வர். தாயார்களாகிய நாங்கள் மட்டுமன்றி, ஒப்பற்ற அறமே தீயில் விழும். உலகமும் நிலை கெட்டுச் சுழலும்.
அக்கினியில் பிரவேசித்திருப்பான் பரதனும், தக்க தருணத்தில் அனுமன் வந்து சேர்ந்திருக்கவில்லை எனில். கம்பன் பேசுகின்றான்,

‘ஐயன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;

மெய்யின் மெய் அன்ன தின்னுயிர் வீடினால்,

உய்யுமே, அவன்?’ என்று உரைத்து, உள் புகா

கையினால் எரியைக் கரி ஆக்கினான்.’

என்று. பரதன் தீப்பாய்தலைத் தடுக்கும் முகத்தான், அனுமன் அவசர உரையாடல் அது. ‘தலைவனான இராமன் வந்தான், மேலானவன் வந்தான். உண்மையின் உடல் போன்ற உன்னுயிர் அழிந்தால் அவன் உயிர் தரிப்பானா?’ என்று உரைத்து, உள்ளே நுழைந்து கையினால் எரியும் நெருப்பைக் கரி ஆக்கினான் அனுமன். நாம் காசைத்தான் கரி ஆக்கினோம்.
ஊழித்தீ என்பார்கள், ஊழிக்காலத்தில் கடலில் எழும் பெரு நெருப்பை. வடமொழியில் அதனை வடவாக்கினி என்பார்கள். காலாக்கினை என்பதும் உண்டு. கம்பன் அதனைக் காலச் செந்தீ என்பான். ஆண்டுதோறும் நாம் கேட்கும் வேனிற்காலச் சொற்றொடர், ‘அக்கினி நட்சத்திரம்’ என்பது. Dog Day என்பார்கள் ஆங்கிலத்தில். சித்திரை – வைகாசி மாதங்களின் வெப்பம் உச்சியில் இருக்கும் நாட்கள் அவை. பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் முதல், ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதம் வரை சூரியன் நிற்கும் காலம் என்கிறது வான சாத்திரம்.
கனிந்த நெருப்பைத் தணல் என்கிறார்கள். அடுப்பில் கிடக்கும் தீக்கங்குகளை அடுப்புத் தணல் என்பர். ‘தணல் முழுகு பொடியாகும் செக்கர் மேனி’ என்று சிவனைக் குறிக்கும் தேவாரம். அடுத்த வெயில் காய்ச்சும்போது ‘அனலடிக்குது’ அல்லது ‘அனல் வீசுது’ அல்லது ‘அனல் பறக்குது’ என்போம். அனல் காற்று என்போம் வெப்பக் காற்றினை. அனல் எனில் வெப்பம் எனும் பொருளில் கம்பர் பயன்படுத்துகிறார். மேலும் வடவாக்கினியை வடவைச் செந்தீ என்றவன், வேறொரு பாடலில் ‘வேலை வட அனல்’ என்பான். வேலை எனில் கடல். அனல் எனில் அக்கினி. தீப்பொறியை அனல்பொறி என்போம். பெரு நெருப்பை அனற்குவை என்பார்கள்.
தீக்கடை கல் அல்லது சிக்கிமுக்கிக் கல்லுக்கு அனற்கல் என்றொரு மாற்றுச் சொல்லுண்டு. அனலுதல் என்ற சொல்லுக்கு, Tamil lexicon, To burn, glow, blaze, to be hot, to cause heat as the sun, as fire, as fever என்று பொருள் தருகிறது.
அழல் என்றாலும் நெருப்புத்தான். ‘நெருப்பு அழல் சேர்த்தக்கால் நெய்போல்வதூவும்’ என்று உவமை சொல்கிறது நாலடியார். நெருப்பிலிட்ட நெய் போல என்று பொருள். அழல்தல் என்றால் எரிதல். ‘விளக்கு அழலும் பாயலுள்’ என்கிறான் கம்பன் கடிமணப் படலத்தில். அழலுதல் என்றால் பிரகாசித்தல் என்றும் பொருள் கொள்ளலாம். அழல் எனில் காந்துதல் என்றொரு பொருள் இருக்கிறது. அழலை என்பதோர் வெப்ப நோய். தீவண்ணன் என்று சிவனைப் பேசும் தேவாரம், ‘அழல் வண்ணன்’ என்றும் குறிக்கிறது. ஆண்டாள் ‘நெருப்பென்ன நின்ற நெடுமாலே!’ என்கிறாள். அழலாடி, அழல் ஏந்தி, அழற்கண்ணன், அழல் நிறக்கடவுள், அழல் காத்தோன் என்பார் சிவனை. எரியூட்டுதல் அல்லது நெருப்பூட்டுதலை அழலூட்டுதல் என்கிறது தேவாரம். இளங்கோவடிகள், ‘பொன் தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே நல் தேரான் கூடல் நகர்’ என்கிறார், கண்ணகி மதுரையை எரியூட்டும்போது. சங்க இலக்கியங்கள் பலவும் அழல் எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றன.
அழலி எனில் நெருப்பு. அழற் கதிர் என்றால் சூரியன். வீரபத்திரனை அழற்கண் வந்தோன் என்பர். அழலவன் அல்லது அழலோன் என்றாலும் சூரியன் தான். அதே சொற்களால் அக்கினி தேவனையும் செவ்வாய் கிரகத்தையும் குறிப்பார்கள்கோபத்துடன் பார்ப்பது அழல் விழித்தல் என்றும்அழல் எழ விழித்தல் என்றும் இலக்கியம் பேசும்எல்லாம் சரி!ஆனால் அழன்அழனம் என்றால் அவை பிணத்துக்கு மாற்றுச் சொற்கள்அழல் உண்ணப் போவதால் அழன்அழனம் போலும்.
கனல் எனினும் தீ தான்ஐங்குறுநூறு சூரியனைக் குறிக்க கனலி என்ற சொல்லை பயன்படுத்தும்கம்பன் சீதையைக் கற்பின் கனலி என்பார். ‘புவி அளாய கற்றை வெங் கனலி’ என்றும்  சூரியனைப் பேசுவான்கண்ணகி மதுரையை எரித்த போது, ‘கரவையும் கன்றும் கனல் எரி சேரா’ என்கிறார் இளங்கோபரிபாடல் திருமாலைப் பாடும் போதுஎரிமலர் சினை இய கண்ணை’ என்கிறதுஎரிமலரை ஒத்த கண்களை உடையவன் என்று பொருள்எரிமலர் என்றால் செந்தாமரைஎரி என்றாலும் தீ தான்.

