ஆள் பார்த்து, சாதி பார்த்து, அரசியல் செல்வாக்கு பார்த்து, பெரிய இடத்து சிபாரிசு பிடித்து பரிசு வாங்கிக் கொண்டு போகும் இலக்கிய சூழலில், அப்துல் ரஹ்மான் அங்கீகாரம் வேண்டி சொன்ன சொல் மிக முக்கியமானது. ”எங்களுக்கு பொற்கிழி வேண்டாம், ஒரு பூ கொடுங்கள் போதும்”
விழா முடிந்ததும் அவரைத் தேடிப்போய் வணங்கினேன். அன்புடன் தோளில் தட்டிக் கொடுத்து பேசினார். மனதில் நூறு பூக்கள் மலர்ந்தன எனக்கு.
கவிக்கோ அப்துல் ரஹ்மான் இழப்பு மிகுந்த மனவருத்தம் கவிக்கோ
கவிக்கோ அவர்களின் நிறைய கவிதைகள் கட்டுரைகள் நான் படித்துள்ளேன் , அவருடன் நேரடி பரிச்சயம் எதுவும் இதுவரை இல்லை , அவருடைய படைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும் , என் மனதுக்கு பிடித்த படைப்பாளிகளில் அவரும் ஒருவர். கவிக்கோ அப்துல் ரஹ்மான் இழப்பு மிகுந்த மனவருத்தத்தை தருகிறது
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கட்டளைக் கலித்துறை என
கணக்கிலடங்கா பேரில்
கட்டிலடங்கா சீரில்
கண்ணைக் கட்டுமாறு
கட்டப் பெற்று …
வாய் அறியா
வார்த்தைகள் பொதிந்து
மூப்பெய்திய சீமாட்டியாய்
மூச்சு முட்டப் பெற்று …
மரபுக் கவிதைகள்
மதம் கொண்டு ஆள்கையில்
மீட்பவன் அறியாது
மீள்கையில்
“இலக்கண வரம்புகளை
இடம் அறிந்து பெயர்
இரண்டு வரிகளில்
இதம் தந்து உயர் ” என
இயம்பி
வாணிபம் தேடி
வாணியம்பாடி போன கவிதை
அந்தகனின் வரவால்
அல்லாவிடம் விரைந்து விட்டது !
அனல் காற்றில் கரைந்து விட்டது !!
சிந்தனைச் சிதறல்களாய்
“சிறகுகளின் நேரம்” தந்து
சிக்க வைத்தார் !
விறகுகளின் நேரம் வர
விசனத்தில் சனங்களை
விக்க வைத்தார் !
சங்கு சாமி பற்றிய
“கிருஷ்ண விஜயம்” முதல்
லிங்குசாமியின்
“செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம் ” வரை
“எண்ணங்களைச் சொல்ல
எதுகை எதற்கு ?
மோனத்தை சொல்ல
மோனை எதற்கு ?
காட்டுக் குதிரைக்கு ஜாக்கியா ?”
என கிரியா ஊக்கியாய்
கவிதையின் பாதையை
கச்சிதமாய் செப்பனிட்டவர்
கவிக்கோ !
“ஹைக்கூ”வின் பெருமையை
அழியா எழுத்தில்
அவர் அன்றி
அடிகோல வருமோ
அண்டத்தில் எந்த கவிக்கோ ?