கல்யாண பரிசு

15801441_1224386334277552_1169285013_n
நாஞ்சில் நாடன்
திருமண வீடுகளுக்குப் போனால், பரிசுப் பொருட்களை வாங்கித் தரும்படியோ, காசு-பணம்-துட்டு-மணி கவரில் போட்டுக் கொடுக்கும்படியோ நமக்கு வருமானம் போதாது.
பெரும்பாலும் நம்மைக் கல்யாணத்துக்கு அழைப்பவர்கள் நம் எழுத்தோடு அறிமுகம் உடையவர்கள். மேலும் ‘அம்பட்டன் குப்பையிலே அத்தனையும் மயிரே’ என்பதை போல, நம்மிடம் இருப்பவை புத்தகங்களே!
விலைமதிப்பற்ற நம் கையெழுத்து ஒன்றினைப் புத்தகத்தில் நாட்டி, மணமக்கள் பெயர் எழுதி வாழ்த்திக் கொடுத்துவிடுவதே சாத்தியம்.
அது என்னுடைய புத்தகமாகவோ, எமக்கு அன்பளிப்பாக வந்த இன்னொரு புத்தகமாகவோ அல்லது எந்தக் காலத்திலும் நாம் வாசிக்கப் புகாத நூலாகவோ இருக்கலாம்.
ஆனால் நம் கையெழுத்து என்ற தங்கத் தகடு பதிக்கப்பட்டபின் அதற்கு விலையேது, நிகரேது?
அடுத்த கட்டம் புத்தகத்தை Gift Pack செய்வது.
எனக்குத் தெரிந்தவரை, கவனமாகப் பொதியப்பட்ட பரிசுப்பொருளை எவரும் கவனமாகப் பிரிப்பதில்லை. அவசரகதியில் உறையைப் பிரித்துக் குப்பையில் கசக்கி எறிகிறார்கள்.
எந்தப் புத்தகமாயினும், ஆரம்பத்தில் வண்ணக்காகிதம் வாங்கி வந்து பொதிந்து, சிரமப்பட்டு செல்லோடேப் ஒட்டிக்கொடுப்பேன். தேர்ந்த பேக்கிங் தொழிலாளி ஆகிய அனுகூலம். பொதிகிறவனுக்குப் பத்து நிமிட வேலை, பிரிக்கிறவனுக்கு ஒரு நிமிட வேலை.
செலவும் காலவிரயமும் கருதி, விஜயா பதிப்பகத்தில் புத்தகம் வாங்கும்போது புத்தகம் போட்டுக்கொடுக்கும் காக்கி நிறக் காகித உறையைச் சேமித்து வைத்து மறு உபயோகம் செய்துகொள்வேன்.
இலகுவாக, உறையின் வாய்ப்பகுதியில் ஒரு டேப் ஒட்டினால் போதும் கட்டச் சுலபம், பிரிக்க எளிது. சுற்றுச் சூழல் கேடும் இல்லை.
சிக்கன நடவடிக்கைகள் நடவடிக்கைகள் அனைத்துமே, கற்றுச் சூழல் பாதுகாப்பின்தொடக்கப் புள்ளி போலும்.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கல்யாண கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s