‘ எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்பிழைத்துஒழுகுவார்.’

என்கிறது திருக்குறள்நெருப்பில் அகப்பட்டவர் பிழைத்தாலும் பிழைக்கலாம் ஆனால் பெரியாரை இகழ்ந்தவர்கள் உய்ய மாட்டார்கள் என்பது பொருள்இந்தக் குறளைத் திராவிடக் கழகத்தவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.’

என்பதும் திருக்குறளேவைத்தூறு என்றால் வைக்கோல்.எரிமுன்னர் எனில் நெருப்பின் முன்னால் என்று பொருள்மற்றுமோர் சுவையான குறள்.

நெய்யால் எரி நுதுப்போம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதுப்போம் எனல்.’

என்பதுநுதுப்போம் – அணைப்போம்கௌவை – பழிச்சொல்.
நெய்யை ஊற்றி நெருப்பை அணைப்போம் என்பது போல் இருக்கிறது பழிச்சொல் பரப்பிஅலர் தூற்றிகாதல் தீயை அணைக்கலாம் என்று சொல்வது என்று பொருள்.
எரிதல் எனில் பிரகாசித்தல் – to flame, to ignite. எரித்தல் எனில் நெருப்பு வைத்துக் கொளுத்துதல்எங்களுரில் எரிப்பு என்றால் காரம் என்றும் பொருள். ‘தீயல் ரொம்ப எரிக்கு’ என்பார்கள்தீயல் என்றால் ஒரு வகைக் காரக்குழம்புஅழல் படு காதையில் இளங்கோ,

ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது

காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன

என்கிறார்.
    பிரம்மாத்திரத்தால் கட்டப்பட்டு வாலில் பந்தம் சுற்றிநெருப்பு மூட்டப்பட்டு துரத்தப்பட்ட அனுமனுக்காக அக்னி தேவனிடம் சீதை வேண்டுகிறாள்.

