கேரளம் பெருமிதத்துடன் பலாப்பழத்தை தனது அதிகாரப்பூர்வமான பழம் என்கிறது.
நாமும் சொல்லலாம் வாழையை.
ஆனால் அத்தகு யோசனைகள் தோன்ற நமக்கெல்லாம் நேரம் எங்கே?
வேண்டுமானால் பெரும்பாலும் பிரதான கட்சித் தலைவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்தின் பல்வகை மதுபானங்களை டாஸ்மாக் மூலம் விநியோகிக்கப்படுவதை நமது அதிகாரப்பூர்வமான பானம் என்பார்கள்.
மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் நமது அதிகாரப்பூர்வமான உணவு பரோட்டா என்பார்கள்,
சினிமா மட்டுமே அதிகாரப்பூர்வமான கலை என்றும்,
கிரிக்கெட் ஒன்றே அதிகாரப்பூர்வமாக விளையாட்டு என்றும்
இந்தி மட்டுமே அதிகாரப்பூர்வமான மொழி என்றும்,
இந்துக்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமான குடிமக்கள் என்றும் அறிவிக்கப்படும் காலம் வந்துட்டதோ என்று அச்சத்துடன் பல சமயம் யோசிக்க வேண்டிய சூழல் இருக்கிறது இன்று.


அரசியல்வாதியாக,
சமூக நீதிக் காவலனாக,
பண்பாட்டுச் சேவகனாக,
மொழிப்போர் வீரனாக ஆகும் முயற்சியில் இருந்தபோது
வீரதீரமான கொள்கைகளைத் தத்தெடுத்தனர்.
சில நூறு கோடிகள் தேற்றிய பின்னர்
அந்தக் கொள்கைகளைக் கொளுத்தி குளிக்க வெந்நீர் போட்டனர்.



அரிதினும் அரிதான தகவல்கள். நமது பகுதியில் விளைகின்ற பழங்களையே அறியாத அறியாமை என்னை உறுத்துகிறது.
I read every new post on this site. Good work Mr Balasubramanian !!!
Your article is sweeter than the jackfruit