‘சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே,
நில்லென்று கூறி,
நிறுத்தி வழி போனாரே!’ என்கிறாள் ஒரு தலைவி.
இன்று அந்த சிக்கல்கள் இல்லை.
முகநூல் உண்டு, வாட்ஸ்- அப் உண்டு, இருபால் நண்பர்கள் இருக்கிறார்கள்.
தொலைக்காட்சி சேனல்கள் உண்டு, அவற்றில் இரவு 10 மணிக்குமேல்
‘ஒன்று போதும்; நின்று பேசும்’ என்று ஊக்க மாத்திரைகள் விற்கும் பாலியல் காட்சிகளும் பாடல்களும் ஒளிபரப்பும் யோக்கியர்களின் ஏகப்பட்ட சேனல்கள் உண்டு.
…… நாஞ்சில் நாடன்