நீயே உலகுக்கு ஒரு சான்றுநிற்கே தெரியும் கற்பு – அதனில்

தூயேன் என்னின்தொழுகின்றேன் – எரியே அவனைச் சுடல் என்றாள்

என்பது பாடலின் இறுதி வரிகள்அக்கினி தேவனேநீயே உலகுக்கு ஒரு சான்றுஉனக்கே தெரியும் என் கற்புஎனவே நான் தூயவன் என்றால்உன்னை தொழுது வேண்டுகிறேன்எரியேஅனுமனைச் சுடாதேஎரியே என்றால் நெருப்பே என்று பொருள்.
பரிபாடலில்வைகையைப் பாடும் நல்லந்துவனார், ‘எரிசடைஎழில் வேழம்’ என்கிறார்இங்கு எரி எனில் கார்த்திகைசடை என்றால் திருவாதிரைஎழில் வேழம் என்றால் பரணி ஆகிய நட்சத்திரங்கள்எரியின் பிறப்பாக அருமையான சொற்களைத் தருகின்றன தமிழ் இலக்கியங்கள்எரிக்கொடி என்றால் தீக்கொழுந்துஐங்குறுநூற்றில் பாலைத்திணை பாடிய ஓதலாந்தையார்வரவு உரைத்த பத்து எனும் பகுதியில் தோழியின் கூற்றாகப் பாடுகிறார்.

எரிக்கொடிக் கவைஇய செவ்வரைப் போலச்

சுடர்பூண் விளங்கும்  ஏந்தெழில்  அகலம்

நீ இனிது முயங்க, வந்தனர்;

மாயிருஞ் சோலை மலை இறந்தோரே!’

என்றுதீக்க்கொழுந்து வரிசையாகச் சூழ்ந்த சிவந்த மலை போலஒளி வீசும் அணிகலன்கள் அணிந்த மார்புடன்நம் தலைவன் பெரிய கரிய சோலைகளைக் கடந்து வருகின்றான்நீ முயங்கிக் களிக்கலாம் என்பது பாடலின் பொருள்.
எரிகதிர் எனில் சூரியன்எரி நாள் என்றால் கார்த்திகைஎரி வளர்ப்போர் என்றால் பார்ப்பார்எரிவனம் எனில் சுடுகாடுஎரிசுடர் என்றால் சுடரும்  நெருப்புஎரிகொள்ளி எனில் கடைக்கொள்ளிஎரிபந்தம் என்றால் தீப்பந்தம்எரிவிழித்தல் எனில் தீ எழ விழித்தல் என்று அகராதிகள் பொருள் தருகின்றன.
முன்பே சொன்னோம் – அனலாடிஅழலாடி என்றால் சிவன் என்றுஎரியாடி என்றாலும் சிவனேபதினோராம் திருமுறையில் காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதியில்ஒரு அற்புதமான வெண்பா நினைவுக்கு வருகிறது.

அவனே இரு சுடர் தீ  ஆகாச மாவான்

அவனே புவி புனல் காற்று ஆவான்

என்கிறார் அம்மைஇரு சுடர் என்றால் சூரியனும் சந்திரனும்தீஆகாசம்புவிபுனல்காற்று என்பன ஐம்பூதங்கள்.
நூற்றியொரு பாடல்கள் கொண்ட அம்மையில் அற்புதத் திருவந்தாதியில் 98-வது பாடல்.

அழலாட அம்கை சிவந்ததோ – அம்கை

அழகால் அழல் சிவந்தவாறோ – கழலாடப்

பேயோடு கானில் பிறங்க அனலேந்தித்

தீயாடுவாய் இதனைச் செப்பு!’

என்கிறதுகனலாடிஅழலாடிஅனலாடி,எரியாடிதீயாடியும் அவனேகால்களில் அணிந்த கழல்கள் ஒலிக்கபேய்கள் ஆடும் மயானத்தில் ஒளிரும் அனல் ஏந்தித் தீயாடும் சிவனேஇதனை நீ சொல்லுஅழலைக் கையிலேந்தி இருப்பதால் உன் கை செம்மை நிறமாகி சிவந்ததோஅல்லால் உன் அழகிய கையின் சிவந்த நிறத்தால் கையில் இருக்கும் அழல் செம்மை நிறம் பெற்றதா?
திருவிரட்டை மணிமாலை என்ற காரைக்காலம்மையாரின் இன்னொரு நூலில் பாடுகிறார்:

அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோறும்

முடித்தலமும் நீ முரித்த வாறென் – முடித்தலத்தில்

ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்

நீறாடி நெய்யாடி நீ!’

என்றுஇறைவாசடையில் உனக்கு இன்னரு நீர்க் கங்கை ஆறுஎனவே நீ ஆறாடி எப்போதும் வெப்பம் குறையாத நெருப்பில் நடமாடுகிறவன்எனவே நீ அனலாடி நெருப்பில் தோன்றிய நீறு அணிந்தவன்ஆகவே நீ நீறாடி நெய்யிலே முழுக்காட்டப் பெற்றவன்ஆதலினால் நீ நெய்யாடிஆனால் அன்று கைலாய மலையை பெயர்க்க வந்த பத்துத் தலை இராவணணின் பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் நீ முறித்த காரணம் என்னஇது பாடலின் பொருள். தழல் என்றாலும் தீயே!

செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் 

சந்தனம் என்று யாரோ தடவினார்!

என்பது நந்திக் கலம்பகம்.
அனல்அழல்தழல்கனல்தணல்எரி போல தீயை குறிக்கும் மற்றொரு சொல் நெருப்பு.அங்கே எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டித் தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்’ என்பார் பாரதி,  ‘ஊழிக்கூத்து’ பாடலில்நெருப்பு எனில் பேரழிவும் ஆகும்கடுஞ்சீற்றம் கொள்பவனைக் குறிக்க ஆங்கிலத்தில் Fire Brand என்றொரு சொல்லுண்டுஅதற்கு இணையாக நெருப்பன் என்றொரு சொல்லுண்டு நம்மிடம்நெருப்பின் பெண்பால் பெயர் நெருப்பி என்கிறது Lexicon. சிவப்பன் – சிவப்பிகறுப்பன் – கறுப்பிமருப்பன் – மருப்பி என்பது போலமருப்பன் என்றால் என்ன என்று கேட்பீர்கள்மருப்பு என்றால் தந்தம்.
எரிமலை வெடித்துச் சிதறி பாயும் Lava எனப்படும் அக்னிக் குழம்பு நெருப்பாறு என்று பெயர்ப்படும்நெருப்புக்கண் என்றனர் நெற்றிக்கண்ணைதீச்சட்டியை நெருப்பு இடு கலம் என்றோம், பெருந்தீயை நெருப்புக் காடு என்றோம். தீக் கொள்ளியை நெருப்புக் கொள்ளி என்றோம், நெருப்புக் கட்டை என்றோம். Ostrich என்ற பறவையை தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி என்றோம்கணப்புச் சட்டியை நெருப்புச் சட்டி என்றார்கள்அடர்ந்துஉயர்ந்து எரியும் தீப்பிழம்பை நெருப்புத்தூண் என்றார்கள்ஊழிக்காலத்தில் பெய்யும் அக்னி மழையை நெருப்பு மழை என்றார்கள்.
நெருப்பு என்னும் சொல்லை திருவள்ளுவர் ஒரேயொரு குறளில் ஆள்கிறார்நல்குரவு அதிகாரத்துக் குறள் அதுநல்குரவு என்றால் வறுமை என்று பொருள்.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.’

சுட்டெரிக்கும் நெருப்பின் உள்ளே கூட நிம்மதியாக உறங்கிவிடலாம்ஆனால் வறுமையில் கண்களுக்கு உறக்கம் வராது என்பது குறளின் பொருள்.
நெருப்புப் போல அதிகமாக புழக்கத்தில் இருக்கும் சொல் தீதீக்கதிர் என்ற பெயரில் இடதுசாரி நாளிதழ் ஒன்றுண்டு. ‘தீபரவட்டும் என்றொரு நூலுண்டு தமிழில்அறிஞர்பேரறிஞர்கவிஞர்பெருங்கவிஞர் எனும் பட்டங்கள் கோமாளிகள் அணியும் சட்டை போல் ஆகிவிட்டதுபெரியவர் என்றாலே அது பெரிய சொல்அதன் மேல் பல்லடுக்குகளாக மகா என்ற பட்டம் ஏற்றி கனம் கூட்டுகிறார்கள்அது போன்றே அமிர்தம் மகாஅமிர்தம் ஆகிறதுபிரசாதம் மகாபிரசாதம் ஆகிறதுதகுதியினால் கனம் சேர்ப்பதை துறந்துவிட்டுசொற்களால் கனம் ஏற்றுகிறார்கள்தீயை மகாத்தீ என்று எதற்காக சொல்ல வேண்டும்?
தீப்பந்தம்தீச்சட்டிதீநாக்குதீக்கொழுந்துதீமிதிதீக்கனல்தீப்பிழம்புதீக்கொள்ளிதீவட்டிதீக்காயம் என்று எத்தனை எத்தனை சொற்கள்தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலாநின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றார் பாரதிசற்று விரல்விட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

தீயுனுள் தெறல் நீபூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீசொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீமறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீபூதத்து முதலும் நீ;

வெஞ்சுடர் ஒளியும் நீதிங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீஅனைத்தின் உட்பொருளும் நீ.

