வீட்டை அடுத்திருக்கும் ஆற்றங்கரை அல்லது கடற்கரையில்,
மரத்தடி நிழலில் உட்கார்ந்திருக்கிறாள்.
சுற்றிலும் மணல்வெளி.
கழக ஆட்சிகள் கால் பதியாத காலம், மணலும் நிறையவே இருந்தது.
கண்ணை மூடிக் கொள்கிறாள்.
ஆள்காட்டி விரலால் மணலில் வட்டம் வரந்து பார்க்க முனைகிறாள்.
வட்டம் கூடினால் காதலனைக் கூடுவேன்.
வட்டம் கூடாவிட்டால், நானும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று தனக்குத் தானே கற்பித்துக்கொண்டாள்..