’ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்’
கடல்போல் திரண்டுநின்று எலிப்பகை ஆரவாரம் செய்தாலும் என்ன நடந்துவிடும்?
ஒரு நாகம் சீற்றத்துடன் எழுந்து நின்றால் போதாதா?
இவை எல்லாம் நம் இலக்கியங்கள் பேசும் வீரத்தின் சில துளிகள்…
இன்று தேய்ந்த வீரத்தின் கவடாக இதையே மாறுபடப் பொருள்கொள்ள வேண்டி இருக்கிறது.
கோடிக்கணக்கான வாக்காள பெருமக்கள் எதிர் நின்று என்னதான் கூச்சல் போட்டாலும் என்ன நடந்துவிடும்?
நச்சுப் பாம்பு போன்ற குற்றப் பின்னணி கொண்ட கொள்ளைக்கார அரசியல்வாதி ஒருவன் முன்னால் எடுபடாது என்று!
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!