என்கிறது பரிபாடல்தெறல் எனில் ஆற்றல்தீயின் ஆற்றல் என்பது வெப்பம்எரிக்கும்பொசுக்கும்கரிக்கும்உருக்கும்சாம்பலாக்கும் தன்மைஇந்த இடத்தில் நெருப்பினுள் வெப்பம் நீ என்று பொருள் கொளல் தகும்.
தாம் நம்பும் தெய்வங்களைத் திருப்திப்படுத்த யாகங்கள் வேள்விகள் செய்து தீ வளர்ப்பார்கள்.நெய் பெய்ய பெய்ய தீ நாக்கு கொழுந்துவிட்டு எரியும்விண்ணின் மேகங்கள் ஓடம் போலயானை போல, மரம் போல வடிவ மாயங்கள் செய்வது போலதீ நாக்குகள் உயர்ந்து எழுந்து ஆடும் போதுமனது கற்பிக்கும் உருவங்கள் போலத் தோன்றும்வழிபாடு செய்பவர்கள், அக்கினியில் சத்திய நாராயணன் தோன்றினார்திருமால் தென்பட்டார்ஆதிசிவன் அவதரித்தார் என்று அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தனர்புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டனர்எவரும் தமது விருப்பத் தெய்வத்தை தழுவிக்கொள்ள முயன்றதில்லைகுதர்க்கமாக எனக்கு சில சமயம் தோன்றும்இப்படித்தான் அரசியல் தொழில் செய்யும் தரகர்களிடம்கொள்ளையரிடம்குற்றவாளிகளிடம்பொறுக்கிகளிடம் நாம் பெரியாத்மாக்களை காண்கிறோமா என்று.
திருக்குறளில் 18 பாடல்கள் தீ பற்றிப் பேசுகின்றனசில குறள்கள் தீ என்றால் தீய எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளனயாவரும் அறிந்த குறள் –

தீயவை தீய பயத்தலான் தீயவை

தீயினும் அஞ்சப்படும்.

இன்னொன்று –

‘தீயினால் சுட்ட புண்  உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.’

மற்றொரு குறள்:

‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார்

இன்பத்துப் பாலில் அற்புதமான குறள்:

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீ யாண்டுப் பெற்றாள் இவள்

விலக விலகச் சுடும்நெருங்க நெருங்கக் குளிரும்விநோதமான நெருப்புஇப்படியானதோர் நெருப்பை இவள் எங்குப் பெற்றாள்பதினெட்டுக் குறட்பாக்களையும் சொல்லிக் கொண்டு போகப் பிரியமில்லை எனக்கு.
கம்பன்குகனை, ‘சீற்றம் இன்றியும் தீயெழ நோக்குவான்’ என்று குணச்சித்திரம் காட்டுவான்.
அண்மையில் காலமான எனது நண்பர் விஜய குமார் குன்னிசேரிமலையாளத்தின் விகடகவிதமிழில் இருந்து மலையாளத்துக்கும்மலையாளத்தில் இருந்து தமிழுக்கும் மொழி பெயர்ப்புகள் செய்தவர்மாத்ரு பூமி நாளிதழின் கோவைக்கிளை மேலாளர்சில மாதங்கள் முன்பு சொன்னார்அண்மையில் வெளியான மலையாள நூலொன்றின் தலைப்பு: ’தீக்கடல் கடைந்த திரு மதுரம்’ என்றுஅத்தனையும் தமிழ்ச் சொற்களேஆனால் தமிழனுக்கு அர்த்தமாகாதுதமிழர் தலைவர்கள் பலருக்கும் அர்த்தமாகாதுபாற்கடல் கடைந்த போது ஆலகாலம் வந்ததுதிருமகள் வந்தாள்ஐராவதம் வந்ததுகௌத்துவ மணி வந்ததுகாமதேனு வந்ததுகடைசியாக அமுதமும் வந்தது என்பது தொன்மம்ஆனால் தீக்கடல் கடைந்தபோது வந்த திருமதுரம் எது?
பசியை வயிற்றுத் தீ என்கிறது புறநானூறுஅதுவே கும்பித் தீவயிற்றுக் காய்ச்சல் என்றால் பசி எனப் பொருள் தரும் யாழ் அகராதி.
தீ எனில் எரிப்பது என்பதறிவோம்ஆனால் தீதானே போய்த் தானாக எரிக்குமாகண்ணகி கூடல் மாநகரை எரித்தாள்அசோக வனத்துச் சீதை, ‘எல்லாம் நீத்த உலகங்கள் யாவையும் ஒரே சொல்லினால் சுடுவேன்’ என்றாள்மகாகவி பாரதியோ,

