விமான தளத்தில்
இரயில் நிலையத்தில்
பேரூந்து முனையத்தில்
தலமைச் செயலகத்தில்
ஆட்சியர் வளாகத்தில்
தலைவர் வீட்டில்
காவல் நிலையத்தில்
நீதி மன்றத்தில்
சாலை சிக்னலில்
கோயில் முன்றிலில்
மருத்துவமனையில்
மின் மயானத்தில்
டாஸ்மாக் கடையில்
உணவு விடுதியில்
கொட்டகை வாசலில்
ரேஷன் கடையில்
ஏ.டி.எம் வரிசையில்
எப்போதும் ஒரு கூட்டம்
காத்துக்கிடக்கிறது
வாழ்நாளில் ஒரு பகுதி.
(………..நாஞ்சில் நாடன்)
கணையாழி பிப்ரவரி 2017

Patna: People queue up at an ATM in Patna on Saturday. PTI photo(PTI11_12_2016_000101B)