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

என்கிறார்.
எனவே தீயை வைக்க வேண்டும்தீமைகள் பாலும் தீயவர் மேலும்வியப்பாக இருக்கிறது எனக்குஇந்த மொழியின் சொல்லின் வீச்சை நினைத்துஎனினும் தோன்றுகிறதுதீ எனும் சொல் மட்டும் போதுமாசிந்தையில் தீ வேண்டாமாஅண்மையில் ஏறு தழுவுதல் போராட்டத்தின் போது வெளிப்பட்டது ஒரு சிறு தீப்பொறிடாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கான எதிர்ப்பில் ஆங்காங்கே வெளிப்படுகிறது சிறு தீப்பொறிகள்சங்கப் புலவன் சொன்னான், ‘அடுதீ அல்லது சுடுதீ அறியாது.’ அந்த வியன் நகர் என்றுஅதாவது சமையல் செய்யும் தீ மட்டுமே அறிவார்களாம் அம் மாநகர மக்கள்.
இன்றும் அப்படித்தான் கருதிக் கனவுலகில் வாழ்கிறார்கள்தமிழனுக்குச் சமைக்கும் தீ மட்டுமே தெரியும் என்றுநினைப்பைச் சொல்லியும் குற்றமில்லைஈழத்தில் இரண்டு லட்சம் தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும்உலகம் தடை செய்த ரசாயனக் குண்டுகளாலும் எரிந்த போது நாம் சப்பாத்தி குருமாவும்ஆலு பரோட்டாவும் சுட்டுக் கொண்டிருந்தோம்அடுப்பில் தீ இருந்தது நமக்குஉணர்வில் தீ அவிந்து போயிருந்தது.
எழுதுகிறார்கள் இன்றும் பத்தொன்பது பேர் இறப்பை வாசிக்கும்போது நெஞ்சு வெடித்தது என்றும்நாற்பத்து மூன்று பேர் கருகியபோது ஈரற்குலை துடித்தது என்றும்இரண்டு லட்சம் பேர் இனக்கொலை செய்யப்பட்டபோது எந்த அதிர்வும் துக்கமும் வருத்தமும் கண்ணீர்க்குளமும் இல்லைதுக்கமும் தோதுப்போலத்தான் வரும் போலும்இதைச் சொன்னால் நம்மை வெள்ளாள எழுத்து என்று வகைமை செய்வார்கள்.
திரும்பவும் சொல்கிறேன்சொல்லின் தீ போதாதுசிந்தையில் தீ வேண்டும்இருந்தால் நம்மை இரண்டாந்தர இந்தியனாககறுப்பனாகதமிழன் தானே என்று இளப்பமாக எவரும் கருத மாட்டார்நமது மொழியும்மரபும்பண்பும் இம்மாநிலத்து எவரும் நமக்கு இட்ட பிச்சையில்லைஉரிமைகாவலர் எனக் கருதும் எந்தக் கோவலரும் இதைக் காக்க மாட்டார்கள்மரபையும்பண்பையும்மொழியையும் காப்பதாகப் பேசுவார்கள்செயலில் வைப்பாட்டிகளின் வாரிசுகளுக்கும்பத்துத் தலைமுறைக்குச் சொத்துச் சேர்ப்பார்கள்கம்பன் பேசுவான்கும்பகர்ணன் கூற்றாக:

பேசுவது மானம்இடை பேணுவது காமம்

கூசுவது மானுடரைநன்று நம் கொற்றம்!’

என்றுஅதுபோல இருந்து பயனென்னஇருந்தும் பயனென்னசிந்தையில் எரிய வேண்டும்கொழுந்து விட்டுஅறத்தீ!
சற்று வேறு தடத்தில் பயணப்பட்டு விட்டோம்எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கட்டுரை குறித்து உரையாடிக் கொண்டிருந்தேன்மதிப்புற்குரிய திரு. D. பால சுந்தரம் அவர்களிடம்அவரைத் தொழிலதிபர் என்று அறிவார்கள் எளிதில்ஆனால் வடமொழி இலக்கியத்திலும் வைணவ இலக்கியத்திலும் தேர்ந்த புலமை உடையவர் என்று அறியார் பலரும்அவரிடம் கவி காளமேகத்தின் பாடல் ஒன்றைச் சொன்னேன்நிந்தாத் துதி வெண்பா அது.

தீத்தான் உன் கண்ணிலே, தீத்தான் உன் கையிலே,

தீத்தானும் உன்றன் சிரிப்பிலே–தீத்தானுன்

மெய்யெலாம்! புள்ளிருக்கும் வேளூரா! உன்னை இந்தத்

தையலாள் எப்படிச் சேர்ந்தாள்?”

என்பது நான் சொன்ன பாடல்உன் கண்ணிலே தீஉன் கையிலே தீஉன் சிரிப்பிலும் தீஉன் மெய்யெலாம் தீபுள்ளிருக்கும் வேளூரில் உறைபவனேஇந்தத் தையல்உமைஉன்னை எப்படிக் கூடினாள்மிகவும் இடக்கான கேள்விதான்.
D.B. என்னிடம் கேட்டார், “அப்பைய தீட்சிதர் கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்றுஉண்மையில் கேள்விப்பட்டிருக்கவில்லைபதின்மூன்றாம் நூற்றாணடைச் சேர்ந்த அப்பைய தீட்சிதர் வேலுரை அடுத்த விரிஞ்சிபுரம் ஊரினர்தீவிர சைவர்வடமொழியில் பாடல்கள் எழுதீயவர் என்ற தகவல்களைச் சொன்னவர்கவி காளமேகத்துடன் ஒப்பிடும்படியானஅப்பையர் தீட்சிதர் பாடல் ஒன்றைச் சொன்னார்சொன்னதுடன் நில்லாதுஅந்த சமற்கிருத பாடலின் தமிழாக்கமும் எழுதித் தந்தார்அடுத்த சந்திப்பின் போதுதமிழாக்கம் மட்டும் கீழே தருகிறேன்.
ஹேகனக சபா நாதனேதலையிலோ கங்கையும் சந்திரனும்கை கால்களிலோ குளிர்ந்த பாம்புகள்இடப்பாகத்திலோதயையால் ஈரமான பனிமலையின் புத்ரிஉடல் முழுதும் சந்தனப் பூச்சுஇப்படிப் பட்ட அதீதக் குளிர்ச்சியைத் தாங்குவதற்கு உன்னால் எப்படி முடியும்துன்பங்களால் வாட்டப்பட்ட என் மனத்தில்ல் நீ நித்யமாக வசிக்கவில்லை என்றால்?” இந்த வெப்பத்தில் வசிப்பதால்தான் அத்தனை குளிர்ச்சியையும் உன்னால் தாங்க முடிகிறது என்பது அப்பைய தீட்சிதரின் தீர்மானம்.
இனி நாம் கட்டுரைத் தலைப்புக்கு வரலாம்.
அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள்கடல் தாவிய அனுமன் அவளைக் கண்டு கணையாழி காட்டிசூடாமணி பெற்றுக் கொள்கிறான்திரும்பு காலில் இலங்கயின் பொழில் இறுத்துகிங்கரர் வதைத்துசம்புமாலி வதைத்துபஞ்ச சேனாதிபதிகள் வதைத்துஇராவணன் – மண்டோதரி ஆகியோரின் இரண்டாவது மகன்இந்திர சித்தனின் தம்பிஅக்க குமாரனை வதைத்துபின்பு இந்திர சித்தனின் பிரம்மாத்திரத்தால் கட்டுண்டுஇராவணன் முன் நிறுத்தப்பட்டுஅனுமனின் வாலில் பந்தம் கட்டி, தீ வைத்துத் துரத்துகிறார்கள்.
செய்தி அறிந்த சீதை, ‘எரியே அவனைச் சுடல்’ என்கிறாள்சீதையின் தொழுகையும் வேண்டுதலும் ஏற்று அக்கினி குளிர்கின்றதுஎந்தத் தீ எலாம் குளிர்ந்தன என்று கம்பன் பேசுவதன் மாதிரிக்கு ஒரு பாடல்கீழ் வருமாறு.

மற்று இனிப் பல என்வேலை வட அனல்புவிஅளாய

கற்றை வெங் கனலிமற்றைக் காயத் தீமுனிவர் காக்கும்

முற்றுறு மும்மைச் செந் தீமுப்புரம் முருங்கச் சுட்ட

கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும்,

குளிர்ந்த அன்றே.”

பாடலின் பொருள்கடல் நடுவே எழும் வடவ முகாக்கினியும்பூமியில் பொருந்திய தொகை தொகையான வெப்பம் கொண்ட நெருப்பும்அவை அல்லாது வானத்தில் அமைந்த நெருப்பும்முனிவர்கள் காத்து ஓம்பும் மூன்று வகை அக்கினிகளும்அசுரர்களின் முப்புரங்களையும் சுட்டு எரித்து அழித்த முக்கணானின் நெற்றிக் கண்ணின் நெருப்பும் குளிர்ந்து போயினஇனிப் பலப்பல சொல்ல என்ன இருக்கிறது?
பாடலும்பாடலின் பொருளும்கம்பனின் அதீதக் கற்பனையும் எல்லாம் இருக்கட்டும்இந்தப் பாடலில் என்னைக் கவர்ந்த சொல் வன்னிநெருப்புதீஅக்கினிகனல்அனல்அழல்தழல்தணல் யாவும் அறிந்த சொற்கள்எனினும் நாற்பதாண்டுகளாகக் கம்பன் பயிலும் எனக்குமுதன் முறையாகப் புத்தியில் சென்று தாக்கிய சொல் வன்னிஅதன் காரணமாகவே இந்தக் கட்டுரையும்.
அக்கினி எனும் தமிழ்ச் சொல்அக்னி எனும் வட சொல்லின் பிறப்பு என்பார்கள்அது போல வஹ்னி எனும் வட சொல்லேவன்னியின் மூலச் சொல் என்கிறார்கள்வஹ்னி எனும் சொல்லுக்கு நெருப்புஅக்னிஜீரண சக்தி என்று பொருள் தருகிறார்கள்வன்னி எனில் நெருப்பு என்று பொருள் தருகிறது பிங்கல நிகண்டுபிற அகராதிகள்வன்னி எனும் சொல்லுக்கு நெருப்பு என்று முதற்பொருள் தருகின்றனபிற பொருள்கள் – குதிரைவன்னி மரம்கொடு வேலிதணக்குவன்னியன்பிரம்மச்சாரிகிளி என்பன.
வன்னம் எனில் தங்கம் என்கிறது சங்க அகராதிஆக எனக்குத் தங்கத்தைச் சொல்லபொன்சுவர்ணம்கனகம்பொலன்வன்னம்சொக்கம்இரணியம் என வேறு சொற்களும் உண்டு.
சற்றுத் தேடியும் பார்த்தேன்வன்னி எனும் சொல்லைத் திருக்குறள் கையாளவில்லைபத்துப்பாட்டுஎட்டுத் தொகை நூல்களில் பதிற்றுப் பத்தும் புறநானூறும் வன்னி எனும் சொல்லை ஆண்டுள்ளனபதிற்றுப் பத்து வன்னி எனும் சொல்லை வன்னி மரம் என்ற பொருளில் பயன்படுத்துகிறதுபுற நானூற்றில்மாங்குடி கிழார் பாடல்தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது. ‘வன்னி அம் துடுப்பின்’ என்பது சொற்றொடர்வன்னிக் கம்பைக் காம்பாகக் கொண்ட அகப்பை என்று பொருள் சொல்கிறார்கள்.
சொல் சார்ந்த வேர்ச்சொல் ஐயங்களுக்குஎப்போதும் என் கையேடுபேராசிரியர் அருளியின் அயற்சொல் அகராதிஅருளி ஐயா தெளிவாகக் குறிப்பிடுகிறார்வன்னி<சமற்கிருதம், Vahni என்றுவன்னிக்கு அவர் தரும் பொருள்கள்நெருப்புகுதிரைகொடுவேலிதணக்குமாணாக்கன்கிளி என்பனதொடர்புடைய வேறு சில சொற்கள்அருளி பட்டியலிடுவதுவன்னி கர்ப்பம் – மூங்கில்வன்னிகை– எழுதுகோல்வன்னி பூ – முருகன்வன்னி போக்கியம் – நெய்வன்னி மாரகம்– நீர்வன்னி ரேதா– சிவன்வன்னி வகன் – காற்றுவன்னி வண்ணம்– செந்தாமரைசெவ்வாம்பல்வன்னி வீசம்– பொன்.
எவ்வாறாயினும் வன்னி என்ற சொல்லை எனக்கு நெருப்பு என்ற பொருளில் முதலில் அறிமுகம் செய்தவன் கம்பன்சற்றுக் கால தாமதமாகஅது கம்பன் பிழை அன்றுஅவரே சொல்வது போல, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை!’ வடமொழியில் இருந்து தற்பவம் அல்லது தற்சமம் என்று தொல்காப்பியம் வழி நடத்தும் இலக்கணங்களுக்கு உட்பட்டுகம்பன் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த சொற்கள் ஆயிரக்கணக்கில் உண்டுஅதிலொன்று வன்னி.
இறுதியாகநெஞ்சிருக்கும் வரை நினைவில் ஆடும் வன்னி எனும் சொல்ஈழத்து நிலப்பகுதி.
ஆம் வன்னிநெருப்பு!
https://solvanam.com/2017/05/வன்னி/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to வன்னி

  1. Devika kulasekaran சொல்கிறார்:

    Arpudham! Tamizh vaguppil amarndharp pondru irundhadhu!

  2. Gomathi சொல்கிறார்:

    Super Sir ,Very beautiful article .Tamils beauty is revealed in your article ,Thankyou ,You made my day ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s